Friendship Love Quotes in Tamil - நட்பு காதல் கவிதைகள் 2025
தோழன் தோழி காதல் கவிதைகள் - Boy Girl Friendship Love Quotes in Tamil
Related Searches,
அவன் அருகில் நானும், என் அருகில் அவனும் குழந்தைகளாய்! அழுகையையும் ஆனந்தகளையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களாய்! காரணங்களையும் சூழ்நிலைகளையும் தாண்டி அலாதி அன்பினால் நிறைந்து எங்களுக்கான சிறிய உலகில் சிறகடித்து பறக்கிறோம்!
வாழ்க்கையே வரம் தான், நாம் நேசித்த ஒருவரை விட, நம்மை நேசித்த ஒருவர் Life Partner ah அமையும் போது!
அவள் கை பிடிக்கும்போதெல்லாம், இரு கைகளுக்கிடையில் ஒற்றை கானல் ரோஜா பூத்து கொண்டே தான் இருக்கிறது!
தீக்கனலின் மேல் நின்றாலும், என் கரம் பிடித்து நீ உடன் இருக்க, அக்கனலும் வருந்துதடி, உன்போல் ஓர் துணையில்லை என்று - என் உயிர்த்தோழி!
நட்பு என்னும் நூலகத்தில் நான் கண்ட புத்தகம் நீ! சில புத்தகங்கள் சிறுகதையில் முடிந்து விடும். நீ மட்டும் தொடர் கதையாக என் மனதில்!
அழகான நேரத்தையும், ஆழமான உணர்வையும், வஞ்சகமில்லா மனதையும், உன்னுடன் இருக்கையில் உணர்ந்தேனடா... என் அன்புத்தோழா!
காதலுள் தோழமை அவசியம் எனில், தோழமையுள் காதல் காண்பதில் என்ன பிழை?
Post a Comment