Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

கார்த்திகை தீபம் வாழ்த்துகள் - Karthigai Deepam Wishes in Tamil

கார்த்திகை தீபம் வாழ்த்து கவிதைகள் - Karthigai Deepam Quotes in Tamil

Related Searches,
▶️ Karthigai Deepam WhatsApp Status in Tamil
▶️ கார்த்திகை தீபம் வாழ்த்து ஸ்டேட்ஸ்

கார்த்திகை தீபம் என்றால் என்ன?


கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று வீடுகளில் அகல் விளக்குகளால் அலங்கரிப்பது தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் நடைமுறை. அதுவே கார்த்திகை தீபம் என்று வழங்கப்படுகிறது. இது சிவபெருமானின் திருத்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாளில் அவல் பொரியும், நெல் பொரியும் வெல்லப்பாகில் இட்டு, ஈசனாகிய சிவபெருமானுக்குப் படைப்பது வழக்கம். ஈசன் ஜோதி வடிவானவன் என்பதை விளக்கவே இந்த தீப வழிபாடு.

திருக்கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபங்களை யார் பார்த்தாலும், ஏன் விலங்குகள் பார்த்தாலும் கூட அவைகளுக்கு நீண்ட ஆயுள் உண்டாகும் என்பது ஐதீகம். வட இந்தியாவில் கார்த்திகை அன்று பெண்கள் தீபம் ஏற்றி அதை இலையில் வைத்து ஆற்றில் விடும் வழக்கம் உள்ளது, இப்படிச் செய்தால் தங்கள் உடன் பிறந்தவர்கள் நிண்ட ஆயுள் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

கார்த்திகை தீபதில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?

வீடுமுழுக்க எண்ணற்ற விளக்குகளை ஏற்ற வேண்டும். குறிப்பாக 27 விளக்குகள் ஏற்றுவது என்ற முறை உண்டு. இந்த 27 விளக்குகள், 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். இப்படிச் செய்தால் சகல சவுபாக்கியங்களும் மங்களங்களும் வாழ்க்கையில் கிடைக்கும். 27 விளக்குகள் ஏற்ற முடியாதவர்கள், குறைந்தது 9 (நவகிரகங்களுக்கு) தீபங்களை ஏற்றலாம். முக்கியமாக ஒற்றைப்படை எண்ணிக்கையில் விளக்கை ஏற்றுவது சிறப்பு. குறைந்த பட்சம் 3 தீபங்களாவது ஏற்ற வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒன்று உங்கள் குடும்பத்துக்காக, மற்றொன்று உங்கள் மூதாதையர்களை வழிபட, மூன்றாவது விளக்கு உங்கள் எதிர்கால சந்ததிகள் நலமுற்று வாழ என்று கூறப்படுகிறது.

வீட்டு முற்றத்தில் 4 விளக்கு, சமையல் கூடத்தில் 1 விளக்கு, நடையில் 2 விளக்கு, வீட்டின் பின்புறம் 4 விளக்கு, திண்ணையில் 4 விளக்கு, மாட குழியில் 2 விளக்கு, நிலைப்படிக்கு 2 விளக்கு, சாமி படத்துக்கு கீழே 2 விளக்கு, வெளியே யம தீபம் ஒன்று, திருக்கோலம் இட்ட இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றவேண்டும்!

கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்ற சரியான நேரம் எது?


கார்த்திகை மகா தீப நேரம் மாலை 6
மணி என்பதால், மாலை 6 மணிக்கு
ஏற்றுவது நல்லது. மாலை 4:30 மணிமுதல் 6 மணிக்குள் தீபம் ஏற்றுவது சிறப்பு!




🔺Karthigai Deepam Kavithai Tami
அனைவரும் நலமோடு வாழ வேண்டி நீங்கள் ஏற்றும் தீபம் போல், எல்லோர் வாழ்விலும் சங்கடங்கள் விலகட்டும்! இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள்!
Happy Karthigai Deepam Quotes Tamil
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கார்த்திகை தீபம் நல்வாழ்த்துகள்!


கார்த்திகை தீபம் வாழ்த்துகள்
அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்! தீபத்திருநாளை கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும், கார்த்திகை திப திருநாள் வாழ்த்துகள்!

கார்த்திகை தீபம் வாழ்த்துகள் SMS
தீமையின் இருள் நீங்கி, உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும்! இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள்!

🔺Happy Karthigai Deepam Status in Tamil

அன்பு என்னும் தீபத்தால், பாசம் எனும் ஒளி உலகம் எங்கும் பரவட்டும்! இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள்!


Karthigai Deepam Status Tamil Text

அன்பென்னும் ஒளி ஏற்றி, இணைந்தே கொண்டாடுவோம்! தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.


Kaarthigai Deepam Tamil Kavithai
இருள் நீங்கி ஒளி பெருகட்டும்! துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்! அனைவருக்கும் உள்ளம் கனிந்த இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.

🔺Karthigai Deepam Tamil Wishes Images

வரிசையாய் விளக்கேற்றி, இருளை விலக்கி, அருளை சேர்த்து இனிமையாய் கொண்டாடுவோம் கார்த்திகை தீபத் திருநாளை!

Happy Kaarthigai Deepam Wishes in Tamil
என்றென்றும் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி ஓளி பொங்க, கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!
Karthigai Deepam Status in Tamil

இந்த தீபத் திருநாள் உங்கள் வாழ்வில் ஈடில்லா மகிழ்ச்சியை அள்ளித் தரட்டும்! இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!

Happy Karthigai Deepam in Tamil

அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்! தீபத் திருநாளைக் கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும், இனிய திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்!


கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்
இல்லங்களில் உள்ள சுமைகள், கஷ்டங்கள் நீங்கி, வாழ்வில் இன்பம் சுடர் விட்டு பிரகாசிக்கட்டும்! இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!

Happy karthigai Deepam in Tamil

அனைவரின் வாழ்விலும், துன்பங்களை தீபங்களால் சுத்தம் செய்து, இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்! இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள்!


Deepam Wishes in Tamil

இன்று முதல் உங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமையட்டும்! மகிழ்ச்சியான இந்த இனிய நாளில், அனைவருக்கும் என் மன்மார்ந்த, இனிய கார்த்திகை தீப திருநாள் நல்லாழ்த்துகள்!

இன்பம் பொங்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள்!

உங்கள் வாழ்கையில் துன்பங்கள் எல்லாம் கரைந்து போக, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, நினைத்ததை எல்லாம் சாதிக்க, அன்புசொந்தங்கள் அனைவருக்கும், திருக் கார்த்திகை நல்வாழ்த்துக்கள்!

Deepam Wishes in Tamil 
கார்த்திகை தீப திருநாள் நல்லாழ்த்துகள்! வெளிச்சம் இருளை அகற்றுவது போல், இந்த இனிய திருநாளில் உங்கள் துன்பங்கள் அகன்று, இன்ப ஒளி வீசட்டும்!
Happy Karthigai Deepam Wishes in Tamil

அனைவரும் நலமோடு வாழ வேண்டி நீங்கள் ஏற்றும் தீபம் போல், எல்லோர் வாழ்விலும் சங்கடங்கள் விலகட்டும்! கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!


கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்
இந்த தீபத்தின் ஒளியைப் போல் உங்கள் வாழ்விலும் கவலையின் இருள் நீங்கி, வெளிச்சம் என்னும் சந்தோஷம் பரவ வாழ்த்துக்கள்! கார்த்திகை தீபம் நல் வாழ்ந்துக்கள்!
Kaarthigai Deepam Wishes in Tamil


Close