Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

மோட்டிவேஷனல் கவிதை - Best Motivational Quotes in Tamil 2025

Best Motivational Quotes in Tamil - மோட்டிவேஷனல் கவிதை

Motivation Kavithai

எத்தனை கைகள் கைவிட்டாலும், என்றும் நம்பிக்கை கைக்கொடுக்கும்!
-
நம்பிக்கை என்ற சிறு நூல் இழையில் தான், அனைவரின் அன்பும் இயங்கிக் கொண்டிருக்கின்றது!
-
எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி, காலத்திற்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் செயல்படு!
-

முயற்சிகள் தோற்றுப் போகிறதா? தளர்ந்து விடாதே... மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்! விதை கூட இங்கு விழுந்துதான் எழுகிறது! தோல்விகள் கூட ஒரு நாள் தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால்!
-
கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்!
-

Motivational Thoughts in Tamil

தோற்காமல் வென்றவர்கள் யாரும் இல்லை; தோற்று விட்டோம் என்று கவலைப்படாமல் வெல்வது எப்படி என்று யோசி வெற்றி நீச்சயம் ஒருமுறை கிடைக்கும்!
-
நீ உன் சிறகை விரிக்கும் வரை, நீ எட்டும் உயரம் யாரறிவார்?
-
கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை. சாதனையில் தவறான் விளக்கம் தான் கடினம்!
-
தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நீ போராடு!
-
மனதில் வலிமை இருந்தால், துன்பமும் இன்பமாய் மாறும்!
-
உன் உள்மனதிற்கு ஏதுவாக நீ உன்னுள் உயிர் கொடுக்கிறாயோ, அதுவாகவே அது செயல்படும் எனவே உன்னிடம் இருந்தே முதலில் வெற்றியை அடைய நம்பிக்கை என்னும் விதையை உன் மனதில் தூவி பிள்ளையார் சுழி போடு!
-
என்னை வீழ்த்தவே முடியாது என்பது நம்பிக்கை அல்ல, வீழ்ந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை!
-

Tamil Motivation Kavithaigal

தவறி விழுந்த விதையே முளைக்கும் போது, தடுமாறி விழுந்த நம் வாழ்க்கை மட்டும் சிறக்காதா? நம்பிக்கையோடு எழுவோம்...
-
தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!
உலகில் நிகழும் ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்பும், யாரோ ஒருவரின் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும் - மார்டின் லூதர் கிங்.
-
விழுந்த அடிகளை, படிகளாக நினைத்தால், எந்த உயரத்தையும் தொட்டு விடலாம்!

நம்பிக்கை Quotes

தன் திறமையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒருவனின் பார்வை எதிர் உள்ளவர்களுக்குத் திமிராகத் தோண்றுவதில் திவறில்லை!
-
செல்லும் பாதை சரியாக இருந்தால், வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்!
-
மலையில் தங்கும் மேகம், காலையில் கரைந்து போகும்! கடலாய் சூழ்ந்த சோகம், அதுவும் கடந்து போகும்!
கடினமாக உழைத்தும் சோர்வு தெரியவில்லையா? அதுதான் உனக்குப் பிடித்த வேலை!
-
உன் பலத்தை கண்டு பயந்தவன்! உன் பலவீனத்தை அறிய ஆவலுடன் இருப்பான்.. "பலத்தை உறுதிப்படுத்து” பலவீனத்தை உள்ளடக்கு”
-
சிந்தனைகளை சாதிக்கும் கருவியாக பயன்படுத்துங்கள்!

நம்பிக்கை வரிகள்

வெற்றியும் தோல்வியும் இரண்டு படிக்கட்டுகளே, ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய். மற்றொன்றில் உன்னை திருத்திக்கொள்வாய்.
-
சாவு நெனச்சா வரும்! சாதனை ஜெயிச்சா தான் வரும்.
-
வழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்! ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது!
-
சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே! இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்!

நம்பிக்கை Kavithaigal

எதிர்மறை எண்ணங்களை எதிரியாக்கிக்கொள்! எளிதில் தோல்வியடையமாட்டாய்!
-
கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல! நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்!
-
கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பது இல்லை, கல் தான் காணாமல் போகும்! அதே போல விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும், நீங்கள் கடலாக இருங்கள்!
-
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!

