Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

தமிழ் பொன்மொழிகள் - Tamil Ponmoligal Quotes in Tamil

தமிழ் பொன்மொழிகள் - Ponmoligal in Tamil

Quotes Related To,
▶️ Tamil Ponmoligal
▶️ Tamil Ponmozhigal SMS
▶️ Tamil Thathuvam
▶️ Life Thoughts in Tamil
▶️ சிறந்த தமிழ் பொன்மொழிகள் 
▶️ தமிழ் ஒரு வரி பொன்மொழிகள்
▶️ தன்னம்பிக்கை பொன்மொழிகள் 
▶️ ponmozhigal in tamil quotes 
▶️ புதிய பொன்மொழிகள் 

Tamil One Line Quotes
எவன் ஒருவன் தன் அறிவின் அகந்தையால் பிறரை அவமதிக்கிறானோ, அவன் மந்த புத்தியுடையவன்!
Tamil Quotes
வேதங்கள் காட்டும் வழியைப் பின்பற்றாமல் எவனொருவன் வேறு வழியைப் பின்பற்றுகிறானோ, அவன் கையில் இருக்கிற பாயாசத்தை விட்டுவிட்டுப் புறங்கையை நக்குபவனுக்கு ஒப்பானவன்!


 Tamil Quotes

எந்த மனிதர்களின் நல்ல உள்ளத்தில், 'மற்றவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும்' என்னும் எண்ணம் எப்பொழுதும் இருக்கின்றதோ அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நேரும் ஆபத்துகளும் துன்பங்களும் தானாகவே அவர்களை விட்டு விலகி விடுகின்றன. மேலும் அவர்களைத் தேடி செல்வங்களும், இன்பங்களும் எப்பொழுதும் வந்தடைகின்றன. ஆத்மாவைத் தேடுபவர்கள் தவம், பிரம்மச்சரியம் செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கை, தியானம் ஆகியவற்றை மேற்கொள்கிறார்கள். அவர்கள் சூரியப் பாதையை அடைகிறார்கள். இந்தப் பாதை ஆற்றல்களின் உறைவிடம், அழிவற்றது, பயமற்றது. இந்தப் பாதையே லட்சியம். இந்தப் பாதை வழியாகச் செல்பவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. ஆத்மாவைத் தேடாதவர்கள் இந்தப் பாதையை அடைவதில்லை.

❤ Tamil Devotional Quotes

வஞ்சக எண்ணம் கொண்ட மனம் தெளிவடைந்து, இறைவனைக் காண்பது வசந்த காலம்.
Tamil Quotes One Line
கொல்லாமை என்னும் நெறி பலவகையான சுகங்களை அளிக்கவல்லது.
Tamil Ponmoligal
நன்மையாயினும் சரி, தீமையாயினும் சரி, அது விதியினால்தான் ஏற்படுகிறது!
Anna Ponmoligal In Tamil
ஊக்கத்தை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு - அறிஞர் அண்ணா
Tamil Ponmoligal
தனி நபர்களை ஒருவர் கொல்வது எளிது. ஆனால், அவர் கூறிய கருத்துகளை யாராலும் கொல்ல முடியாது - பகத்சிங்
Tamil Ponmoligal
உலகை அறிந்தவன் வெட்கப்பட மாட்டான்! தன்னை அறிந்தவன் ஆணவமாயிருக்க மாட்டான் - சிம்மன்ஸ்
❤Hitler Quotes in Tamil
நீ நண்பனாக இரு! உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசை கொள்ளாதே.
Tamil Motivational Ponmoligal
உன் இலக்கை அடைய வேண்டும் என்றால் முதலில் நீ இரண்டு செயல்களை செய்ய வேண்டும்! முயற்சி, பயிற்சி.
Tamil Ponmoligal
வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது! நாம்தான் நடந்து நடந்து பாதை போடவேண்டும் - டிஸ்ரேலி
Ambedkar Ponmoligal in Tamil
ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து, பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் - டாக்டர் அம்பேத்கர்
Lenin Quotes in Tamil
அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால் அரசியல் உங்கள் வாழ்க்கையில் தலையிடும்! - லெனின்
Tamil Ponmoligal SMS - Edison Quotes in Tamil
என்ன நடந்தாலும், எதை இழந்தாலும் சோர்ந்து போகமாட்டேன்! காரணம் நான் 100 வெற்றிகளை பார்த்தவன் அல்ல! 1000 தோல்விகளை பார்த்தவன் - தாமஸ் ஆல்வா எடிசன்
Tamil Ponmoligal
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும் தொடர்ந்த உழைப்புமே ஆகும். வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.
❤Tamil Ponmoligal SMS Quotes in Tamil
பூமியை விட்டுச் செல்லும் முன் என்னிடம் பாவமே இல்லை' என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்!
Ponmoligal in Tamil
நல்ல சொற்கள் குளிர்ந்த தண்ணீரை விட மிக மிக குளிர்ச்சியானவை!
Tamil Golden Words
நம் வாழ்வில் கிடைக்க முடியாத பெரும் செல்வம் நாம் வீணாக கழிக்கும் ஒவ்வாரு விநாடியும் தான் - கார்ல் மார்க்ஸ்
Tamil Thoughts
வீழ்ந்தாலும் எழும் சூரியன் போல, படிப்படியாய் ஊன்றி மிதித்து முன்னேறு! ஒருநாள் நீயும் வெற்றியாளனே!
Carl Mark's Ponmoligal in Tamil
எதிரி ஆயுதம் ஏந்தாத வரை விமர்சனம் என்பதே ஆயுதம்! அவன் ஆயுதம் ஏந்திவிட்டால், ஆயுதம் என்பதே விமர்சனம்! - கார்ல் மார்க்ஸ்
Annai Theresa Ponmoligal in Tamil
கண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால்... கன்னுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை!
❤Helen Keller Quotes in Tamil
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை- ஹெலன் கெல்லர்.
Nehru Ponmoligal in Tamil
உண்மையைச் சில சமயங்களில் அடக்கிவைக்க முடியும். ஆனால் ஒடுக்கிவிட முடியாது!
Mother Theresa Ponmoligal in Tamil
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு, நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்! அன்னை தெரசா
Tamil Golden Words
வெற்றி என்பது ஒரே நாளில் அடைந்து, மறு நாளில் மறந்து போகிற இலக்கு அல்ல; அது ஒரு தொடர் பயணம்.
Ravindranath Tagore Ponmoligal in Tamil Text
சீர்தூக்கி பார்க்கும் ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால், அதனால் விளையும் தீங்கை வட்டியும் அசலுமாக நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்! இரவீந்திரநாத் தாகூர்.
Tamil Motivational Ponmoligal
நீங்கள் அங்கிகரிக்கப்படவில்லை என்று வருத்தப்படாதீர்கள், அங்கிகரிகாரத்திற்கு தகுதியுடையவர்களாக முயற்சி செய்யுங்கள்!Close