99+ தமிழ் காதல் கவிதை - love kavithai tamil 2025
Love Kavithai Tamil - தமிழ் காதல் கவிதை
new collection of tamil kadhal kavitahigal, kadhal kavithai, tamil love quotes.
Related Searches,
▶️ Kadhal Kavithai Tamil
▶️ Love Feeling Kavithai Tamil
▶️ True Love Kavithai Tamil
▶️ Kavithai in Tamil Love Feel
▶️ Tamil Love Kavithai SMS
▶️ Love Kavithai Tamil Image
Kavithaigal Love
1. நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம்; ஆனால், உன்னை
நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!
2. வாழ வேண்டும் என்பதில் ஆசை இல்லை! உன்னுடன் வாழ வேண்டும் என்பதில் தான்
பேராசை!
3. அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்!
Love Kavithai
4. சில நேரங்களில் எனக்கே ஒரு சந்தேகம், என் இதயம் எனக்காகத்தான் துடிக்கிறதா?
என்று!
5. பெட்ரோல் விலையை போல்தான் என் காதல் உன் மேல் தினமும் அதிகரித்துக் கொண்டே
இருக்கிறது!
6. உன் கைவிரல் உரசிய நாட்களை நினைத்தே நாளும் இமைகள் மூடுதே!
Best Kadhal Kaithai Tamil
என் வலக்கையை, உன் இடக்கையுடன் ஜோடி சேர்த்து, சாலையின் நீளத்தை, நம் காலடிகளால்
அளக்கலாம் வா!
8. மெய் அன்பில் பேரரசனும் சிறுபிள்ளையாவான், காதலெனும் உயிரோவியத்தின் முன்!
9. கைகள் இணைந்திருந்தால் மட்டுமா காதல்? இதயம் இணைந்திருந்தால் தான் காதல்!
தொலைவில் இருந்தாலும் தொலையக்கூடாது!
Love Feeling Kavithai
10. நீ ஒருவரை நேசித்தது உண்மையானால், அவர்களின் நினைவுகள் தினம் தினம்
ஞாபகத்திற்கு வரும்!
11. வீழ்ந்தால் தாங்கிப் பிடிக்கும் வாழ்க்கைத் துணை கிடைத்தால், தொலைத்துவிடாதே!
Read More: Love Quotes Malayalam
12. அன்பாய் பேச ஆயிரம் உறவுகள் இரு க்கலாம்; ஆனால் நம்முடைய அன்புக்காக மட்டும்
சில உறவுகள் இருக்கின்றன! அவர்களை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்
கொடுக்காதீர்கள்!
True Love Kavithai
13. காரணம் வைத்து பிடிப்பதில்லை காதல்! காரணமே இல்லாமல் பிடிப்பது தான் காதல்!
14. உன் மீதான காதல் என்பது நீ இருக்கும் வரையல்ல, நான் இறக்கும் வரை தொடரும்!
15. உனக்கும், எனக்குமான தூரம் ஒன்றே நிர்ணயிக்கும், என் புன்னகையின் நீளத்தை!
Love Poem Tamil
16. நிலவின் அழகை சொல்ல வார்த்தைகள் கோடி, நீ எங்கு சென்றாலும் நான் வருவேன்
உன்னைத் தேடி!
17. காதல் கசப்பாக தான் இருந்தது , உன்னை காணாத வரையில்!
18. ஆண்களுக்கும் வெட்கப்பட தெரியும் என்று உன்னை கண்ட பின் தானடி புரிந்தது!
லவ் Quotes
19. வாழ்க்கை என்ற கடலில் காதல் என்ற படகில் பயணிப்போம், இருவரும் கரைசேரும்
வரையில்!
20. காலம் முழுதும் உன்னோடே கடந்து விட ஆசைதான் - என் காதல் சம்மதித்தால்!
21. கடல் நீர் வற்றும் வரை, காகித மலர்கள் வாடும் வரை, ஆகாயம் அழியும் வரை, என்
ஆயுள் முடியும் வரை, உன்னை காதலிப்பேன்!
