Love Quotes For Boyfriend in Tamil - காதலனுக்கு கவிதைகள் 2025
அன்பு காதலனுக்கு காதல் கவிதைகள் - Love Quotes For Him in Tamil
▶️ Love Quotes in Tamil
▶️ Love Quotes For Him in Tamil
▶️ Love Quotes For Boyfriend
▶️ காதலன் கவிதைகள்
▶️ தமிழ் காதல் கவிதைகள்
▶️ உண்மைக் காதல் கவிதைகள்
▶️ காதலன் அன்பு கவிதைகள்
அவன் இல்லா இரவுகளில் தேய்வது நிலவு மட்டுமல்ல நானும் தான்!
ஒரு பெண்ணின் அதிகபட்ச ஆசை என்பது தன்னை மட்டுமே காதல் செய்யும் ஒருவனை கணவனாக பெறுவதே!
என் வானில் எட்டாவது வண்ணம் - நீ, என்றுமே எட்டாத வண்ணம் நீ...
நீ என் கனவில் வருவாய் என்றால், பகலிலும் நான் தூங்குவேன்...
உன் தோள்களில் சாய வந்தேன், விழி உறங்க மடி தந்தாய், உன் பார்வை போதும் என்றேன், பாரம் தாங்க வந்தேன் என்றாய், உன் இதழ் புன்னகைத்தால் போதும் என்றேன், நம் இதழ் சிரிக்கவே விரும்புகிறேன் என்றாய், வானத்தில் நிழலில் உன் கரம் கோர்த்து நிற்கின்றேன்... என் கள்வனே நீ மணப்பாய் என்று..
கூட்டத்தில் நீயும் நானும் நிற்கும் போது, உனது ஒரு செல்லப் பார்வை, கள்ளத்தனமாக என் மீது படாதா என்று காத்திருக்கிறேன்.
நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை வாசிக்க மறந்தாலும், என்னவனின் குறுஞ்செய்திகளை வாசிக்கத் தவறுவதில்லை!
கந்துவட்டி போல, கள்வனின் கண்கள்! காதல் ஏறிக்கொண்டே போகிறது, அவன் பார்வை பட பட!
எறும்பாய் மொய்த்து விட்டு, கரும்பாய் பேசும் கள்வன், என் காதல்காரன்!
எனக்கான தேடல்களும், தேவைகளும் என்றும் உனக்கானதாகவே இருந்திடல் வேண்டுமடா, என் கள்வனே!
என் கண்ணின் கண்ணீரின் ஆழத்தை எனக்கு உணர்த்தும் கள்வன் அவன்!
மழை மேகம் கண்டு ஆடும் வண்ணமயில் போல, என்னவனின் முகம் கண்டு தலை கால் புரியாமல் தத்தோம் தரிகிடதோம் என்று ஆட்டம் போட்ட நானும் என் கால்களும், தன் நிலை மறந்தோம்!
என்னவனே, உன் விழியால் என் விழியை கைது செய்து காதல் கொள்ளாதே!
சாகும் போதும் தீர்ந்திடாது உயிரே, உன்மீது கொண்ட காதல்!
சாகும் போதும் தீர்ந்திடாது உயிரே, உன்மீது கொண்ட காதல்!
எனக்கு பிடிக்காத ஒன்றைப் பிடித்து நீ செய்தாலும், ரசிக்கிறேன், நீ என் பிரியமானவன் என்பதற்காக!
காதலிக்க மனம் இன்றி, உன் கரம் பிடித்து காதலிக்க காத்திருக்கிறேன், என்னவனுக்கான தேடல்கள்!
என்னவன் உடனிருக்க, என் உயிர் பிரிந்தாலும், என் மனம் பிரியுமோ, உனை தனிமையில் விட்டுச் சென்று!
Post a Comment