Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

நண்பர்கள் கவிதைகள் - Friendship Quotes in Tamil

Best Friendship Quotes in Tamil - சிறந்த நண்பர்கள் கவிதை

நண்பர்கள் Quotes

-

போடாதசண்டையில்லை! பேசாத நியாயமில்லை ! சிரிப்புக்கோ பஞ்சமில்லை! கூற முடியாத மன வலியும், புரிந்து கொள்ளும் என் மனக் கண்ணாடி அவன்! மகிழ்ச்சியாக இருப்பினும், துயரக்கடலாக இருப்பினும், மனம் தேடுவதற்கு முன் என்னருகில் இருப்பான் எந்தன் தோழன்!

-

மலரின் வாசம் அனைவரையும் கவரும் - அதுபோல நம் நட்பின் சுவாசம் அனைவரையும் கவரட்டும்!

-

-

Best Tamil Friendship Kavithai

-

கடவுளால் எந்நேரமும் எல்லாரிடமும் இருக்க முடிவதில்லை. எனவே நண்பர்களைப் படைத்து அனுப்பி வைக்கிறான்! சிலருக்கு உயிரைக் கொடுக்கும், கர்ணனைப் போல! சிலருக்கு உயிரை எடுக்கும் நரிக்கூட்டத்தைப் போல!

-

நட்பே! முதல் உறையாடலில், கலைந்து போகும் மேகமென நினைத்த உன்னை இன்று, என்றும் நிலையான வானமாக பார்க்கிறேன் உன் அக்கறையான அன்பால்!

-

பல நாட்களுக்கு ஒரு முறை பேசினாலும், நண்பனின் பட்டப்பெயர் தான் முதலில் ஞாபகத்தில் வருகிறது!

-

-

நட்பு Quotes

-

காற்று அடித்தால் கலைந்து போக- இது ஒன்றும் மேகம் அல்ல! காரணம் இல்லாமல் மறைந்து போக- இது ஒன்றும் கனவும் அல்ல! அருகில் சென்று பார்த்தால் காணாமல் போகும் கானல் நீர் அல்ல! நம் உயிர் கல்லறை செல்லும் வரை தொடரும் உண்மையான நட்பு!

-

"எந்த அம்மாவுக்குடா" உடம்பு சரியில்லை? என பேசிக்கொள்வது ஆண்களின் நட்பு...

-

-

Best Friend Friendship Quotes in Tamil

-
நண்பர்களோடு இருக்கும் போது சுற்றத்தை மறந்து, சிரிப்பின் எல்லை வரைக்கும் சென்று, அளவில்லாத மகிழ்வான தருணங்களை கொடுத்த நண்பர்களை நினைத்து விழி ஓரம் கண்ணீர் கசிகிறது!
-
செழிப்பு நண்பர்களைச் சேர்க்கிறது! வறுமை நண்பர்களை சோதிக்கிறது!

-
எவ்வளோ அசிங்கமா திட்டு வாங்கினாலும், திட்டு வாங்காத மாதிரியே பேச நண்பனால் மட்டுமே முடியும்!
-
Related Posts
-

Friendship Lines Tamil

காரணமே இல்லாமல் கடுங்கோபம் கொண்ட போதும் அருகில் வந்து அமைதியாகக் கரம் பற்றி, அன்போடு அரவணைத்து ஆதரவாக ஆறுதல் கூறும் அழகான நட்பு கிடைப்பது கடினம். கிடைத்தால் இழந்து விடாதீர்கள்!
-
எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் இதழோர புன்னகை, நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!
-
-

Tamil Quotes for Friends

கவிதை உலகில் பல, தலைப்புகளைக் கொண்டு மெல்ல மெல்ல பாதம் வைத்த நான் இன்று ஒவ்வொரு கவிதையிலும் தடம் பதிக்கிறேன்! நம் நட்பின் பெருமையை!
-
மட்காத குப்பைகளை சேகரிக்க, ஆசை கொள்ளும் குப்பை தொட்டி நட்பு நினைவாக!
-
நல்ல நட்புக்கு, ஆணா பெண்ணா தேவையில்லை துரோகம் இல்லாத நம்பிக்கையே போதும்!
-
-

