Mothers Day Wishes in Tamil - அன்னையர் தினம் கவிதைகள் 2025
அவளது மார்பை நீ கடித்து இழுத்தாலும், நகத்தால் கீரினாலும், அவள் புன்னகை தான் சிந்துவாள், நீ அவளிடம் பால் குடிக்கும் அழகை பார்த்து...அம்மா உனக்கு அன்னையர் தின வாழ்த்துகள்!
அம்மாவுக்கு வாழ்த்து
தன் உயிரைக் கொடுத்து, மற்றொரு உயிரைக் காப்பாற்றும் ஒரே தெய்வம், அம்மா! அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!
Mothers Day Kavithai
ஊனாகி, உடலாகி, உயிராகி.. உயிர் தந்த அம்மா! உடல் தந்து... உதிரம் பெருக்கி... ஆணோ, பெண்ணோ உருவறியாமல்... உவகை பொங்க பெற்றெடுக்கும் அம்மாவை, நினைக்கும் போதே மனம் கசியும், விழியோரம் கண்ணீர் பெருகும்.. அன்னையர் தின வாழ்த்துக்கள்...
Mothers Day Tamil Poem
இது வரை நான் கண்ட வெற்றி தோல்விக்கான (அனுபவத்தின்) அடித்தளம் என் அம்மா... என்னை பெற்றெடுத்த என் தாய்க்கும் என்னை மகனாக ஏற்றுக் கொண்ட அன்னையர்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!
அன்னைகள் தினம்
இழந்தவன் தேடுவதும், இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு! அன்னையர் தின வாழ்த்துகள்!
உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியத சிம்மாசனம் தாயின் கருவறை! அன்னையர் தின நல்வாழ்த்துகள்!
Mother's Day Thoughts In Tamil
Mothers Day Quotes Tamil
தமிழில் அம்மா என்ற சொல் எப்படி வந்தது என்று எனக்கு தெறியாது... ஆனா அன்பு என்ற சொல் நிச்சயம் அம்மாவிடம் இருந்து தான் வந்துருக்கும்... இந்த உலகத்தில் எனக்கு இறைவன் கொடுத்த முதல் முகவரி அம்மா... #HappyMothersDay
Mothers Day Status In Tamil
அம்மா என்றால் அன்பு. அன்பின் வழியது உயர்நிலை என்பதை தாரக மந்திரமாய் சுமந்து வாழ்வின் எப்படியிலும் நம்மை தாங்கி நிற்கும் அன்னையவளுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்
Mothers Day Kavithai Tamil
இந்த வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஒரே வரம் என் அம்மா உனக்கு, இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!
Happy Mothers Day Wishes Messages In Tamil
பூமி தாங்கும் முன்னே நம்மை பூவாய் தாங்கியவள்! நம் அன்னை! அன்னையர் தின வாழ்த்துகள்!
Mothers Day in Tamil
நான் முதல் முறை பார்த்த அழகிய பெண்னின் முக தரிசனம் அம்மா! Happy Mothers Day!
அரவணைக்கும் அக்காவும் அன்னையே! தாங்கி கொள்ளும் தங்கையும் அன்னையே! தோள் சாயும் தோழியும் அன்னயே! மாலை இட்ட மனைவியும் அன்னையே! எனை ஈன்றெடுத்த அன்னைக்கும், அன்னையாய் இருக்கும் பெண்மைக்கும், இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!
Tamil Amma Kavithai
மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்! என் அம்மா காலில் மிதிபட அல்ல! என்னை சுமந்த அவளை ஒரு முறை நான் சுமப்பதற்காக!
Annaiyar Dhinam Vazhthukkal In Tamil
Annaiyar Dhinam Kavithai
ஈரைந்து மாதம் எடையோடு சுமந்தவள்! நிலையறியும் பருவம் வரை எனக்கென வாழ்ந்தவள்! என் இரு கண்கள் உறங்கிட அவள் விழிகள் விழித்துக்கொள்வாள்! என் பசியை தீர்த்திட உடலின் உதிரத்தை பாலாக அன்பின் வடிவில் எனக்கூட்டிய தெய்வம்! Happy Mothers Day!
Mothers Day Quotes in Tamil
கருப்பை ஒன்றை காதலோடு சுமக்கிறாள்! வலி என்று தெரிந்தும் வரம் கேட்கிறாள்! மறு பிறவி எடுத்து உனக்கு உயிர் தருகிறாள் அம்மா!
Happy Mother's Day யாராலும் கொடுத்திட முடியாத துன்பம் நான் கொடுக்க, இன்முகத்தோடு ஏற்று கொண்டவள்! தன் உயிரை துச்சமாய் எண்ணி எனக்கு உயிர் கொடுத்தவள்! தனக்கு உணவு இல்லாத போதும், எனக்கு உணவளித்து என் முகம் பார்த்து மகிழ்ந்தவள்! யார் சொன்னது தெய்வம் உருவமற்றது என்று? நான் பார்க்கிறேன் தினமும் என் தெய்வத்தை என் தாயாக!
அம்மா! உனக்கு பிறப்பேன் எனில், மறுஜென்மம் வேண்டி தவம் இருப்பேன்! அன்னையர்தின வாழ்த்துகள்!
அம்மாவிற்கு நன்றி
என் பிறப்பிற்கு உன் உயிரை தந்தவளே, கருவாய் என்னை சுமந்து சென்றவளே, என் வளர்ப்பிற்கு உன் இரத்தத்தை சிந்தியவளே, கலங்காமல் உன் இதயத்தில் காத்தவளே, என் பெயர் காக்க உன் தியாக மழை பொழிந்தவளே, அருள் மழையாய் பாசம் தந்தவளே அம்மா! உனக்கு என் நன்றிகள்!
தன் உயிரை தந்து உன் வாழ்வை காப்பவளே, அம்மா! உனக்கு என் நன்றிகள்!
Post a Comment