NEW 2025 பொங்கல் வாழ்த்துக்கள் - Happy Pongal Wishes in Tamil
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதைகள் - 20224 Happy Pongal Wishes in Tamil
தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; தலைகள் நிமிரும்; நிலைகள் உயரும்; நினைவுகள் நிஜமாகும்; கதிரவன் விழிகள் நல்ல விடியலை கொடுக்கும்; அவலங்கள் அகலும்! இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
சந்தோஷமும் செல்வமும் நம் வாழ்வில் பொங்கி வர, சாதி மத பேதமின்றி, சங்கடங்கள் ஏதுமின்றி, கை கூப்பி வரவேற்போம் தை பொங்கல் திருநாளை! இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கல் பொங்கியது போல், இன்பம் பொங்கட்டும்! பொங்கல் பொங்கியதும் தீ அனைந்தது போல், தீமை ஒழியட்டும்!
இன்பம் பொங்கி, துன்பம் அணையட்டும்! இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
உலகத் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும், உழவர் திருநாளான பொங்கல் திருநாளில் மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, அமைதி மேலோங்க, எல்லாமும் எப்பொழுதும் பெற்று வாழ, இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!
மஞ்சள் கொத்தோடு, மாமரத்து இலையோடு, இஞ்சித் தண்டோடு, எறும்பூரும் கரும்போடு, வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க, பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது! பொங்கல் வாழ்த்துக்கள்!
அறுவடைத் திருநாள்
பொங்கல் நன்னாளில்
தமிழர்கள் வாழ்வில்
அன்பும் அமைதியும்
நலமும் வளமும் பெருகட்டும்
தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
இனிக்கட்டும் இனிய
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்
வறட்சி நீங்கி செழிப்பு பொங்கட்டும்
அறியாமை அகன்று அறிவு
பொங்கட்டும் அனைத்தும் பொங்க
இனிய பொங்கல் வாழ்த்துகள்
வியர்வையை மண்ணுக்கு உரமாக்கி
வெயில் மழை பாராமல் பாடுபட்டு
விளைத்தெடுத்த நெல்மணிகளை
புதுப்பானையில் போட்டு பொங்கலிட்டு
பொங்கலோ பொங்கலென்று
அனைவரும் சேர்ந்து கூறிடுவோம்
வான்பொழிந்து சூரியஒளி அளித்து
மண் சுமக்க கரும்பு இனிக்க
இயற்கை தந்த பரிசு புன்னகை
மட்டுமே பெரிது இல்லம் தோரும்
பொங்கட்டும் பொங்கலில் இருந்து
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
பொங்கலோடு வளமும்
நலமும் செல்வமும்
மகிழ்ச்சியும் பொங்கிட
நல்வாழ்த்துக்கள்
கை கட்டி வேலை செய்யும்
படிப்பாளியை விட கை
கட்டாமல் வேலை செய்யும்
படைப்பாளி சிறந்தவன்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
பொங்கி வழியும் பொங்கலைப்
போல உங்கள் வாழ்வில்
வெற்றியும் மகிழ்ச்சியும்
பொங்கி பொங்கி வழிந்திட
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
நாம் பணம் சம்பாதிக்க
ஆயிரம் வழிகள் இருக்கலாம்
ஆனால் நமக்கு வேண்டிய
உணவை சம்பாதிக்க ஒரு
விவசாயியால் மட்டுமே முடியும்
விவசாயம் காப்போம்!
விவசாயியை காப்போம்!
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
உறவுகளின் புன்னகை
வீட்டில் பொங்க
இனம் புரியா இன்பம்
மனதில் பொங்க நண்பர்கள்
சூழ மகிழ்ச்சி பொங்க
பொங்கட்டும் தை பொங்கல்
உழவனை போற்றிட
பிறக்குது ஒரு திருநாள்
ஆதவனை போற்றிட
உதிக்கிறது ஒரு திருநாள்
மாட்டினை போற்றிட
துள்ளி வருகுது ஒரு திருநாள்
உலக மக்கள் கூடி
ஒன்றிணைய வருகிறது
பொங்கல் திருநாள்
பானை பொங்கி
மகிழ்ச்சி பொங்க
பொங்கல் வருது…!
பொங்கலோ…! பொங்கல்…!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
அன்பும் ஆசையும் பொங்க
இன்பமும் இனிமையும் பொங்க
உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்
இனியவை உங்கள் கரங்களில்
சேரட்டும் இனிதொரு நாளிலிருந்து
இனிய தைபொங்கல் நல்வாழ்த்துகள்
பகைமையை விட்டுவிட்டு
அன்பை அனைவரிடமும்
பரப்புவோம். இனிய
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
எனது அன்பிற்குரிய தமிழகமக்கள்
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
உலக பொங்கல் உழவன் பொங்கல்
விடியல் பொங்கல் காணும் பொங்கல்
போகட்டும் போகியின் மாலை
தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்
நம்மை வாழ வைக்கும் தமிழுக்கு
விவசாயிகளுக்கும் இந்நாளில் மனமார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்வோம்
பொங்கல் நல்வாழ்த்துகள்
உடல் களைப்பு
உடலுக்கு மட்டும்
மனதிற்கு என்றும்
தேவை இனிப்பு
அதை இணைப்பது
தான் பொங்கலின் சிறப்பு
இனிய பொங்கல் நல்வாய்த்த
Pongal Wishes in Tamil
இனிய பொங்கல் நாளில்
மகிழ்ச்சியும் மன அமைதியும்
பெருகட்டும் ஆரோக்கியமும்
செல்வமும் பொங்கட்டும்
எங்கும் சாந்தி நிலவட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள்
வீடுகள் மாட்டுத் தொழுவங்களுக்கு
வண்ணம் தீட்டி பச்சரிசி
புது வெல்லம் செங்கரும்பு
மஞ்சள் மாக்கோலம்
புத்தாடையுடன் பாரம்பரியம்
பண்பாட்டை பறைசாற்றும் ஒருநாள்
தைத்திருநாள் வாழ்த்துக்கள்
புதிதோ? அன்று போர்க்களம்! - வரும்
புல்லர் போவார் சாக்களம்
பதறிப் போகும் சிங்களம்! - கவி
பாடி முடிப்பான் மங்களம்!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தொற்றுநோய்கள் ஒழிய
போர்களெல்லாம் முடிய
உலகெங்கும்
நலமும் வளமும்
மட்டுமே நிறைய
வழியட்டும் பொங்கல்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
விடிகின்ற பொழுது எங்கும்
கரும்பாய் இனிக்கட்டும்
இந்த தைத்திருநாள் முதல்
இனிய பொங்கல் மற்றும்
உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு
இதை உரக்கசொல்வோம்
உலகிற்கு இனம் ஒன்றாக
மொழி வென்றாக புது
வேலை எடுப்போம் விடிவிற்கு
இனிய தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்
வாழ்க்கை வளம் பெற வாழ்த்திப்
பாடும் சொற்களெல்லாம்
வந்து சேரட்டும் உங்கள்
வாசல் கதவு தட்டிடவே
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Post a Comment