One Line Love Kavithai
22. தொலை தூரத்தில் இருந்தாலும், தொலைந்து போகாத காதல் தான் உண்மையான காதல்!
23. என்னோடு இரு அது போதும்! பிறகு யோசிப்போம், வாழ்க்கை முடிவிலியா, முடிவா
என்பதை!
24. ஆசைகளே இல்லாத அற்ப பிறவி என்னையும் பேராசைக்காரனாய் மாற்றிய அவள்!
Romantic Kavithai in Tamil
25. நீயும் நானும் ஒன்றாய்ப் போகும் போது நீளும் பாதை, இன்னும் வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி!
26. கண்ணைக்காக்கும் இரண்டிமைபோலவே காதலின்பத்தைக் காத்திடுவோம்!
27. அதிக கோபம் கொண்டதும், அதை விட அதிகம் பாசம் கொண்டதும் உன்னிடம் மட்டுமே!
Tamil Love Impress Kavithai
28. பயப்படும் என் விழிகள் - நம் விரல்கள் கோர்த்ததும் பயமறியாமற் போனதே!
29. ஆறடியில் ஓர் நிலவு, பத்தடி தூரத்தில் என் முன்னே நடந்து செல்கின்றது! உலகம்
அறிந்திடாத எந்தன் அதிசயம் அவள்!
30. அவள் புறமுதுகு காட்டி காதல், போரில் என்னை வென்று விட்டாள்!
Love You Kavithai
31. அவள் செவியோரம் உரசும் குறு கார்க்கூந்தலும், தோளோரம் உரசும் மென்னிற இதழும்,
உவமையில்லா பேரழகு!
32. நேசிக்கிறார்கள் என நாமும் நேசிக்கிறோம் என்பதல்ல நேசம்! நேசிக்காவிடினும்
நேசிக்கிறோம் என்பதே உண்மையான நேசம்...
33. காதல் யுத்ததில் விரும்பி தோற்றேன்! தண்டனையாய், அவள் இதழ்சிறை பெற!
Feel Kavithaigal
34. சிறைவாசம் வேண்டும், எப்போதும் உன் அரவணைப்பில் அகப்பட்டு கிடக்க!
35. கட்டழகு கவிதைக்கு மெட்டி போடும் வரம் பெற்றேன்... மெட்டி அழகு கூடியது,
என்னவளின் கால்களில் பட்ட உடன்!
36. என்னையே எனக்கு பிடித்தது, எனக்கு பிடித்த உனக்கு என்னை பிடித்ததால்!
37. உயிரோடு இருக்க ஒரு பிறவி போதும்! உன் காதலோடு இருக்க, பல ஜென்மம் வேண்டும்!
38. அணு, அணுவாய் வாழ்வதற்கு முடிவெடுத்த பின், காதல் சரியான வழிதான்!
39. மழையும் நீயும் ஒன்றுதான்! சில நேரங்களில் என்னை ஏமாற்றிவிடுகிறீர்கள்!
40. கண்கள் வழியே இதயத்தை துளைத்து, என்னுள் வாழ்கிறாய் காதலாக!
41. எனக்கு "நீ" அழகு, உனக்கு "நான்” அழகு, காதலுக்கு “நாம்” அழகு!
42. எங்கு காதல் இருக்கிறதோ, அங்கு வாழ்க்கை இருக்கிறது.
43. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பேச துடிக்குது மனது! இணைய மறுக்குது உதடு!
44. என் காதல் தொகுப்பில் ஓர் எழுத்து கவிதை "நீ"
45. காதல் கடலில் மிதக்கும் உன் உதட்டுக்கப்பலில் பயணிக்கும் முத்தப்பயணி நான்!
46. கைக்கோர்த்து நடக்கையில், காற்றில் பறக்கும் காகிதமானேனே!
47. பல மணி நேரம் பேசும் உதடுகளை விட, சில மணி நேரம் துடிக்கும்
இதயத்திற்குத்தான் பாசம் அதிகம்!
48. நான் சென்ற வழி மறந்து, உன் விழி தேடுகிறேனே!