Natpu Kavithai in Tamil

-

நண்பர்கள், எங்கோ ஓர் முறை சந்தித்து கொண்டாலும், நெடுந்தூர பாதை எங்கும் ஒன்றுக்கொன்று துணையாய் பாரங்கள் பகிர்ந்து, தனிமைகள் தவிர்த்து, தடைகள் ஒன்றாய் கடந்து வாழ்கையின் பயணம் சிறக்க செய்கின்றன! தண்டவாளங்கள் - நல்ல நண்பர்கள்.

-
உனக்காக எதையும் விட்டுக்கொடுப்பேன்னு சொல்றத விட உன்ன எதுக்காகவும் விட்டுகொடுக்க மாட்டேன்னு சொல்றது தான் உண்மையான நட்பு!
-
-

Tamil Kavithai for Best Friends

-
நிலவு இரவில் தினந்தோறும் வந்து செல்லும்! ஆதவன் பகலில் தினந்தோறும் வந்து செல்லும்! அதுபோல தான், நம் வாழ்விலும் துயரங்கள் தினந்தோறும் வந்து செல்லும்! நிலையற்ற காதலும் வந்து செல்லும்! ஏன் பொய்யான உறவுகள் கூட, வந்து செல்லும். ஆனால் நம்மிடையே நிலையாய் இருப்பவன் நம் நண்பன்!
-
சிறுபிள்ளை முதல் பிரியாத, முறியாத உறவு நட்பு மட்டுமே!
-
-

Heart Touching Friendship Kavithai in Tamil

-
காலங்கள் அழிந்தாலும், எக்காலத்தும் அழியாதது, நட்பு மட்டுமே!
-

விவரம் தெரியாத வயதில் இருந்து, விழி மூடிடும் இறுதி நிமிடம் வரை விட்டுக்கொடுக்காமல், தொட்டு தொடரும் ஒரே உறவு நட்பு மட்டுமே!
-
கலப்படமே இல்லா அன்பை உணர்கிறேன் உன்னிடத்தில் மட்டும்!
-
முகம் தெரிந்த நட்போ, முகம் அறியா நட்போ, அன்றும் இன்றும் என்றும் தொடரும் ஒரே உறவு, நட்பு மட்டுமே!
-
-

Cute Friendship Kavithai Tamil

-
தனிமையில் விழியோரம் துளி நீர் தரை தொடும் முன்பே ”சரி.. Feel பன்னாத.” என கூறும் தோழமை கிடைத்தல் வரமே!

 -

சேர்ந்த போதும் மறுக்காத, பிரிந்த போதும் மறக்காத, மகத்தான உறவுதான் நட்பு!
-
தூரத்து சொந்தம் என்பது போல தூரத்து நண்பன் என்று இல்லை! ஏனெனில், நண்பான பின் யாரும் தூரமில்லை...
-
-

Friendship Feeling Kavithai in  Tamil

-
பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல, சில நேரங்களில் தட்டிகொடுப்பதும் தான் நட்பு!
-


மன்னிப்பு என்ற தொடக்கம், நன்றி என்ற முடிவு எதுவும் இருப்பதில்லை நட்பிற்கு...
-


நட்பு என்பது, சூரியன் போல். எல்லா நாளும் பூரணமாய் இருக்கும், நட்பு என்பது கடல் அலை போல், என்றும் ஓயாமல் அலைந்து வரும்.
-
நண்பர்கள் தினத்திற்கு ஓர் கவிதை சொல்லடா என அவன் கேட்டான். நான் "நண்பா" என்றேன்.
-

இலை மரத்தை மறந்து போகலாம்! அலை கடலை மறந்து போகலாம்! பூக்கள் தேனீக்களை மறந்து போகலாம்! ஏன் நீயே என்னை மறந்து போகலாம்! ஆனால் நானோ உன்னை மறப்பதில்லை என் அன்புத் தோழனே!

