Old Age Love Quotes in Tamil - முதுமை காதல் கவிதைகள் 2024
முதுமையில் காதல் கவிதைகள் - Old Age Love Quotes
Post Related To,
▶️ Old Age Love Quotes in Tamil
▶️ முதுமை காதல் கவிதைகள்
▶️ அழகான காதல் கவிதைகள்
▶️ உண்மை காதல் கவிதைகள்
▶️ Love SMS Quotes in Tamil
▶️ Tamil Kadhal Kavithaigal
💕முதுமை காதல் கவிதைகள்
💙Old Age Love Quotes in Tamil
உன் நிறமோ என் தேகமோ நில்லாது நரை கூடும் வயதில், மெய்யான காதல் பொய்யான மோகத்தை தகர்க்கும்!
Best Husband Wife Quotes in Tamil
வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும், முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான் உலகின் ஆகச் சிறந்த காதலர்கள்!
Best Kadhal Kavithaigal
காதலின் வெற்றி திருமணம் அல்ல! தள்ளாடும் வயதில் துணை நிற்பதே காதலின் வெற்றி!
💙Tamil Old Age Love Quotes
அழகு என்றும் தேவையில்ல, என் காதலுக்கு! உன் நிழல் அருகே இடம் போதும், நான் வாழ்வதற்கு!
மங்கிய பார்வை, மடுக்கா செவிகள், கூன் கொண்ட ஊன், உளறும் வாய், உருவம் இழந்த தேகம், நரையடைந்த சிகை, இவையெல்லாம் துறந்து, மீண்டும் காதல் செய்வோம் வா!
உடலுக்கு வயதுண்டு, கால்களுக்கு தளர்வு உண்டு, என் இதயத்திற்கு வலு உண்டு... உன்னோடு பயணிக்கையில்!
💙முதுமையில் காதல் கவிதைகள்
அருகில் பார்த்தாலே போதும் என நினைப்பது முதல் காதல்! அருகில் மட்டும் நீ இரு என நினைப்பது, முதுமை காதல்!
Tamil True Love Quotes
உன் மூச்சில் நான் வாழ்ந்தால், என் முதுமை ஆனந்தம்! நீ இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால், இன்னும் ஆனந்தம்!
முதுமை முழுமையாய் ஆட்கொள்ளும் காலத்தில், ஊன்றுகோலுக்கு அவசியம் இருக்காது,
உந்தன் அருகாமையில் நான் இருக்கையில்!
கணவனுக்கு மனைவி இளம் வயதில் எஜமானி, நடு வயதில் கூட்டாளி, தள்ளாத வயதில்
தாய்!
இளமையில் மனைவியின் காவலன் கணவன். முதுமையில் கணவனின் ஊன்றுகோல் மனைவி. தாங்கிபி பிடிக்க துணை இருந்தால் தள்ளாடும் முதுமையும், இளமையே!
காலம் மாறலாம்! ஆனால், காதல் மாறுமா?
முத்தமிட்டு கட்டில் தொட்டு முடிவதில்லை காதல்! முகம் சுருங்கி, முதுமை கடந்து, கல்லறை சென்றாலும் மறையாததே காதல்!
தள்ளாடும் வயதிலும் தாங்கிப்பிடிக்க உறவு இருந்தால், எந்த வயதானாலும் அது
இளமையே!
நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ, பணம் பதவி தேவையில்லை! நல்ல துணை இருந்தால் போதும்!
முதல் காதல் அழகை நோக்கி, கடைசி காதல் அன்பை நோக்கி!
கன்னம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும் வாழ்வின் அர்த்தங்கள் காணும் காலம் இது தானோ!
வாழ்க்கை துணையின் மேல் இருபதில் வந்த காதல், அறுபதிலும் மாறாமல் இருப்பது தான் சிறந்த மணவாழ்க்கையின் இரகசியம்!
Old Age Kadhal Kavithai in Tamil
Post a Comment