Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

புத்தக தினம் கவிதைகள் - Book Day Quotes in Tamil

புத்தகம் என்பது காரிருளில் செல்பவர்களுக்குப் பேரொளியாகவும், வழி தவறியவர்களுக்கு ஓர் வழிகாட்டியாகவும் திகழ்கின்றன. உலகின் பெரிய மாமேதைகள் அனைவருமே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தின் மூலம் உருவானவர்களே. 


உலக புத்தக தினம் வரலாறு

ஏப்ரல் 23 - உலக புத்தக தினம். உலகம் கொண்டாடும் நாடகங்களை எழுதிய ஷேக்ஸ்பியர் நினைவு தினத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக புத்தக தினமாக அறிவித்துள்ளது.

இன்றைய குழந்தைகள் அனைவருக்கும் புத்தகம் வாசிப்பின் பயனைப் பெற்றோர்கள் எடுத்து சொல்ல வேண்டும். ஒருவர் பயிலும் சிறந்த புத்தகமே அவரின் சிறந்த நண்பனாக இருக்கும். வாசிப்பை நேசிப்போம்!

Related Searches,
▶️ Kavithai About Books in Tamil
▶️ Book Day Quotes in Tamil
▶️ புத்தக தினம் கவிதைகள்
▶️ உலக புத்தக தினம் கவிதை
▶️ புத்தகம் பற்றி அறிஞர்கள்
▶️ Book Quotes in Tamil


புத்தகத்தில் உலகைப் படித்தால், அறிவு செழிக்கும்! உலகத்தையே, புத்தகமாகப் படித்தால், வாழ்க்கை செழிக்கும்!

எழுத்துக்களின், எண்ணங்களின், சிந்தனைகளின், கற்பனைகளின் உருவடிவம் - புத்தகம்!

எப்போதும் வசந்தகாலம் தான் - ஒரு புத்தகத்தோடு வாழ்பவனுக்கு - சீனப் பழமொழி

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால், அவனைக்
காட்டுங்கள் அவனே எனது வழிகாட்டி - ஜூலியஸ் சர்

புத்தகங்களை வாசிக்காத ஒருவனுக்கும், வாசிக்க முடியாத ஒருவனுக்கும் எந்த நன்மை செய்யக்கூடிய வித்தியாசமும் இல்லை - மார்க் ட்வைன்

💛புத்தக தினம்

தனிமையில் உம்மை வாசித்தேன் - எம் வாழ்க்கை உணர வைத்தாய், எம் உயிரின் உணர்வாய்! என்றென்றும் நீ எம் ஆயிருர் நண்பன்! உலக புத்தகம் தினம்!

போதும் என்று நொந்துபோய் புதுவாழ்வைத் தேடுகிறீர்களா? ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு - இங்கர்சால்

உலகத்தையே தனக்குள் வைத்துக்கொண்டு எவ்வளவு தன்னடக்கமாக உள்ளது - புத்தகம்

புத்தகத்தை நேசித்து வாசித்தால், அதன் கருத்துகள் உன்மூலம் சுவாசிக்கும்!

ஆசானாய் கோலின்றி கோபமின்றி போதிக்கும்! தேடுதல் தந்திடும், தேடவிடாது தவறெல்லாம் திருத்திடும்! வன்சொல்லில்லாது, என் உலகாயிருக்கும்! மனிதரேயின்றி போனாலும், புத்தகம் போதும் உற்ற நண்பன் போலாகும்!

போதும் என்று நொந்துபோய், புது வாழ்வைத் தேடுகிறீர்களா? புதிய புத்தகம் ஒன்றை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள் - இங்கர்சால்

புத்தகத்தோடு உன் பொழுது கழிந்தால், புதுக்காலை பொலிவோடு உன்வாழ்வு விடியும்!

ஒரு நல்ல புத்தகம் திறந்து கொண்டால், நரகத்தின் வாசல் மூடப்படும் - வைரமுத்து

புத்தகம் சேமித்து பயனில்லை! புத்தகத்தில் உள்ளவை புத்தியில் சேமிக்கப்படவேண்டும்!

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோல மனதுக்குப் பயிற்சி - புத்தக வாசிப்பு! - சிக்மண்ட் ஃப்ராய்டு

💛புத்தக தினம் கவிதைகள்

புரட்சிப் பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே - லெனின்

ஆசானாய் கோலின்றி, கோபமின்றி போதிக்கும், தேடுதல் தந்திடும், தேடவிடாது தவறெல்லாம் திருத்திடும்! வன்சொல்லில்லாது என் உலகாயிருக்கும் மனிதரேயின்றி போனாலும், புத்தகம் போதும், உற்ற நண்பன் போலாகும்!

தலை குனிந்து என்னை பார், தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன். - புத்தகம்

தொட்டுத் தொட்டுப் பார்த்தால், அது வெறும் காகிதம்! தொடர்ந்து படித்தால், அதுவே வெற்றியின் ஆயுதம்!

உண்மையான வாசகன் வாசிப்பதை முடிப்பதே இல்லை - ஆஸ்கார் வைல்ட்

முன்னுரையில் தன்னுரையை முடித்துக்கொள்ளாமல், முடிவுரையில் அடிவரிவரையில் நிள்கிறது புத்தகம்!

உலக புத்தக தினம்! திருப்ப திருப்ப புரிகிறது, உலகம்! படிக்க படிக்க, மூளையும் பெருகும்! நம் கனவுகளை கைப்பற்ற உதவும் ஆயுதம்! எதிரிகளை பறக்கவிடும் சூலாயுதம்!

இந்த வாழ்வின் ஆகச்சிறந்த கேளிக்கை கொண்டாட்டம் ஓசையின்றி நடந்துகொண்டிருக்கிறது.
அதுதான் புத்தக வாசிப்பு - எமர்சன்

கல்வி புத்தகத்தோடு முடிவதல்ல! வாசிப்பு மாணவர்களை செம்மைப்படுத்தும்!

உனைக் கைபிடித்தேன், நண்பன் உணர்ந்தேன்! திறந்திட்டேன், புத்துணர்வு பெற்றேன்! வாசித்தேன், வாழ்க்கை அறிந்தேன்! பின்பற்றினேன், மனிதன் ஆனேன்! நீ புத்தகம் அல்ல, பொக்கிஷம்!

புத்தகம் இல்லாத ஒரு அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது - சிசரோ

எழுத்துகளும் உயிர் பெற்று வாழ்வது, வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ளவரையே!

💛உலக புத்தக தினம்

அறிவாளிகளின் அறிவின் ஆயுதம் தான் - புத்தகம்

ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு "நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா!

ஒரு புத்தகத்தின் உண்மையான விலையை இதுவரை யாரும் கொடுத்து வாங்கியதில்லை! அவர்கள் கொடுப்பது அச்சுக்கூலியும் காகித விலையும் தான். - லூயிகான்

ஆயிரமாயிரம் கருத்துகள் உள்ளிளிருப்பினும் மூடிக்கொண்டு அமைதியாய் தான் இருக்கிறது புத்தகங்கள்!


Close