Tamil Thoughts

நம்பிக்கையோடு இருந்தால், நம் வாழ்க்கைக்கான ஆதாரமும் அங்கீகாரமும் தானாகவே கிடைக்கும்!
-
வானின்றி மழை இல்லை! நீரின்றி உலகில்லை! அதுபோல தான், வலியின்றி வாழ்வு இல்லை!
-
பாதைகள் மோசமாய் இருப்பினும், பயணம் அட்டகாசமாய் அமையும்! நம்பிக்கையோடு அடி வைத்தால்!
-
நம்பிக்கை என்னும் ரதத்தில் பயணித்து கொண்டு இருப்பவர்களுக்கு, வெற்றியின் இலக்கு தூரம் இல்லை!

தன்னம்பிக்கை வரிகள் Quotes

நம்பிக்கை என்பது சூரியனை போல; அதை நோக்கி நாம் செல்லச் செல்ல மனச்சுமை என்ற நிழல் நம் பின்னால் போய்விடும்!
-
அவமானத்தின் வலி, அழகிய வாழ்க்கைக்கான வழி!
-
உலகவரலாற்றைப் படிப்பதைவிட உலகில் வரலாறு படைப்பதே, இனிமை!

உன் மனதிலிருக்கும் அச்சம் தான், உன் முதல் எதிரி! நீ தயங்கி நிற்கும் நொடிகள் தான், உன் முதல் தோல்வி!
-
முடிவெடுப்பது பெரிய விஷயமல்ல! எடுத்த முடிவை முடிப்பதே விஷயம்!
-
சிந்தித்து செயல்படு! அதுவே, வெற்றியை சந்திக்கும் செயல்பாடு!
-
ஊதி விடப்பட்ட பலூன் உயரத்தில் தான் பறக்கும்! உதறித்தள்ளப்பட்ட நீயும் உயரத்தில் பற!
-
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும். முட்கள் அல்ல!

Motivation தமிழ்

வெற்றி வந்தால் பணிவு அவசியம்! தோல்வி வந்தால் பொறுமை அவசியம்! எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்! எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்!
-
தீயதை விட்டு தூரத்தில் ஓடு! நல்லதை விடாமல் துரத்தி ஓடு!
-
தூக்கிபோட்டால் துவண்டு விடாதீர்கள்! ஒதுக்கி வைத்தால் ஒடுங்கி விடாதீர்கள். உங்களுக்கான நாள் ஒருநாள் அமையும்!
-
யாரையும் தெருவில் கிடக்கும் காகிதமாக நினைத்துவிடாதே! நாளை அது பட்டமாகப் பறந்தால் நீயும் சற்று நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும்!
-
நம் பாதம் சிறியது! ஆனால், நம் பாதை பெரிதாக இருக்கட்டும்!
எதையுமே எதிர்பார்க்காது உழைக்கும் உழைப்பிற்கு தான், வெற்றி கிடைக்கும்!

எட்டி பிடிக்க முடியாத நட்சத்திரத்தையும் பிடித்துவிடலாம் என உறுதி கொள்! அடைய முடியாது என எண்ணும் வாழ்வின் உயரத்தையும் மிக எளிதாக அடைந்துவிடலாம்!
-
ஒரு மில்லிமீட்டர் புன்னகை நினைக்கமுடியாத அளவுக்கு நம்பிக்கை தரும்!
-
துன்பங்கள் ஆயிரம் இருக்கலாம்! துன்பதிதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இன்பத்தை மட்டும் வெளி காட்டினால், இவ்வுலகில் வெறுப்பவர் கூட ரசிப்பார்கள்!
-
எவ்வளவு வேகமாக செல்கிறோம் என்பதைவிட, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறோம் என்பதே முக்கியம்!
-
இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம், தன்னம்பிக்கை என்ற ஒன்று இருந்தால்!
-
எதையும் தாங்கும் மன வலிமை ஒன்று உனக்குள் இருந்தால் தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்.

