சிறந்த தமிழ் தத்துவங்கள் - Good Thoughts in Tamil 2025
சிறந்த தமிழ் தத்துவங்கள் - Good Thoughts in Tamil
Related Searches,
▶️ Good Thoughts in Tamil
▶️ Positive Thoughts in Tamil
▶️ Life Thoughts in Tamil
▶️ Love Thoughts in Tamil
▶️ Motivational Thoughts in Tamil
▶️ Best Thoughts in Tamil
💫Life Thoughts
எதையும் நம்பாமல், ரசித்தலோடு நகர கற்றுக்கொண்டால், வழியெங்கும் வாசம் மட்டும் நிறைந்திருக்கும்!
குறையை தனிமையில் சொல், குணத்தை கூட்டத்தில் சொல்!
Vazhkai Thathuvam in Tamil
தூய எண்ணம் கொண்டிருங்கள்... ஏனெனில், எண்ணத்தின் பிரதிபலிப்பே, வாழ்க்கை!
நட்பாயினும் உறவாயினும் நாலடி தள்ளியே நில்லுங்கள். இடைவெளி உள்ள உறவே, இடையில்
விலகாது தொடரும்!
உன் துயர் துரத்த, என் தோள் தருவேன்! உன் கண்ணீர் துடைக்க, என் கைகள் தருவேன்! உன் கவலை மறக்க, என் மடி தருவேன்! நீ விரும்பிக் கேட்டால், என் உயிரையும் தருவேன்!
இன்பமின்றி வாழ்தலும் இனிமை என்பர், தோல்வியை கண்டு துவளாதோர்! இருப்பினும் தோழமை
இல்லாவிடில், இறப்பினும் மிகக்கொடியது என்பர்!
எதையும் எதிர்பாராமல் நமக்கு நல்லது நினைக்கும் குணம் நட்பிற்கு மட்டுமே உண்டு!
நீ மட்டும் தனித்து தெரிய வேண்டும் என்றால் அறிவாளிகளின் கூட்டத்தில்
முட்டாளாகவும், முட்டாள்களின் கூட்டத்தில் அறிவாளியாகவும், இருக்க வேண்டும்!
உள்ளம் மலராக இருந்தால், மொழியில் நல்ல மணம் இருக்கும்!
One Line Vazhkai Thathuvam in Taamil
வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஓர் அழகான மொழி, புன்னகை!
Reality Thoughts
எல்லாரிடமும் அன்பா இருக்கலாம்... ஆனா யாரோட அன்புக்கும் அடிமையாக இருக்கக் கூடாது
வாழ்வில் இன்ப துன்பம் சுழலும் சக்கரம் போன்றது, இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே
இருக்கும்.
திறந்த புத்தகம் போல வாழ்க்கை இருந்தால், நல்லன நிறைந்த பக்கங்களிருக்கும்,
தீமைகளுக்கும் பக்கங்களிருக்கும், அடுத்த தலைமுறை தேர்ந்தெடுக்க!
என்ன வாழ்க்கை? என்ற எண்ணம் மாற, கிடைத்த வாழ்க்கையை நமதாக்கி, இன்பச் சிறகினில்
பறப்போம்! சொர்க்கமும் நம்மைக் கண்டு வியக்கும்!
நிதானம் தவறினால், நிம்மதி இல்லை. வாக்கு தவறினால், மரியாதை இல்லை. சிந்தனை இல்லா
சிறப்புகள் இல்லை. கவலையில்லா மனிதனும் இல்லை.
சூழ்நிலைகள் மாறும் போது, பலரது வார்த்தைகள் மாறும்! சிலரது வாழ்க்கையும் மாறும்!
நாம் அனைவரும் சிறு சிறு துன்பங்களை புலம்பி தீர்க்கின்றோம்! ஆனால், பெரிய
துன்பங்களை மெளனமாக கடக்கின்றோம்!
பூமி விரிசல் ஏற்படுமென நினைத்திருந்தால், இங்கு செடிகள் துளிர்விடுவதில்லை!
பிறர் மனம் நோகுமென நினைத்தால், ஆசைகளும் கனவுகளும் உருவாகும் போதே
கலைந்திருக்கும்!
பார்ப்பவன் என்ன நினைப்பான் என்று பயத்துடன் வாழாதீர்கள்! படைத்தவன் என்ன
நினைப்பான் என்று பயந்து வாழுங்கள்!
Post a Comment