Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

செவிலியர்கள் தினம் கவிதைகள் - Nurses Day Tamil Quotes

செவிலியர்கள் தினம் - International Nurses Day in Tamil - Nurses Day Quotes in Tamil

Happy Nurses Day Wishes in Tamil

நாடு முழுவதும்  செவிலியர்கள் தினம் (Nurses Day)  மே  மாதம் 12-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. 1820ம் ஆண்டு மே 12ம் தேதி இத்தாலியில் Florence Nightingale -ன் தன்னலமற்ற மருத்துவ சேவையை கவுரவிக்கும் வகையில், நைட்டிங்கேல் பிறந்த தினமான மே 12ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக, 1965ம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. இவர் பொது மக்களுக்கும், போரின்போது பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கி, பலரின் பாராட்டை பெற்றார்.

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; ஒரு வகை தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்பு தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவையே செவிலியர் பணி. கொரொன காலத்தில் இவர்களின் சேவை அளப்பறியது!

Happy Nurses Day in Tamil

உலகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக செவிலியர்கள் இரவு பகல் பார்க்காமல் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி செலுத்துவதற்கு இந்த சர்வதேச செவிலியர் தினம் சிறப்பான நாளாக இருக்கும். தற்போது செவிலியர்கள் கொரோனா வைரசுக்கு எதிராக மிகக் கடுமையாக போராடி வருகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி!

இந்த தினத்தில், செவிலியர்களைப் போற்றுவது நம் கடமை!

Nurses Day Wishes in Tamil

குடும்பம் மறந்து, தூக்கம் மறந்து, தன்னை மறந்து, பிறர் நலம் காக்கும் "தேவதைகள் தினம்" செவிலியர்கள் தின நல்வாழ்த்துகள்!

மருத்துவர்கள் கடவுள் என்றாலும், செவிலியர்கள் நிச்சயம் தேவ தூதர்கள் தான்... தேவதைகள் தான்! செவிலியர் தின வாழ்த்துகள்!
செய்யும் பணிகளில் பலவித முண்டு! பொறுமை சகிப்புத் தன்மை கொண்டு, செவிலியர் செய்வது தொழிலல்ல தொண்டு! இவர்களுக்கு இனிய செவிலியர்கள் தின வாழ்த்துகள்!
குழந்தைகளுக்கு எவ்வாறு தாய் அன்போ, அவ்வாறே நோயாளிகளுக்கு செவிலியர்களின் அன்பு! செவிலியர்கள் மருத்துவ சமூகத்தின் உயிர் நாடி! செவிலியர்கள் தினம் வாழ்த்துகள்!

Nurses Kavithai in Tamil

மருத்துவப் பணியின் உன்னதம் உணர்ந்து, மனித நேயம் கொண்டே சுழல்வார்! மனமது கோணாது சேவைகள் புரிவார்! உலக செவிலியர் தினம் வாழ்த்துகள்!

ஒருவரை மட்டும் கவனிந்தால் அது காதல்! நூற்றுக்கணக்கானவர்களை கவனித்துக் கொண்டால், அது தான் நர்சிங்! செவிலியர் தின நல்வாழ்த்துகள்!

உயிர்பயம் ஒதுக்கி தாயுள்ளத்துடன் கடமையாற்றும் செவிலியர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்! செவிலியர்கள் தின வாழ்த்துகள்!

எதையும் பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு வலிமையானவராகவும், யாரையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு மென்மையாகவும் இருப்பவர்கள் செவிலியர்கள் மட்டுமே! செவிலியர் தின நல்வாழ்த்துகள்!

செவிலியர் தின வாழ்த்துகள்!

களத்தில் நின்று நம்மை காக்கும் தியாக தீபங்களை போற்றுவோம்...
உலக செவிலியர் தினம்!
சுத்தமான வெள்ளாடை உடுத்தி, மாசற்ற மலர் புன்னகையுடன், மனதிற்கும், உடலுக்கும் மருந்து தரும் செவிலியரின் மனமார்ந்த சேவையில் வாழ்கிறது உலகம்! செவிலியர்கள் தின நல்வாழ்த்துகள்!

தாய் கட்டிலிடும் முன்னே குழந்தையை தொட்டிலிட்டு அழகு பார்பார்கள், செவிலியர்கள்! இனிய செவிலியர் தின வாழ்த்துகள்!

செவிலியரின் சேவையை, சேக்கிழாராய் மாறி, எழுத நினைத்து, செதுக்கிப் பார்த்தேன்! வார்த்தைகளை சிக்காமல் ஓடிவிட்டது! செதுக்கும்போது, ஏற்பட்ட காயத்தால் செவிலியரைத் தேடி! செவிலியர்கள் அனைவருக்கும் இனிய செவிலியர்கள் தின நல்வாழ்த்துகள்!

