காதல் ஜோடிகள் கவிதைகள் - Couple Quotes in Tamil 2025
Couple Quotes in Tamil - Tamil Couples Quotes - காதல் ஜோடிகள் கவிதைகள்
தூங்க மடி கொடு! துயரங்களோடு நானும் கொஞ்சம் தொலைந்து போக...
உன்னிடம் கூறிய வார்த்தைகளை விட, என்னுடனே வாழ்ந்து கொண்டிருக்கும் வார்த்தைகள் எண்ணில் அடங்காதவை!
ஆரவாரமாய் மழை, தேநீரும், நீயும் நானும்!
கண்ணைக்காக்கும் இரண்டிமைபோலவே காதலின்பத்தைக் காத்திடுவோம்!
உன்னை திட்டுவேன், கோபமாய் இருப்பேன், திமிரா பேசுவேன்! ஆனால், சிறு பொழுதும் ஒரு துளி கூட, உன் பாசத்தையும், உன்னையும் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்!
கடலும் உப்புமாய், மழையும் மண்வாசமுமாய், நிழலும் நிஜமுமாய், சொல்லும் பொருளுமாய், உடலும் உயிருமாய் நீயும் நானும்!
விழும் இடம் நீயானால், விதையாக விழ நான் தயார்! அதை விருட்சமாக்க நீ தயாரா?
உறங்கும் போது கனவிலும், விடிந்தவுடன் நினைவிலும், வாழும் வரை உயிரிலும் நீயே வேண்டும்!
வாழ்கை என்னும் புத்தகத்தின் முன்னுரை நீயாகவும், அதன் முடிவுரை நானாகவும் அமைய வேண்டும்!
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமா? வாழ்க்கை துணையிடம் தோற்றுவிடுங்கள்!
"நான் இருக்கிறேன்!" நீ சொல்லும் போது அந்த சொல் - வார்த்தையாய் அல்ல, என் வாழ்க்கையாய் என்னை வந்தடைகிறது!
அனைவருக்கும் இருப்பது ஓர் உயிர் தான், எனக்கும் ஓர் உயிர் தான், அது நீ தான்!
என் மனதில் இருக்கும் காதல், உனக்காக மட்டுமே!
உன்னைத் தொட்டுத் தழுவாமல் என் நாட்கள் தொடரவும் தொடராது! முடியவும் முடியாது!
எனக்கு "நீ" அழகு, உனக்கு "நான்” அழகு, காதலுக்கு “நாம்” அழகு!
ஒரு ஆணின் அதீத அன்பினால் தான், ஒரு பெண் திமிராகிறாள்!
உன் உருவத்தில் கடவுளை காண்கிறேன், நீ என்மேல் அக்கறை காட்டும்போது!
அன்பு, அக்கறை, அரவணைப்பு! இதைவிட வேறென்ன இருந்துவிடப் போகிறது, ஒரு பேரன்பின் வேண்டுதலாய்!
என் ஆசையை நீ நிறைவேற்றினால், நான் உன் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவேன்!
என்னுடைய ஒவ்வொரு நொடியும், உன்னுடனே!
உன் மேல் இருக்கும் ஆசையைக் காட்ட, ஒரு ஜென்மம் போதாது அன்பே!
காதல் வந்தால், கடலுக்கும்
தாகம் வரும்!
என் காதல் கட்டிலறை வரை அல்ல, கல்லறை வரை!
வாழ்க்கை முழுவதும் உன்னுடன் வாழ்ந்தாலும், போதாதே எனக்கு!
என்னை அறியாமலே நான் சுவாசிப்பதைப் போல, என்னை அறியாமலே உன்னை நேசிக்கிறேன்!
என் இன்பம், துன்பம் எல்லாம், நீயடி/டா
இயந்திரமான என் நாட்களை இயக்குவது என்னவோ உன் காதல் தான்! என்னை இயந்திரமாக்கிய உன் காதல் தான்!
உன்னையும் என்னையும் வதைக்கும் காதலை, மனசு வதை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வழியுண்டா?
ரசிப்பதற்கு நீ காத்திருந்தால், என் ரசனை முழுவதையும் வரிகளாக்கி தருகிறேன், உன் கண்களுக்கு விருந்தாக!
இதயம் என்னுடையது, நினைவுகள் உன்னுடையது!
ஆகாயம் பார்க்கின்றேன்! தரையை பார்க்கின்றேன்! எங்கு பார்த்தாலும், அங்கு உன் முகம் பார்க்கின்றேன்!
கண்கள் என்னுடையது, கனவுகள் உன்னுடையது!
கிடைப்பதல்ல, நிலைப்பதே அன்பு!
கட்டையில் போனாலும், போகாதடி/டா என் காதல்!
என்னுடையது எதுவோ, அது உன்னுடையது! உயிர் உன்னுடையது, மூச்சும் உன்னுடையது!
அது என்ன மாயமோ தெரியவில்லை, அவன் ஒற்றைப் பார்வை என்னை ஆட்சி செய்ய ஆரம்பித்துவிடுகிறது!
Post a Comment