191+ பெண்ணின் அழகை வர்ணிக்கும் கவிதைகள் - Quotes for Beauty of Her in Tamil 2025
Quotes for Beauty of Her in Tamil
அழகு தேவதை Quotes
உன் கண்ணக்குழிக்கும், வெக்கத்திற்கும் தொடர்பு உண்டு! அதில் தொலைந்து போனவர்கள் ஆயிரம் உண்டு!
ஆயிரம் ஆண்கள் இருக்கும் கூட்டத்தில் உன்னை வர்ணித்தால், அது அழகல்ல! ஆயிரம் பெண்கள் இருந்தும், அக்கூட்டத்தில் உன்னை வர்ணித்தால், அது அழகு!
-
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் அழிந்ததடி... என் கர்வம் அழிந்ததடி!
அவள் பூக்காரரிடம் பூ வாங்கும் பொழுது, இரும்பு தராசுகூட அளவை மீறி சாய்கிறது அவள்பக்கம், நானெல்லாம் எம்மாத்திரம்?
-
நான் கவிதை எழுத முயற்சித்தால், உன் விழிகள், இதழ்கள் என்னை மயக்கிய உன் அங்கங்கள் எல்லாம், என் மண்டைக்குள் வந்து போகிறது!
-
உன் கூந்தலில் குடியேறவே காத்து கிடக்கின்றன, இந்த ரோஜா மலர்கள்!
மருதாணியின் கன்னங்கள் சிவக்கும், மஞ்சள் உன்னை பூசிக்கொள்ளும், குங்குமமும் குலுங்கி சிரிக்கும், தொட்டால் சிணுங்கியும் சிணுங்கும், பெண்மையின் பிறப்பிடமான உன்னைக் கண்டால்!
-
யாரும் அவளளவுக்கு அழகாகவும் இல்லை, அவளளவுக்கு, அளவாகவும் இல்லை!
வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் தன் இருப்பிடத்தை மாற்றியமைத்து விட்டதோ என நினைக்க தோன்றுகிறது உந்தன் கன்னத்தில் மின்னும் பருக்களை காண்கையில்!
-
இவ்வுலகில் ரசிப்பதற்கு ஆயிரம் இருந்தாலும், நான் ரசித்தது உன்னுடன் உறவாடிய நாட்களைத் தான்!
உன்னை பற்றி கவிதை எழுத தமிழில் எழுத்துக்கள் எனக்கு போதவில்லை பெண்ணே!
-
நீ சேலைகட்டிய அழகில், பட்டும் பாட்டு பாடும், கதிரும் கைதட்டி இரசிக்கும்! சேலைக்கட்டி நடந்து வரும் சோலையே!
வாரிமுடிந்த கூந்தலும், வளைந்திருக்கும் புருவமும், எமனின் ஆயுதமோ என்று எண்ணினேன்! ஆனால், என்னை ஆட்டிப் படைக்கும் உன்னுடையது!-
அழகான அவளை மேலும் அழகுப்படுத்த அவர்கள் தவறாமல் வந்துவிடுகிறார்கள் - முகப்பருக்கள்!
உன்னைக் கண்டவுடன் புரிந்தேன் நீ என்னவள் என்று! ஆனால் நீ, என்னைக் கண்டவுடன் திரும்பிக் கொண்டாய், எவனோ என்று!-
வானிலையில் மாற்றம்! வானமெங்கும் மேகமூட்டம்! காரணம், கண்முன்னே உந்தன் தோற்றம்!
-
என்னவளின் பேச்சு சர்க்கரை பாகோ? பேச பேச இனிமை கூடுது... அதிகம் ருசித்துவிட்டேன் அன்பே! உடம்பில் சர்க்கரை கூடுமென சிறிதே மறந்துவிட்டேன்!
-
அளவுக்கதிகமான அலங்காரம், அரைகுறை ஆடை தவிர்த்து அம்சமான ஒப்பனையில், அழகான உடையின் நேர்த்தியில், பெண்! 'அவள்' உலக அழகியே!
-
பிரம்மனும் பிரமித்தான் அவளை கண்டு! தன் படைப்பில் இப்படியொரு அதிசயமா என்று!
காந்த துருவங்களும் தோற்றுப்போகும், உன் புருவங்களின் மத்தியில்!
புதுக்கவிதை புனைகிறாள் நந்தவனக் கிளியவள், புன்னகை என்னும் தன் அழகு மொழியால்!