49. இங்கு இமைக்காத நொடிகள் உண்டு! உன்னை நினைக்காத நொடிகள் ஏது?
50. அதிக வட்டியோடு, கடனாக தருவாயா ஒரு முத்தம்?
51. இரட்டை ஜடையும், உன் இரு விழியும் கொல்லுதே!
52. மௌனமாக இருந்தாலும் வெளிப்பட்டு விடுகிறது, என்னுள் புதைக்கப்பட்ட உன் அன்பு!
53. எத்தனை உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும் என் உள்ளம் தேடும் ஒரே உறவு நீ
தான்!
54. கண்களால் பேசி மயங்கிய காதல் போதை தெளியும் முன்னே, வார்த்தைகளால் பேசி
மயக்கமுற செய்கிறாயோ?
55. பிடித்ததையெல்லாம் செய்து வருவதல்ல காதல்! செய்வது எல்லாம் பிடித்து
வருவதுதான் காதல்!
56. இருளினில் மிளிரும் தேய்பிறை நிலவாய் நீ இருப்பது, என்னை கவர்ந்திடவா?
57. உன் மெளன சொற்களை எவரால் மொழிபெயர்க்க முடிகிறதோ, அவர்களே உன்னை முழுவதுமாய்
உணர்ந்தவர்கள்!
58. மொழிகளுக்குள் உட்பட்டது அல்ல காதல்! புரிதலுக்கு உட்பட்டது கன்னத்து
முத்தமொன்றில்
59. மீன்கள் துடிப்பது நீருக்காக! என் உள்ளம் துடிப்பது உனக்காக!
60. யோசித்து வாழ ஆயிரம் உறவுகள் இருந்தாலும், நேசித்து வாழ ஒரு உயிர் போதும்
உன்னை போல!
61. பிடித்தவர்களின் கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாய் இருங்கள்! கைக்குள்ளேயே
வைத்துக் கொள்வார்கள்!
62. சண்டையை தொடங்குவது நீ, சண்டையை முடிக்க ஒவ்வொரு முறையும் உன்னை சமாதானம்
செய்வது நான்!
63. தன் தேவைக்காக மட்டுமே பேசும் உறவுகளுக்கு மத்தியில், அன்பிற்காக பேசும்
உறவுகள் கிடைத்தால் அது வரமே!
64. உனக்காக எதையும் இழப்பேன்என்று சொல்லும் உறவை விட, நீ எதை இழந்தாலும் உன்
கூடவே இருப்பேன் என்று சொல்லும் உறவு வரமே!
65. காரணமின்றி பிரிந்திருந்த நாட்களுக்கு காலம் காரணம் கூறுகிறது! நம்
இருவருக்கும் இடையேயான காதல் அதிகரிக்க வேண்டும் என!
66. ஏ கடலலையே நொடிக்கு ஒருமுறை தொட்டுவிட்டு, முத்தமிட்டு செல்கிறாயே, கரை தான்
உன் காதலியோ?
67. எல்லா காதலும் அழகையோ, ஆடம்பரத்தையோ பார்ப்பதில்லை! உண்மையான அன்பை மட்டுமே
சில காதல் எதிர்பார்க்கிறது
68. இல்லை என்று உன் வாய் சொன்னாலும், முணுமுணுக்கும் உன் உதட்டோர சிரிப்பும்,
படபடக்கும் உன் கண் அசைவும், பட்டென காட்டுதடி கண்மணியே உன் காதலை!
69. புரியாத புதிர் புத்தகமான உன்னை தினம் தினம் ஒரு பக்கமாக படிக்க படிக்க,
உன்னில் மூழ்கினேன் மீண்டு எழ வழியும் தெரியவில்லை, மீண்டு எழ மனம் விரும்பவும்
இல்லை!
70. அடிக்கடி என்னிடம் சண்டை போடு, பிரிந்து போக அல்ல, நான் எப்படி விதவிதமாக,
உன்னை சமாதானம் செய்கிறேன் என்பதை நீ ரசிக்க!