Nambikkai Quotes in Tamil

காலத்தின் கடும் வெள்ளத்தில் கரை தேடி அலையும் போது, நடுவில் ஆயிரம் தடை வந்தாலும், நீச்சல் கலையாக கரை சேர்க்கிறது, தன்னம்பிக்கை!
-
கடினமான நாட்கள் தான், உங்களை பலப்படுத்துகின்றன!
-
குறைகளை காரணம் காட்டி ஒதுக்கிய உலகம், உன் வெற்றியை கூடி கொண்டாடும் நாள் வரும் வரை காத்திரு கவலை மறந்திரு!
-
உன்னை கூண்டில் வைத்து அடைக்கலாம்! ஆனால் உன் சிந்தனைகளை, யாராலும் கூண்டில் அடைத்து வைக்க முடியாது!
-
வாழ்க்கைல எவ்வளவு பிரச்சினை வந்தாலும் சரி பாத்துக்கலாம்னு நினைச்சு அடுத்ததை பாருங்க நண்பா. உங்களை யாராலும் தடுக்க முடியாது.
-
வாழ்க்கை துணியாதவரை, பயங்காட்டும்! துணிந்து பார், வழிகாட்டும்!

பற்றியவை தானே அணையும்.. சிறுபொறுமையோடு காத்திருங்கள்!
-
கடந்த காலத்தை நினைக்காதே! கண்ணீர் தான் வரும். எதிர் காலத்தை எதிர் பார்க்காதே! இந்த நிமிடம, இந்த நொடி தான் உண்மை. அதை அனுபவி. நல்லதையே நினை. நல்லதே நடக்கும்.
-
தன் புகழ் பாடாதே! நிறைகுடம் ஒருபோதும் தழும்பி தன் நிறைவை சொல்வதில்லை! சிங்கம் ஒருபோதும் கரஜித்து தான் ராஜாவென்று சொல்வதில்லை! மகான் ஒருபோதும் கூவி தான் மகானென்று சொல்வதில்லை!
-
நீங்கள் உயரப் பறக்க ஆசை கொண்டால் உங்கள் மனதில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்!
-
உன் வாழ்வில் நீ எதிர்கொள்ளும் துன்பங்கள், தோல்விகள் கண்டு துவண்டு விடாதே! உனக்கான ஒரு நாள் வரும் வரை ஓடிக் கொண்டே இரு! உன்னால் முடியாது என பலர் கூறிய வார்த்தைகளே என்னை வெற்றியின் பக்கம் தள்ளியது - ஜாக்கி சான்

Nambikkai Kavithai in Tamil

ஒரு கதவு மூடப்பட்டால், அதைவிட சிறந்த வழி ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!
-
உங்களின் இன்றைய செயல் தான் உங்களுக்குரிய நாளைய பொழுது எது என்பதை தீர்மானிக்கும்.
-
கனவை கண்டதோடு மட்டும் நிறுத்தாமல், கனவு நினைவாகும் வரை துரத்திச் செல்!
-
வெற்றிகள் கூட கற்று தராத மனவுறுதியை அடைந்து விட, வாழ்வில் வீழ்ந்தே எழ வேண்டும்!
-
எண்ணங்கள் நன்றாக இருந்தால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நன்றாக அமையும்
-
வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்றால், பல துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்தே ஆக வேண்டும்!
-
வீழ்வது முடிவல்ல, மண்ணில் வீழ்ந்த பின்னே தொடங்குகிறது மழைத்துளியின் மதிப்பும் வாழ்வும்!

Tamil Motivation Images

உங்களை உங்களுக்கே பிடிக்குமாறு உங்கள் வாழ்க்கையினை மாற்றி அமையுங்கள்! வெற்றிகள் உங்கள் முகவரி தேடி வந்து, உங்களைக் கட்டிக் கொள்ளும்!
-
பெரிதாக யோசி! சிறிதாக தொடங்கு! ஒரே நாளில் உயர்ந்துவிட முடியாது!
-
ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைப்பதைவிட, உழைக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பது, அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைத் தேடித் தரும்.
-
அனுபவம் என்பது ஒரு புது மாதிரியான ஆசிரியர். அது பாடங்களை கற்றுத் தந்த பின் பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகளின் மூலமேதான் பாடங்களை கற்றுத் தருகிறது.
-
உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலையை உருவாக்கு.. அதுவும் ஒரு வகை வெற்றி தான்!

