Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Actress Sai Pallavi Birthday Status - சாய் பல்லவி பிறந்தநாள் ஸ்டேட்ஸ்

Actress Sai Pallavi Birthday Status Videos

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக வந்து இளைஞர்கள் மனதைக் கொள்ளை கொண்ட அழகுப் பதுமை சாய் பல்லவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Happy Birthday Sai Pallavi

சாய்பல்லவி பிறந்தநாள்

தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தமிழரான சாய் பல்லவி தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் புகழை அடைந்தது ‘பிரேமம்’ என்னும் மலையாளப் படம் வழியாகத்தான். ‘பிரேமம்’ படத்தின் மலர் டீச்சராக தென்னிந்திய நெஞ்சங்களைக் குறிப்பாக தமிழ் ரசிகர்களைக் கொள்ளைகொண்ட சாய் பல்லவியின் பிறந்த நாள் மே 9 ஆம் தேதி.


அறிமுகம்

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படத்தில் அவர் நடித்த ‘மலர்’என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.


அதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.
நடிகைகள் சிலர் பத்து படங்களில் நடித்தாலும் கூட சொல்லிக் கொள்வது போல் ஒரு கேரக்டரோ, பாடலோ கிடைக்காது.



ஆனால் சில நடிகைகள் ரெண்டே படங்களில்  தேசிய புகழ் அடைவார்கள். ஆனால் நடிகை சாய் பல்லவியோ இவை அத்தனையையும் தூக்கி சாப்பிட்டவர்.


மலர் டீச்சர்


தாறுமாறான நடன திறமை, பாந்தமான அழகு, நீட் நடிப்புத்திறமை இவை அனைத்தும் கலந்த ஒரு கலவைதான் சாய் பல்லவி.  சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் கன்னாபின்னா ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தின் ‘மலர் டீச்சர்’ பாத்திரத்துக்கு மலையளவு நியாயம் செய்தவர் சாய் பல்லவி. 


ரௌடி பேபி

அந்தப் படம் அவரை தென்னிந்தியா முழுக்க அடையாளப்படுத்தியது. அதன் பின் தனுஷுடன் அவர் நடித்த ‘மாரி 2’ படத்தில், ‘ரெளடி பேபி’ பாடலில் அவர் ஆடிய நடனமோ இன்று உலக அளவில் டிரெண்டிங் பாடல்களில் ஒன்றாக உள்ளது. இப்படி ஒரு படம், ஒரு பாடல் என சிம்பிள் ரூட்டில் செம்ம உச்சம் தொட்டவர் சாய்பல்லவி.


நடனம்

மலையாளத்தில் மட்டுமில்லாது, தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் முதல் படத்திலேயே தன் வசப்படுத்தினார். இந்தப் பயணத்தில் அவருக்கு உறுதுணையாக இருப்பதில், அவரது நடனத் திறனும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது சமீபத்திய 'யூடியூப் ஹிட்ஸ்'களே சான்று.


டான்ஸ் ஷோ


சிறு வயது முதலே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்த சாய் பல்லவி 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தததும் தெரியவந்தது. ஈ டிவி தெலுங்கில் ஒளிபரப்பான 'தி அல்டிமேட் டான்ஸ் ஷோ'விலும் கலந்து கொண்டு கலக்கியவர்.



மலையாளத்தை விட தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம்.தெலுங்கில் ஃபிடா என்ற படம் மூலம் சாய் பல்லவி அறிமுகமானார்.அதையடுத்து தொடர்ந்து படங்கள் நடித்தார்.
கடந்த ஆண்டு நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த லவ் ஸ்டோரி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தற்போது நானியுடன் இணைந்து நடித்த ‘ஷியாம் சிங்கா ராய்’ படம் வெளியாகிவுள்ளது.

பாவக்கதைகள்

தமிழில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான அந்தாலஜி திரைப்படமான பாவக்கதைகள் படத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார்.அதன் பின்பு எந்த நேரடி தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை. நடிகை சாய் பல்லவிக்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

தமிழ்ப் பெண்ணான இவர் தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்ற ஏக்கம் தமிழ் ரசிகர்களிடையே இருந்தது. இந்நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'கரு' மூலமாக தமிழில் கால் பதித்தார். அறிமுக படத்தில் எந்தக் கதாநாயகிகளும் ஏற்க தயங்கும், அம்மா கேரக்டரை மிகவும் அழகாக கையாண்டார். அதுவும் அபார்ஷன் செய்யப்பட்ட குழந்தையின் ஆத்மாவிற்கு அம்மாவாகவும், காதல் கணவரின் உயிரை காக்கப் போராடும் மனைவியாகவும் நடிப்பில் வேற லெவலுக்கு மிளிர்ந்தார்.




'மாரி 2' ஆனந்தி கதாபாத்திரம் சாய் பல்லவி ரசிகர்களால் மறக்க முடியாததாக அமைந்தது. இந்தப் படத்தில் சாய் பல்லவியின் நடன வேட்கைக்கு சரியான சவாலாக 'ரவுடி பேபி' பாடல் அமைந்தது. பிரபுதேவா கோரியோகிராபியில் தனுஷ், சாய் பல்லவி ஆட்டம் போட்ட 'ரவுடி பேபி' பாடல் தற்போது வரை 1200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்தப் பாடலில் சின்ன, சின்ன ஸ்டெப்ஸ்களில் கூட தனுஷுக்கே டஃப் கொடுத்து அசத்தினார்.

அலட்டல் மேக்கப், ஓவர் ஆக்டிங் இல்லாமல், நீண்ட தலைமுடி, முகத்தில் அங்காங்கே சின்னச் சின்ன பருக்கள், உதட்டோரம் எப்போதும் பளீச் புன்னகை என பாந்தமான அழகுடன் பக்கத்து வீட்டுப் பெண் போல் வலம் வருகிறார் சாய் பல்லவி. அத்தோடு கதையையும், தன்னுடைய கதாபாத்திரத்திரத்தையும் தெரிவுசெய்து நடித்து வருகிறார். தனது நடனம் மற்றும் நடிப்பை மட்டுமே நம்பி திரையுலகில் நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவி மீது ரசிகர்களுக்கு துளியும் கூட கவனம் குறையாதது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்து வரும் நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ








Thanks & Credits To,
1. News18Tamil 1, 2

Close