குளத்து மீன்கள் வந்திருக்கின்றன, பெண் அழகைக் காண...கரையில் நீ!
அவள் என்பதே ஆகச்சிறந்த போதை என்பேன்! அந்த பேதையே, என் போதை!
மைபூசி கண்களுக்கு பொய் சொல்ல கற்றுக்கொடுக்கிறாள், என்னவள்!
நிலவே, கொஞ்சம் நில்லு! இன்னும் அவளைக் காணவில்லை! அவள் வந்தபிறகு நீ இருக்க வேண்டிய அவசியமில்லை!
அவள் கண்களில் மை பூசி, என் மேல் காதல் மை வைத்துவிட்டாள்!
வார்த்தையில் அடங்காத எந்தன் வர்ணனையே, உன்னை வர்ணிக்க முடியாத கம்பன் நான் தானே!
உன்மீது விழத்தானே அசைந்தாடும் காற்றிலும் விழாமல் நிற்கின்றன, மலர்கள்!
மண்ணில் வீழ்ந்து புதைந்து போனாலும், மங்கை அவளை பார்ப்பதற்கு மறுபிறவி எடுக்க வேண்டுமோ?
என்னை கொலை செய்யும் ஆயுதம், அவள் பூசும் கருப்பு சாயம்! கண்ணெதிரே தீட்டுகிறாள் என் கண்ணழகி!
ஏதோ ஒரு தருணத்தில் பெண்களிடம் எட்டிப்பார்க்கும் குழந்தைத்தனமும் பேரழகே!
பூந்தோட்டம் கூட துள்ளி குதிக்கிறது, என்னவள் தோட்டத்தை கடக்கும்போது!
என் பேனாவரிகள் திணறி நின்ற தருணம், உன்னை கண்டபோது ஒரு கவிதைக்கு கவிதை எப்படி எழுதுவது என்று!
பால் குழப்பி செய்த சிலை, பார்வையோ தனி கலை! பார்த்ததில் மனம் பித்தநிலை! பாவை காவியத்திற்கு ஏது விலை?
அம்மலர்கள், அம்மொட்டுகளிடம் சொல்ல கூடும், மலர்வதெப்படி என்று!
காகிதப் பூவிற்கும் காதல் வரும், நீ சூடினால்!
நீ கோலமிடும் அழகில் மயங்கியது நானா? இல்லை கோலமா?
பருக்களிடம் போராடி துவண்டுவிட்டாள்; அந்த பருக்களும் அவளை காதலுக்கு அழைப்பதால்!
உயிருடன் வாழும் கத்திரியே, எனக்கென்று பிறந்த முந்திரியே, உயரத்தில் உனக்குகீழ் எவருமில்லை, இருப்பினும் உன் குறும்பிற்கு குறைவில்லை!
ஒப்பனையின் பின் ஒளிந்த உன் அழகை கண்டு, என்கற்பனையும் களைந்தது! இயற்கையின் அதிசய அழகுகொண்ட உன் முகத்தை மறைப்பது நியாயமா?
தயவுசெய்து பூந்தோட்டத்திற்கு மட்டும் சென்றுவிடாதே! பூ என நினைத்து யாரும் பறித்துச் சென்று விடப்போகிறார்கள்!
என்னவள் அழகை நிலவோடு ஒப்பிட வேண்டாம்! நிலையில்லா அழகெல்லாம் அவள் நிலையான அழகிற்கு ஈடாகுமா?
நீ புத்தகத்தைத் திறந்து வைத்திருக்கிறாய்! அது பக்கம் பக்கமாய் படிக்கிறது, உனதழகை!
உலகின் அழகில் அவள் ஒன்றும், அவள் விழியிரண்டும் இன்றியமையாதது!
பூக்களும் பெருமைப் படுகிறது, நறுமணம் மிகுந்த என்னவளின் கூந்தலில் சூடிய பிறகு!
மருதாணி சிவந்தது, என்னவள் விரல் பட்டு!
உன் மழலைச் சிரிப்பில், சற்று என்னையே மறந்து போனேன்!
மயங்கித்தான் போகிறது, உன் மயக்கும் விழிப்பார்வையிலே! மதி கெட்டு பெண் உன்னாலே, இந்த மானம்கெட்ட மனது!
காற்றே காதல் வயப்படும், அவள் முச்சுகாற்றை சுவாசித்தால்!
அவள் கார் குழல் கலைந்ததில் விடிந்தது, என் மாலை!