நம்பிக்கை ஸ்டேட்ஸ்

எதிர்காலத்தை கணிக்க மிகச் சிறந்த வழி, அதை உருவாக்குவதே ஆகும்! - ஆபிரகாம் லிங்கன்
-
உலகமே உன்னை எதிர்த்தாலும், துணிந்து நில்! இறுதிவரை கர்வத்தோடு இவ்வுலகை ஆளலாம்!
-
கடுமையான பாதை என்று எதுவுமில்லை! பாதையை மாற்றாதே, பாதை குறித்த உன் பார்வையை மாற்று!
-
இனியும் என் வாழ்வில் யாரையும் நம்பி இழப்பதற்கு ஏதுமில்லை! தன்னம்பிக்கை ஒன்றைத்தவிர!
-
தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
-
ஆமையை ரோட்டில் விட்டு, அதன் வேகத்தை குறை கூறுவது பழக்கம்! அதை நீரில் விட்டால், நம்மால் தான் பிடிக்க முடியுமா? இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எவனும் வல்லவனே!
-
எதை, எதையோ அடையத் துடிக்கும் இதயத்தைக் கொஞ்சம் திசை மாற்றி இலட்சியத்தை அடைய வழிகாட்டுங்கள்!

-
எந்த சூழ்நிலையில் நீ வீழ்ந்தாலும், பிறர் உன்னை வீழ்த்தினாலும், எழுந்து நிற்கக் கற்றுக் கொள்!

Nambikkai Tamil Status

நேற்றைய பொழுது நிஜமில்லை! நாளைய பொழுது நிச்சயமில்லை! இன்று மட்டும் நம் கையில்!
-
இருட்டில் இருக்கிறேன் என்று கவலைப்படாதே! இருளும் விடியலை நோக்கித்தான் செல்கிறது!
-
தாண்டும் தூரத்தை விட, தடுக்கும் துரோகிகளே அதிகம்!
-
சில கனவுகள், விழிக்க விடுவதில்லை! சில கனவுகள் உறங்க விடுவதில்லை!
-
போராடாமல் கிடைத்த வெற்றியை என்றும் கொண்டாட நினைக்காதே
நீ சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்!
உன் தோல்வியைக் கண்டு சிரிப்பவர்களைப் பார்த்து நீ சோர்ந்துவிடாதே! அவர்களுக்குத் தெரியாது நாளை நீ என்னவாக இருக்கப் போகிறாய் என்று!
-
ஜெயிக்கும் வரையில் தன்னம்பிக்கை அவசியம்! ஜெயித்த பிறகு தன்னடக்கம் அவசியம்!
-
வாழ்க்கை மனிதனுக்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கும் இரண்டாவது வாய்ப்பு, நாளை!
-
வலிகள் ஆயிரம் இருக்கிறது; இருக்கட்டுமே, அதற்கெல்லாம்வழி இருக்கிறது!
-
ஒடும்போது விழுந்து விடுவோம் என்று நினைக்காதே, விழுந்தாலும் எழுந்துவிடுவோம் என்று ஓடு!

Motivation Status Tamil

பிறரால் நமக்குக் கொடுக்கப்படும் சவால்களே சாதித்துக் காட்டும் வரை உறங்கவிடாது, நம்மை துரத்தும் ஆயுதம்.
-
இதுவரை வாழ்ந்த வாழ்வை அழிக்கவும் முடியாது! இனி வாழ போகும் வாழ்வை அறியவும் முடியாது! கற்றுக்கொண்ட பாடங்கள் தான் கடக்க உதவுகிறது.
-
உன் மனதுக்குள் இருக்கும் அச்சம் தான் உன் முதல் எதிரி! நீ தயங்கி நிற்கும் நொடிகள் தான் உன் முதல் தோல்வி!
-
வெற்றிகளை அடுக்கும் அலமாரியில் முதல் வரிசையை அழகாக்க காரணமானவன்! தோல்வி!
-
உன் கனவுகளுக்கு உயிர் கொடு. என்றோ ஒரு நாள் அல்ல. ஒவ்வொரு நாளும்.
-
என்னால் முடியும் என்ற நம்பிக்கை கொண்ட மனிதன் யாரும், அடுத்தவர்களின் உதவியை நாடுவதில்லை!
-
எதிரி எவ்வளவு பெரியவன் என்பது முக்கியமல்ல, எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு பெரிது என்பதே முக்கியம்!



Close