Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

தொலைதூர நட்பு கவிதைகள் - Long Distance Friendship Quotes in Tamil 2024

தொலைதூர நட்பு கவிதைகள் - Long Distance Friendship Quotes in Tamil

Distance Friendship Quotes in Tamil

Distance Friendship Kavithai

-

நண்பர்கள், எங்கோ ஓர் முறை சந்தித்து கொண்டாலும், நெடுந்தூர பாதை எங்கும் ஒன்றுக்கொன்று துணையாய் பாரங்கள் பகிர்ந்து, தனிமைகள் தவிர்த்து, தடைகள் ஒன்றாய் கடந்து வாழ்கையின் பயணம் சிறக்க செய்கின்றன! தண்டவாளங்கள் - நல்ல நண்பர்கள்.

-

தூரத்து சொந்தம் என்பது போல தூரத்து நண்பன் என்று இல்லை! ஏனெனில், நண்பான பின் யாரும் தூரமில்லை...

-

நட்பு நினைவுகள் கவிதை

-

போடாதசண்டையில்லை! பேசாத நியாயமில்லை ! சிரிப்புக்கோ பஞ்சமில்லை! கூற முடியாத மன வலியும், புரிந்து கொள்ளும் என் மனக் கண்ணாடி அவன்! மகிழ்ச்சியாக இருப்பினும், துயரக்கடலாக இருப்பினும், மனம் தேடுவதற்கு முன் என்னருகில் இருப்பான் எந்தன் தோழன்!

-

பல நாட்களுக்கு ஒரு முறை பேசினாலும், நண்பனின் பட்டப்பெயர் தான் முதலில் ஞாபகத்தில் வருகிறது!

-

காற்று அடித்தால் கலைந்து போக- இது ஒன்றும் மேகம் அல்ல! காரணம் இல்லாமல் மறைந்து போக- இது ஒன்றும் கனவும் அல்ல! அருகில் சென்று பார்த்தால் காணாமல் போகும் கானல் நீர் அல்ல! நம் உயிர் கல்லறை செல்லும் வரை தொடரும் உண்மையான நட்பு!

-

நட்பு தூரம் கவிதை

-

நண்பர்களோடு இருக்கும் போது சுற்றத்தை மறந்து, சிரிப்பின் எல்லை வரைக்கும் சென்று, அளவில்லாத மகிழ்வான தருணங்களை கொடுத்த நண்பர்களை நினைத்து விழி ஓரம் கண்ணீர் கசிகிறது!

-

எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் இதழோர புன்னகை, நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!

-

மட்காத குப்பைகளை சேகரிக்க, ஆசை கொள்ளும் குப்பை தொட்டி நட்பு நினைவாக!

-

காலங்கள் கடந்தாலும், தூரங்கள் நீண்டாலும், எக்காலத்தும் அழியாதது, நட்பு மட்டுமே!

-

Friendship Distance Quotes Tamil Images

-

சேர்ந்த போதும் மறுக்காத, பிரிந்த போதும் மறக்காத, மகத்தான உறவுதான் நட்பு!

-

இலை மரத்தை மறந்து போகலாம்! அலை கடலை மறந்து போகலாம்! பூக்கள் தேனீக்களை மறந்து போகலாம்! ஏன் நீயே என்னை மறந்து போகலாம்! ஆனால் நானோ உன்னை மறப்பதில்லை என் அன்புத் தோழனே!

-

நட்பின் நினைவுகள் கவிதைகள்

-


Close