101+ கண்கள் கவிதைகள் - Eyes Quotes in Tamil 2025
கண்கள் பற்றிய கவிதைகள்! - Kavithai about Eyes in Tamil
கண்கள் கவிதைகள்
உன் கண்களைக் கண்டு கவி எழுத விரலெடுக்க, கடைசியில் உன் கண்களே கவிதையென எழுதி முடித்தன எனது விரல்கள்...
கண்கள் வெறும் பார்க்க மட்டும் என்று நினைத்தேன் , உன்னை பார்த்த பிறகு தான் அதன் அருமையை உணர்ந்தேன்!
Eyes Kavithai
அவள் கண்கள் இரண்டும் நான் காணும் அதிசயமே!
கண்கள் கவிதை வரிகள்
இது கனவா, இல்லை நினைவா? என்று கிள்ளிப் பார்த்தேன்; உன் கண்களை பார்த்து நான் உறைந்த நிமிடத்தை!
இவ்வுலகம் இருண்ட பின்னும், இருளாத பாகம் எது? கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி!
Read Also : வெட்கம் கவிதைகள் | Vetkam Quotes in Tamil
உன் தீப்பெட்டி கண்ணால என்னை கொன்னாயே!
காந்த கண்கள் கவிதை
உன் கண்களில் அலைவது கருவிழியா? இல்லை காந்தமா? கவருதடி என் மனதை - அது கதியற்று உன் பின் அலையுதடி!
அவள் கண்கள்
அடர்ந்த வனத்தில் மின்மினிப்பூச்சி போல் பளிச்சுப் பளிச்சென்று பிரகாசிக்கும் அவள் கண்கள், மதியின் ஒளியில் ஒளி வீசும் அவள் காதல்!
Kangal Kavithai
அழகே உனது கண்களே கவிதை எழுதும் போது,
உனது கைகளுக்கு என்ன வேலை?
Read Also : கொலுசு கவிதைகள் | Kolusu Kavithai in Tamil
களவாடினாள், என் காதலை முழுவதுமாய், அவள் கண்களினாள்.
ஆயுத பூஜை கொண்டாடுகிறேன், என்னைத் தாக்கும் ஆயுதமாய், அவள் கண்கள்!
கண்கள் ஆயுதம்
மின்னல்கள் தாக்கினாலும் மீண்டிடுவேன் போலும், உன் கண்கள் தாக்கியதிலிருந்து மீளவில்லை நானும்!
அவன் கண்கள்
உன் கண்களை, என் கண்கள் கண்டவுடன், உன் கண்கள், என் கண்களின் கண் சிமிட்டும் தன்மையை கொள்ளை அடித்துவிட்டது, என் கண்ணே!
உன் கண்கள் செய்த மாயம், காயம் ஆனது என் இதயம்!
அவனின் கண்கள் இரண்டும், எப்பொழுதும் மாறாத அன்பின் மெளன மொழிகள்!
என் கண்களும் நீ... அதில் தோன்றும் கனவுகளும் நீ... என் இதயமும் நீ... அதில் தோன்றும் எண்ணங்களும் நீ!
கண்ணாடி கதவுகளுக்கு பின், இரு விண் மீன்கள் இங்கும் அங்கும் நீந்திக் கொண்டு, எதையோ தேடுகிறது!
அழகிய கண்கள்
மாஸ்க் போட்டு மறைத்து இருந்தும், உன் அழகை காட்டிக் கொடுத்துவிடுகிறது, உன் கண்கள்!
கண்கள் அழகு கவிதை
காதலுக்கு கண்கள் இல்லாமல் போயிருக்கலாம், உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்!
Read Also : மச்சம் கவிதைகள் | Quotes about Moles in Tamil
உன் கண்கள் என்ன ராட்சஷ பறவையா? என்னையே கொண்டுசெல்கிறது உன் பின்னால்!
என் காதல் கேள்விக்கு உன் கண்கள் தான் பதில் சொல்ல வேண்டும் சகியே!
ஒவ்வொரு முறையும் பார்த்துவிட்டு போகலாம் என்றுதான் நினைக்கிறேன்! பார்த்துவிட்டால் போகத்தான் முடிவதில்லை... காரணம், பார்த்தால் பார்த்து கொண்டே இருக்கச் சொல்லும் உன் கண்கள்!
மையிட்ட கண்கள்
அவள் கண்களில் மை பூசி, என் மேல் காதல் மை வைத்துவிட்டாள்!
மைபூசி கண்களுக்கு பொய் சொல்ல கற்றுக்கொடுக்கிறாள், என்னவள்!
கண்கள் கவிதை SMS
உன் கண்ணைக் கண்டு காதல் கொண்டேன்! நீ கண் சிமிட்டும் ஒவ்வொரு நொடியிலும், செத்து செத்து பிழைக்கிறேன்!
சிறு கண்ணசைவில் அத்தனை செய்திகளையும் கடத்தி விடுகிறாய்! வார்த்தைகள் தான் பாவம், முகக் கவசம் அணிந்து ஊமையாகிக் கிடக்கிறது!
பெண்ணே, உன் கண்களைக் கண்ட கணம் என் கவனம் சிதறிப் போனது! என் காகிதம் எல்லாம் கவிதையானது!
