25+ Best Love Conversation Kavithai in Tamil
Love Conversation Kavithai in Tamil
பேசாத பொழுதெல்லாம் கடிகார முட்களுடன் சண்டையிடுகின்றேன், நகராத பொழுதிற்காக!
-
ஏதுமில்லை என்றாலும், எதையாவது பேசிக் கொண்டிருக்கும் உரையாடல்கள், எதார்த்ததின் அழகியல்கள்!
-
நேரம் கிடைக்கும் போது பேசும் உறவுகளை விட, நேரம் எடுத்து பேசும் உறவுகள் கிடைப்பதெல்லாம் வரம் தான்!
-
போதும் என்று தோன்றியதே இல்லை, உன்னிடம் பேசும் போது மட்டும்...
-
பேசியதை விட, பேச வேண்டும் என்று நினைத்ததும், பேசுவாயா என்று ஏங்கியதும் தான் அதிகம்!
காதல் பேச்சு
தினமும் அதிக நேரம் பேசவில்லை என்றாலும், அன்பில் குறைவு இல்லை...
-
விழி கண்டதும், விடையாகாத குறுஞ்செய்திகள் விதியாக நீள்கிறது, பேசிக்கொள்ள ஏதுமில்லை என்று!
-
என்னவெல்லாம் பேச வேண்டும் என்று யோசித்தது இல்லை! 'பேச வேண்டும்' அவ்வளவு தான்...
-
பேசி முடித்துவிட்டாலும் சரி, பேசுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் சரி, 'பேசிக் கொண்டே இருக்க வேண்டும்' என்று சிலரிடம் பேசும் போது மட்டும் தான் தோன்றுகிறது!
-
சில மணிநேரம் பேசிவிட்டு, பல மணிநேரம் நினைக்க வைக்க சிலரால் மட்டுமே முடியும்!
Love Messaging Quotes in Tamil
நேரம் கிடைக்கும் போது பேசுகிறவர்களை விட, பேசுவதற்காகவே நேரத்தை ஒதுக்குபவர்கள் கிடைத்தால் வரம் தான்...-
எப்போதும் பேசுகிறவர்கள் என்று பேசவில்லலையோ, அன்று எப்போதும் போல் இருக்க முடியவில்லை!
-
யோசிக்காமல் பேசும் நீ தான் - இப்போது பேசவே யோசிக்கின்றாய்!
-
காத்திருப்பதும் சுகம் தான்... சில மணி நேரம் பேசுவதற்காக, பல மணி நேரம் காத்திருந்த போது....
-
மணிகணக்காய் பேசுபவர்களை விட, மனம் விட்டுப் பேசுபவர்களைத் தான் மனம் அதிகம் தேடுகிறது...
-
Lovers Speaking Quotes in Tamil
-
பேசவில்லை அதனால் பேசவில்லை என்று சொல்லும் உறவுகளை விட, பேசவில்லை அதனால் பேசுகிறேன் என்று சொல்லும் உறவுகளுக்கு ஆயுள் அதிகம்!
-
மணி கணக்கில் பேசினாலும் நிமிடத்தில் ஏன் முடிந்ததென தோன்றும்! பிடித்த பாடகரின் சலிக்காத பாடல்கள் போன்றது, உன் உரையாடல்!
-
அவசியம் இருந்தால் மட்டும் பேசும் உறவுகளுக்கு மத்தியில், அன்புக்காக பேசும் சிலர் கிடைத்தால் அது நாம் பெற்ற வரம்!
-
WhatsApp Lovers Conversation in Tamil
-
Post a Comment