மனைவிக்கு கணவனின் கவிதைகள் - Wife Kavithai in Tamil 2025
Wife Kavithai in Tamil - மனைவிக்கு கணவனின் கவிதைகள்
Related Searches,
▶️ Manaivi Kavithai in Tamil
▶️Wife Love Kavithai in Tamil
▶️ மனைவி கவிதை
▶️Love Quotes For Wife in Tamil
▶️ Wife Tamil Quotes
Wife Quotes in Tamil
கொட்டும் மழையும் கொதிக்கின்றது, கொடியவளின் இடையின்மேல் கொட்டுகையில்!
கணவனை பெயர் சொல்லி அழைக்காத மனைவி, பேரழகு தான்!
எனக்கு பிடித்தவளே, உனது வார்த்தையில், நான் அடிமையே! எனது பேச்சில் நீயே, உனது கனவில் நானே என் மூச்சில் நீயே! என் கைகளில் கவிதை, அதுவும் உன்னை நினைத்தே!
கணவனை பெயர் சொல்லி அழைக்காத மனைவி, பேரழகு தான்!
- என்னவள் சிரிக்கும் போது, அழகாய் இருக்க வேண்டும். அவளை சிரிக்க வைத்து, பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்!
- கண்டபடி பேசும் நான், உன்னை கண்டவுடன் பேச்சே வருவதில்லை!
நிலவின் ஒளிச்சாரலில், நின் முகம் கண்டானடி, பித்தனாய் நின்றானடி அந்த பிரம்மனும்!
அவள் அவ்வளவு அழகு! அவள் அங்க அளவுகளும் அழகு...
இசை இல்லாமலேயே இனிமையாக நடனமிடுகின்றன, உன் இமைகள்!
உன்னைச் சுற்றியுள்ள எல்லாமே அதிசயம் தான், உன்னையும் சேர்த்து!
உன் கை கோர்த்தே கரைந்திட, ஆசை தேய்பிறையாக! உன் காதலில் கரைந்தே வளர்ந்த
முழுமதியாக, உன்னுடைய நான்!
இடை இடையில் அவள் இடை செய்யும் வேலை, அப்பப்பா அவளின் அத்தனையும் ஆயுதம்!
உன்னைப்பற்றி எழுதும்போது, பேனாவும் கண்ணீர் சிந்துகிறது, மைகளாய்!
நட்சத்திரங்கள் மண்ணிற்கு வருவதில்லையாம்! நீ என்ன விதிவிலக்கா?
கள்ளம் கபடம் இல்லாத உன் சிரிப்பில், என்னை உன் மன சிறையில் அடைத்து விட்ட கள்ளி
நீ!
என் உயிர் பிரிந்தால் உன் கண்களில் நீர் வருமோ இல்லையோ எனக்கு தெரியாது! ஆனால், உன் கண்களில் நீர் வந்தால் அடுத்த நொடியே என் உயிர் பிரிந்திடும், இந்த உடலை விட்டு!
▶️ True Love Quotes in Tamil
ஒரு கணம் பிரிந்தாலும், மறுகணமே சேர்ந்துவிடுகிறது, நம் இதயங்கள் நம் மீது கொண்ட
காதலால்!
வெகுதூரம் சிலகாலம் இப்படியே உன் கைகளை கோர்த்தபடி கழிக்கவேண்டும், என் ஆயுள்
இறுதிவரை என் அன்பே!
என்னவளே! இப்படியே என் ஆயுள் வரை உன்னை அரவணைக்க வேண்டும்! அந்த அரவணைப்போடு நாம் இருவரும் ஒன்றாக இறக்க வேண்டும்!
என்றும் நிரந்தரமாய் வாழ ஆசைப்படுகிறேன், உந்தன் மனதில் என் அன்பே!
Manaivi Kadhal Kavithai
உயிரோடு இருக்க ஒரு பிறவி போதும்! உன் காதலோடு இருக்க, பல ஜென்மம் வேண்டும்!
வெண் மேகமோ, கார் மேகமோ, அனைத்தும் அழகே, உன் தோள் சாய்ந்து ரசிக்கயில்!
ஆயிரம் ஆசைகள் அத்தனையும் நிறைவேற்ற, ஆயிரம் ஆயுள் வேண்டும் உன்னோடு மட்டும்!
விரும்பியே ஆயுள் கைதி ஆனேன்! காலமெல்லாம் அவள் காதலை தண்டனையாய் பெற்று, அவளை
உயிராய் சுமக்க!
உன் அருகில் நானிருக்க, கண்ணீரும் இனி எதற்கு? கண்ணாக நானிருப்பேன், கலந்துவிடு
கண்மணியே!
என்னோடு நீ இருக்கும் இந்த நிமிடம், மரணம் என்னை நெருங்கினாலும் மகிழ்ச்சியாய்
ஏற்பேன் அன்பே!
சிறுகதையாக நீ! தொடர்கதையாக நான்!
நீ வாழும் நொடிகள் எனக்காக இருந்தால், நான் வாழும் நிமிடங்கள் உனக்காக இருக்கும்!
உனக்காக எதையும் இழந்து விடுவேன்! எதற்காகவும் உன்னை இழக்க மாட்டேன்!
எனக்கு "நீ" அழகு, உனக்கு "நான்” அழகு, காதலுக்கு “நாம்” அழகு!
▶️ Quotes about Wife in Tamil
அவள் அக அழகில் என் கண்கள் தோற்றது! மன அழகில் என் ஆண்மையும் தோற்றது!
அவளுடனான காலைகள் விடிவதுமில்லை, முடிவதுமில்ல!
வானவில்லாய் என் வாழ்வில் வந்து, வர்ணஜாலத்தை ஏற்படுத்தினாய்!
Quotes for Her in Tamil
பூ சூடுகிறாள், எனக்காக! பொட்டு வைக்கிறாள், எனக்காக! மெட்டி அணிகிறாள், எனக்காக!
குழந்தையை சுமக்கிறாள், எனக்காக! என் இந்த வாழ்க்கை முழுவதும் அன்பே உனக்காக!
நான் என்ன செய்தாலும், திட்டினாலும் கடைசியில் அவள் வந்து நிற்பதோ, என்னிடம் தான்!
True Love Quotes for Her in Tamil
நம் சமையல் அறை சமைப்பதற்காக கட்டப்பட்டதா இல்லை உன்னை சமாதானம் செய்வதற்காக கட்டப்பட்டதா என்று தெரியவில்லை!
நான் பேசிக்கொண்டே இருக்கிறேன் நீ ஏன் அமைதியாக இருக்கிறாய்? என்று கேட்டாள்.
ஆனால் எனக்கு மட்டும் தான் தெரியும், நான் அவள் அழகில் மெய்மறந்து பார்க்கிறேன்
என்று!
இருளில் அவனுடன் அமர்ந்து ஒப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன்! மிளிர்வது, என்னவனின் முகமா? இல்லை அரை வட்ட நிலவா? என்று.
Kanavan Manaivi Kadhal Kavithai
தினமும் மலர மறவா மலரே, உன் தேன் வார்த்தையால் நானும் தேனி ஆனேனடி!
உன் மடி மீது தூங்கினேன்! என் வசதிக்காக அல்ல, உன் அன்புக்காக..!
Wife Kavithai Tamil
Post a Comment