71. பேரன்பிற்கு முட்களே இல்லாத ரோஜாக்களை பிரசவிக்க தெரியாது! ஆனால்,
உங்களுக்கான ரோஜாக்களில் முட்கள் கீறாமல் பார்த்து கொள்ள தெரிந்திருக்கும்!
72. முகங்களைக் கண்டு அன்பு காட்ட வேண்டாம்! மனத்தினை கண்டு அன்பு காட்டுங்கள்!
முகத்தின் அழகு மாறிடக் கூடியது; மனத்தின் அழகு மாறுவதில்லை!
73. நீ உன் பிடிவாதத்தின் உச்சத்தில் இருக்கிறாய், நான் உன்னை
பிடித்துவிடவேண்டும் என்ற உச்சத்தில் இருக்கிறேன். "இறங்கி வா இருவர்
ஒன்றாவோம்"
74. ஒரு இதயத்தை உண்மையாக நேசித்து பார்... ஆயிரம் இதயங்கள் உன் அருகில்
இருந்தாலும், உன் கண்கள் நீ நேசிக்கும் இதயத்தை மட்டும் தேடும்...
75. என் இதயம் துடித்து கொண்டு இருப்பது உயிர் வாழ அல்ல உன்னோடு வாழ!
76. நீ எவ்வளவு வெறுத்தாலும்.. திரும்ப வந்து பேசுவதற்கு காரணம்.. வேறு யாரும்
இல்லாமல் அல்ல... உன்னை தவிர வேறு யாரும் வேண்டாம் என்பதனால்!
77. நீ உச்சரித்த பின்புதான் தெரிந்தது, என் பெயர் எவ்வளவு அழகு என்று!
78. அன்பினை வெளிக்காட்டுபவர்களாய் இருங்கள்! அப்போது தான், எவரும் அன்பிற்கு
ஏங்க மாட்டார்கள்!
79. நான் மாற்ற முடியாமல், மனம் விரும்பிக் காணும் காணொளி நீ!
80. அறிமுகம் இல்லாமல் வரும் காதல் அழகானது! அதை உணரும் தருணங்கள் இன்னும்
ஆழமானது! இரண்டையும் இனிமையாக்கும், காதலின் நினைவுகள்!
81. காதலும் ஒரு வகை போதை! நதி அதில் மூழ்கிவர்களும் உண்டு,
முத்தெடுத்தவர்களும் உண்டு!
82. மழையைக் கண்டவுடன் நடனமாடும் மயிலைப் போல், உன்னைக் கண்டதும்
நடனமாடுகிறது என் மனம்!
83. கண்டபடி பேசும் நான், உன்னை கண்டவுடன் பேச்சே வருவதில்லை!
84. மொழி பேசும் உதடுகளை கவிபேச வைத்தது, நம்காதலின் வெற்றியடி, இதற்கு
தோல்வி என்பது இல்லையடி!
85. அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்!
86. எனக்குள் தோன்றிய ஆசைகளை உனக்குள் மட்டுமே விதைக்கிறேன்! மரமாக வளர்ந்து,
காதலாக மலரும் என்ற நம்பிக்கையில்!
87. நம் அழகு என்பது முகத்திலோ, நிறத்திலோ இல்லை! நாம் இருவரும் வாழும்
விதத்தில் உள்ளது!
88. உன் கரம் பற்றி சிகரம் தொட வேண்டும், உன் அரவணைப்பினாலும் அளவில்லா
அன்பினாலும்!
89. தடமின்றி தடுமாறிப் போகிறேன் நம் விழிகள் சந்திக்கும் வேளைகளில்,
கண்களால் உணர்த்தும் உன் காதலின் ஆழத்தினால்!
90. தட்டுத் தடுமாறி நான் காதல் செய்தால், திட்டம் தீட்டி காதல் என்னை
செய்கிறது!
91. எத்தனையோ பேசிய, எத்தனையோ வாதாடிய இதழ்கள் ஏனோ, மௌனம் தழுவின... நாம்
ஒன்றாய் சந்தித்த போது!
92. இவர்கள் காதல் செய்வதை உலகமறியா வண்ணம் இருக்க, தினந்தினம் வானம்
நடத்தும் நாடகமே இந்த இரவு!