காற்றோடு கை வீசி, கண்ணாலே கதை பேசி, மிளிரும் அழகு தேராக இவ் வீதியில் வருவது, அந் நிலவின் மகளோ?
உன்னுடைய சிரிப்பு சத்தம் ஏனோ, எனக்கு மட்டும் மெல்லிசையாய் ஒலிக்கிறது!
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு, என்னவள் எனக்கழகு!
பூக்களெல்லாம் உன் மீது வழக்கு தொடுக்க நீதி மன்றம் செல்கின்றனவாம்! வண்ணத்துப் பூச்சிகள் தேனருந்த உன் உதடுகளுக்கு வந்துவிடுமோ என்று அஞ்சுவதால்!
அழகும் கண்ணீர் வடிக்கும் உன் அழகை பார்த்தால்😍😍😍
நங்கையை கண்டு நாணத்தில் சிவந்தாயோ, என் ஆதவனே!
சேலையினால் என் விழிகளை மறைத்தவளே, ஜென்மம் ஒன்று எடுத்தாலும் போதாதே, அழகை கண்டு என் மனம் தாங்காதே!
உன்னிடம் மயங்கித் தோற்கிறேனடி நீ வைக்கும் மருதாணி சிவப்பைக் கண்டு அல்ல! அதை பார்த்து சிவந்த, உன் கன்ன சிவப்பைக் கண்டு!
அவள் கை பட்டதால், வெட்கத்தில் சிவந்தன மருதாணிகள்!
என் சங்கத்தமிழும் தடுமாறுதடி, உன் அங்கவளைவுகளை வர்ணிக்க முடியாமல்...
பத்து கோடி கொடுத்து ஏலத்தில் எடுப்பேன், அவள் முகத்தை வரைந்தப் பென்சிலை!
அவளை வர்ணிக்க ஆயிரம் வார்த்தைகள் இருந்தும், வர்ணிக்க முடியவில்லை அவளின் கண்களை பார்த்து!
ஆயிரம் பேர் ஆயிரம் கூறினாலும், ஆயிரத்தி ஒன்றாக நான் கூறுவேன், "இவள் என்னவள்" என்று!
கற்பனை நிறைந்த இரவுகள் கவிஞனின் வானில் கவிதைகளாக பிரகாசிக்கும்!
மறைப்பதற்கு மெனக்கெடாத போதெல்லாம், அவள் ரெட்டிப்பு அழகு!
நிலவின் ஒளியில் நீ நடந்தால், கிழக்கும் சிவக்கும் தன்னாலே! தானாகவே என் மனமும் கவி பாடும், நீ சிரிக்கும் அழகை வர்ணித்து!
இவள் என்ன கடல் தேவதையோ? என் இதயக் கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறாள்!
பிரம்மன் படைப்பில் குறை ஒன்றுமில்லை! அழகை அவளுக்கு கொடுத்து விட்டு, அலைவதை எனக்கு கொடுத்து விட்டானே!
அத்தனை முறை ஒதுக்கப்பட்டும், அவளை அழகாய் காட்டாமல் இருக்க முடியவில்லை; காதருகில் அமர்ந்து, உண்ணாவிரதத்தை முடிக்கிறது அந்த ஒற்றை முடி!
கன்னித்தீவைப் போல் முடிவடையாமல் செல்கிறது அவள் தோடின் தீண்டல்கள்!
என்னவளின் கரம் பிடித்து காதல் செய்தபடி கதைத்துக்கொண்டே செல்லும் நெடுந்தூர நடைப்பயணம் என் வலிகளுக்கு மருந்தாகிறது!
என் பிம்பம் கூட எதிரியாகி, உன் வசம் ஆனதடி! என் கண்ணாடி திரையினிலும் பெண்ணே, உன் முகமடி?
அள்ளி முடியா அவள் கூந்தல் முடி, நேற்றியோடு தவழும் நொடி, சொல்லி முடியா என் சொற்றொடர் கவி சொற்களின்றி நிற்குதடி!
அவளின் அழகு கடலின் வெள்ளை அலை போலும், மாறாதது.
அவளின் அழகு கடல் எழும்பின் போல, எல்லா பக்கமும் கலந்த பிரகாசமாக இருக்கிறது.
▶️ காதலியின் அழகு கவிதை
▶️ முக அழகு கவிதைகள்
▶️ காதலியை வர்ணிக்கும் கவிதை
▶️ பெண்ணின் அழகு கவிதைகள்
▶️ அழகிய தேவதை கவிதை
▶️ பெண் அழகு வர்ணனை
Post a Comment