முட்ட கண்ணு கவிதை
அகிம்சை ஆயுதங்கள்! உலகின் ஆகச்சிறந்த போதை! இழுத்து துடிக்க விடும் தூண்டில்! கண்கள்தான் காதல்!
பட்டம் எதுவும் பெறாமலே ஆசிரியர் ஆனாய் நீ! காதல் என்னும் பாடத்தை உன் கண்கள் மூலம் கற்பித்ததால்!
விழிகள் கவிதை
தேடி தேடி உந்தன் விழிகளைக் காண்கிறேன், அதில் தொலைந்து போவதற்கு!
கருவிழிகள் கவிதை
உலக போதனைகளில் முதல் தரமானது அவள் கண்களின் கருவிகள் - காரணம் கண்களை கண்டாலே மயங்குவர்!
அது என்ன அப்படி ஒரு கருமை? உன் ஆடையில் அல்ல... கண்ணீர் சுமந்த, அந்த கரு விழிகளில்!
அமாவாசை அன்று நிலவு எப்படி இருக்கும் என்பதை உன் கருவிழியில் தான் நான் கண்டேன்!
Read Also : பெண் பாதம் வர்ணணை கவிதைகள்
கனவிலும் அவளின் கருவிழிகள் என் இதயத்தை களவாடத் தவறுவதில்லை!
இரட்டை விழிகள் கவிதை
எத்தனை முறை பார்த்தாலும், முதல் முறை போலவே போதை ஏற்றுகிறது உந்தன் இரட்டைவிழிகள்!
அமாவாசையை பௌர்ணமி விழுங்கியது, அவள் இரு விழிகளில்!
மைவிழி கவிதை
அவள் மை இட்ட கருவிழிகளில் மையம் கொண்டது, என் நெஞ்சம்!
கண்மையும் மோட்சம் பெற்றது, அவள் விழியிட்ட பின்பு!
அரிச்சந்திரன் ஆனது அவள் விழிகள்! மை பேசுவது மறந்து, மெய் பேசுகிறது!
உன் மையிட்டவிழிகள் என்ன மைக்ராஸ்கோப்பா? இப்படி என்னை உற்று நோக்குகின்றன!
மயங்காத மாந்தர் உண்டோ? மங்கை அவள் மையிட்ட கயல்விழி கண்டு!
கயல்விழி | மீன் கண்கள் கவிதை
அவள் மெளனங்களை மொழி பெயர்த்தால், காவியம் பல படைத்திருப்பர். என் கவிதை பட்டியல் காணாமல் சென்றிருக்கும் - அவள் கயல் விழிகளில் - இருந்து!
மயங்காத மாந்தர் உண்டோ? மங்கை அவள் மையிட்ட கயல்விழி கண்டு!
உன் இரு விழிகள் கவிதை
அமாவாசையை பௌர்ணமி விழுங்கியது, அவள் இரு விழிகளில்!
யாரும் அறியா அழகிய நிலவின் அறியாத பின்புறம் கருமையும் வெண்மையுமாய்... நான் கண்ட புதுமை விசித்திரமாய் உன் விழிகளிலே!
அசைந்த உன் விழிகளில், அசையா பல ஓவியங்கள் காண்கிறேன் கண்ணம்மா!
அவள் விழிகள் கவிதை
எழுத நினைத்த வரிகளை மறந்து ஏதுமறியா மூடனானேன், பாவை அவள் விழிகள் பாவி என்னைத் தீண்டியதால்!
உன் விழியில் என்னுலகம் காண்கிறேன்! என் மகிழ்ச்சியை நிர்ணயிப்பது உன் விழிகளின் வரிகளல்லவா...
அவன் விழிகள் கவிதை
விழி மொழி கவிதை
வாய்மொழியின் அர்த்தங்களை விட, விழி மொழியின் வார்த்தைகள் அழகு!
அவள் களவாடும் கண்களும், களைந்தாடும் கூந்தலும், மின்சார மொழிகள் எனக்கு!
விழி பேசும் மொழியறியாவிட்டால், பிறகு என்னடி காதலன்? உன் விழி பார்க்கும் நாள் வரை, என் காதலுக்கு தோல்வி என்பது இல்லை!
உன் விழி பேசும் மொழி கண்டு, நான் பேசும் மொழி மறந்தேன்!
அவள் விழி பேசும் மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, ஜி.யு.போப்பிற்கும் விழி பிதுங்கும்!
விழி பேசும் கள்ளத்தனங்கள் கற்றுக்கொள்ளவே ஆசை, காதலாய் உன்னிடம் வம்பிழுக்க!
என் பேனாக்கள் காகிதத்திடம் பேச முடியாத காதலை, அவை மொழிகள் இன்றி அழகாய் பேசிச் செல்கின்றன!
கண் இமை கவிதை
இமைக்காமல் பார்த்த சந்திப்பில், என் இமைகள் இரண்டும் உன்னை படம் பிடித்து, இதயத்திலே இனிமையாய், பதிவு செய்துகொண்டது!
புருவம் கவிதை
உன் கண்ணின் மேல் இருக்கும் புருவம், எனக்கு வானவில்லை நினைவுபடுத்துகிறது!
இமைகள் கவிதை
விழிகளில் ஒரு வானவில், இமைகளை தொட்டு பேசுதே... இது என்ன புது வானிலை!
இதயம் பேசுவதற்கு, இதழ்கள் தேவையில்லை இமைகள் போதும்.
Post a Comment