பெண் கண்ணீர் கவிதை - Pengal Kanneer Kavithai in Tamil 2025
உண்மையான அன்பின் வெளிப்பாடு, கண்ணீர்.
அழ நினைத்தால் ஆசைதீர அழுதுவிடு! கண்ணீரின் முடிவில் சுமைகளும் கரையுமென்றால்...
கண்ணீர் மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன், நித்தம் காதலித்தாலும், காதலிக்கப்படுவதற்கான வரம் பெறவில்லை என்பதால்!
உறவுகள் தரும் உணர்வுகள் யாவும் இறுதியில் காயங்களாய் மாறும்! விழியோரம் கண்ணீராய் கரையும்!
கண்ணீருக்கு மட்டும் கடவுள் நிறம் கொடுத்து இருந்தால், இந்த உலகம் முழுவதும் கண்ணீரீன் நிறமாக தான் இருக்கும்!
கனவாகிய கனவுகள் நினைவினில் கற்பனையாய் கரைகிறது, கண்களும் ஈரத்தால் நிறைகிறது!
அவன் நினைவை மறக்க, தலையணை கண்ணீர் கரையாகின்றதே!
கண்மூடித்தனமான அன்பிற்கு, கண்ணீரே சாட்சி!
பிரிந்து போன நினைவுகள் ஒவ்வொரு நாளும் கண்ணுக்குள் வந்து கொண்டு தான் இருக்கும்... கனவாக அல்ல கண்ணீராக!
உன்மேல் நான் கொண்ட ஏதோ ஒரு அழகிய உணர்வு, வலிகள் உணர்த்தி விழிகளின் ஓரம் கண்ணீர் மட்டும் பரிசளிக்குதே என்னிடம்!
சில நேரங்களில் நம்முடன் துணையாய் இருந்து, கண்ணீரைத் துடைப்பது தலையணை
தான்!
விழியோரம் வழியும் கண்ணீருக்கு வலிகள் ஆயிரம் இருக்கும்! வலி போக்க வழி இனிய தனிமையே!
காதல் வரும் போது கவிதை வரும்! காதல் விலகும் போது, கண்ணீர் வரும்!
என் கண்ணிர் நிரம்பிய கண்ணங்களுக்கு பின்னால், ஆயிரம் கவலைகள்!
Post a Comment