செவிலியர் தினம்

தனக்குள் இருக்கும் கஷ்டங்கள் மறந்து, தன் குடும்பத்தை மறந்து, தன் வலியை மறந்து, மற்றவரின் வலிக்கு மருந்து போடும் தேவதைகளுக்கு செவிலியர் தின நல்வாழ்த்துகள்!


அறுவறுப்பிலும் அன்பைக் காட்டி, கஷ்டத்திலும் கருணை காட்டி, தளர்விலும் தன்னம்பிக்கை காட்டி, சிரித்துக் கொண்டே வேலை பார்க்கும் சிறகில்லா தேவதைகள், செவிலியர்கள்! உங்களுக்கு எனது செவிலியர்கள் தின வாழ்த்துகள்!
மனம் கோணாத அரவணைப்பில் நீங்கள் இன்னொரு தாயே! இனிய செவிலியர்கள் தின நல்வாழ்த்துகள்!
பல இரவு தூக்கத்தை இழந்து, தன் ஆசைகளை எல்லாம் மறந்து, தனக்குள் ஆயிரம் வலிகள் இருந்தாலும், அதை எல்லாம் மறந்து, மற்றவர் வலிகளுக்கு மருந்து போடும் ஒரு சமூக போராளி நீ! உனக்கு என் செவிலியர்கள் தின நல்வாழ்த்துகள்!

செவிலியர்கள் Quotes in Tamil

செவிலியர் - எந்த ஒரு செயலுக்கும் ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரு சேவை! இத்தகைய சேவையை போற்றி தலை வணங்குவோம். செவிலியர் தின வாழ்த்துகள்!

ஈன்றெடுத்த அன்னை அரவணைக்கும் முன்னே, பூத்திட்ட மழலையை மலராய் தாங்கிக் கொள்ளும் மண்ணுலக தேவதைகளுக்கு, இனிய செவிலியர் தினம் வாழ்த்துகள்!
சிகிச்சையின் போது, பாதி மருத்துவராகவும், சிகிச்சைக்கு பின், பாதி அன்னையாகவும், தோன்றுபவள் நீ! உனக்கு செவிலியர் தின நல்வாழ்த்துகள்!


செவிலியர் சேவை

இராபகலாய் பணி உனக்கு! இல்லை ஒய்வு உனக்கு! இன்றைய பேரிடரிலும் உழைக்கிறாய்! இம்மண்ணில் உள்ள உயிர்காக்க இந்த சேவை உன்னதமானது! உனக்கு உலக செவிலியர் தின வாழ்த்துகள்!
வெள்ளை உடை அணிந்து வரும் எந்நாட்டு அழகிகள்! உறவில்லை என்றாலும் உயிர்காக்கும் அழகிகள்! உறக்கமில்லை என்றாலும் பாதுகாக்கும் அழகிகள்! இவர்களின் அர்ப்பணிப்புக்கு அளவில்லை! உயிர் இருக்கும்வரை உயிர் காப்பார்கள்! செவிலியர்கள் அனைவருக்கும் சர்வதேச செவிலியர்கள் தின வாழ்த்துகள்!

தாதியர் கவிதை

பெற்றெடுத்த அன்னைக்கு முன்னரே, நம்மை அள்ளி அணைத்த #தேவதைகளின் தினம் இன்று! செவிலியர்கள் தின நல்வாழ்த்துகள்!

அன்னை முகம் பார்க்கும் முன்பே, உன் கையை கறையாக்கினேனே! அப்பா கையிலிருக்கும் குச்சிக்கு.. பயந்தேனோ இல்லையோ! உன்னை பார்த்தவுடன், உன் கையிலிருக்கும் ஊசியைக்கண்டு அழுது ஓடுவோனே! இன்று உனக்கான என் வாழ்த்துகள்...
தன் உயிரை உருக்கி, இன்னொரு உயிரைக் காப்பவள் தாய் என்றால், செவிலியர்களும் இன்னொரு தாய் தான்! தாயான உனக்கு செவிலியர் தின நல்வாழ்த்துகள்!

அருவருப்பாகப் பார்க்கும் பட்சத்தில் கூட, அரவணைப்பைத் தந்தவரே! எங்கள் உயிரைச் செயல்படுத்த, உம் மனதைச் செயலிழக்கச் செய்தீரே! செவிலியர் தின நல்வாழ்த்துகள்!
அருவருப்பாகப் பார்க்கும் பட்சத்தில் கூட, அரவணைப்பைத் தந்தவரே! எங்கள் உயிரைச் செயல்படுத்த, உம் மனதைச் செயலிழக்கச் செய்தீரே! செவிலியர்கள் தின வாழ்த்துகள்!

International Nuses Day Quotes in Tamil - Nurse Quotes in Tamil - Nurses day Wishing Quotes in Tamil

Close