93. நான் உன்னை ரசிப்பதை அறிந்து செய்வதறியாமல் நீ செய்யும் செயல்களே, என்
காதல் பொக்கிஷங்கள்!
94. ஒளியச் சொல்கிறாய், நான் நெளிந்து செல்கிறேன்! உன் கார்மேகக்
கூந்தலுக்குள் நான் வாழ இடம் தேடி!
95. ஒருவர் மீதிருக்கும் கோபத்தின் நேர அளவை நிர்ணயிப்பதே, அவர்கள்
மீதிருக்கும் அன்பின் அளவு தான்!
96. பேசிக்கொள்ள வேண்டாம்! சிரித்து கொள்ள வேண்டாம்! சற்று நேரம் உன்
இருப்பை கொடு போதும்!
97. வாடா மலராய் நீ இருக்க, வாடும் மல்லிகை ஏன் கூந்தலுக்கு?
98. உனைக் காணும் போதெல்லாம் எனைத் தென்றல் தீண்டுகிறது! உன் பார்வையோ உன்
சுவாசமோ என நான் அறியேன்!
99. பூந்தென்றலும் தோற்றுப்போகும், உன் புன்னகையைப் பார்க்கையிலே! எவன்
கர்வமும் கலைந்து போகும், உன் ஒற்றைப் பார்வையிலே!
100. என்னவளின் கரம் பிடித்து காதல் செய்தபடி கதைத்துக்கொண்டே செல்லும்
நெடுந்தூர நடைப்பயணம் என் வலிகளுக்கு மருந்தாகிறது!
101. தனக்கே வலித்தாலும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கு வலிக்கக் கூடாது என்று
நினைப்பது தான், உண்மையான அன்பு!
102. என் இதயத்தை தேடி அலைகிறேன், இவளது விழியினை காண்கையில்! இதனை ஏனென்று
அறிய விரும்பவில்லை, இவளின்றி வாழ்ந்திடவும் இயலவில்லை!
Best Love Quotes in Tamil
♥️Kadhal Kavithai
Husband Wife Happy Quotes in Tamil
கோபம் காதல்
Happy Love Quotes in Tamil
காதலி கவிதை
Best Love Quotes in Tamil
Beautiful Love Quotes in Tamil
காதலர்கள் கவிதை
Love happy Quotes in Tamil
happy Love Quotes in Tamil Text
Couple Quotes in Tamil
உண்மையான அன்பு
Kadhali Kavithaigal
காதலன் கவிதை
Tamil Quotes about Love
True Love Quotes
Tamil Instagram Love Captions
Love kavithai
Happy Kadhal Kavithaigal Status
Kadhal Kavithaigal in Tamil Text
Best Kadhal Kavithai
Tamil WhatsApp Love Quotes
Love SMS in Tamil
Tamil Love WhatsApp Status
Love You Kavithai in Tamil
True Kadhal Kavithai in Tamil
Unmai Kadhal Kavithai in Tamil
Love Quotes in Tamil
True Love SMS in Tamil
Happy Love Quotes in Tamil
Best Love Quotes in Tamil
Romantic Kadhal Kavithaigal Tamil
Tamil Kadhal Kavithaigal
Deep Love Quotes in Tamil
சிறந்த காதல் கவிதைகள்
காதல் அன்பு கவிதைகள்
Love Quotes in Tamil
Love SMS Kavithaigal
love quotes in tamil
Kadhal Kavithaigal
Tamil Love SMS
Love SMS Text
Tamil Kadhal Kavithaigal
Love Quotes kadhal Kavithaigal
Love Whatsapp Status in Tamil
Love SMS in Tamil
Tamil Love Whatsapp Status
True Love Status Images in tamil
Love Status Images in Tamil
Love Quotes in tamil
Love Kavithai in Tamil
Love Quotes in Tamil
Love SMS in Tamil
Tamil Lovers Quotes
Tamil Happy Love Quotes
Love Happy Quotes in Tamil
Beautiful Love
Best Tamil Love Quotes
Post a Comment