-

-

True Friendship Kavithai in Tamil

-
பழகும் நாட்களை போலவே, கூட்டிக்கொள்கிறது எல்லையினை நட்பெனும் உணர்வு சகோதர சாயலை
-
மன்னிப்பு என்ற தொடக்கம் நன்றி என்ற முடிவு எதுவும் இருப்பதில்லை, நட்பிற்கு!
-
தன்னலம் இல்லா தாய்மை கொடுப்பதும், தடுக்கி விழும் போது தாங்கி நிற்பதும் நட்பு மட்டுமே!
-
அன்புக்கு உருவம் தேடினேன்! தேடும் போது தெரியவில்லை! தொலைத்த பின்னே தெரிகிறது.. அது நீ என்று!
-
-

True Natpu Status Image Tamil

-
என்னை வெறுப்பேற்றி நீ சிரிக்கிறாய்! நீ சிரிப்பதற்காக மட்டும் அன்பான நான் வெறுப்பாகிறேன்!
-
பறிக்க பறிக்க மீண்டும் மலரும் மலரல்ல உன் மேலான என் நட்பு! பறித்தால் மீண்டும் முளைக்காத மரம் என் நப்பு!
-
படைத்தவனுக்கும் பொறாமைபோல் நம் நட்பைக்கண்டு! பார்க்க முடியாதவாறு பிரித்துவிட்டான்  சதிசெய்து! விதியென்று நம்மை புலம்ப வைத்து.
-
என் வாழ்நாளை மகிழ்வுடன் கழிக்க... நம் நட்பின் நினைவுகள் மட்டுமே போதும்!
-
-

நண்பன் கவிதை

-
பாசம், சண்டை, கோபம், பிரிவு, புரிதல் என அனைத்தும் கிடைத்த ஒரே இடம்! அவன்,அவள் அன்பிற்கு அடுத்து இவ்வுலகில் வேறேதும் உண்டோ?
-
செல்ஃபி எடுக்க மட்டும் கையை உயர்த்துபவன் அல்ல அவன் நீ வீழ்ந்து கிடக்கையில், உன் கையைப் பிடித்து உயர்த்தி விடுபவனும் அவனே!
-
உன் சிரிப்பால் மெல்லிசையை அறிந்தேன்! உன் கரம் பிடித்து நடக்கையில் புது திசைகளை அறிந்தேன்! விளையாட்டாய் திரிந்த எனக்கு விளையாடகற்றுத் தந்துவிடாய்திருந்த வேளையில் எனக்கு விடையாக வந்தாய்! அனைத்திற்கும் இலக்கணமிட்டு வகையறுத்து நிறுத்தி விடலாம்! ஆனால் நட்புக்கோ இறுதி கிடையாது! நம் உயிர் இருக்கும் வரை, நம் நட்பு நிலைக்கும்!
-
உன் வாழ்க்கைத் துணை வரும் வரை, உன் வாழ்க்கை முழுவதும் துணையாக இருப்பவர்கள் உன் நண்பர்கள் மட்டுமே!
-
Best Friendship Quotes Tamil

Friendship Thoughts in Tamil

-
நீர் யாரோ, எவரோ! எந்த குலமோ, கோத்திரமோ! எந்த மதமோ, எந்த சாதியோ! எந்த நிறமோ, எந்த பாலோ! ஏதும் எனக்கறியாது. ஆனால்...! உங்கள் கண்கள் தமிழைப் படிக்கிறது, உங்கள் உதடுகள் தமிழை முணுமுனுக்குகிறது, ஆதலால் நீங்களும், நானும் நண்பர்கள்...
-
காண்பவர்கள் யாரும் நண்பர்கள் அல்ல. கண்களின் இமைகளாய் இணைந்தவர்களே, நண்பர்கள்!
-
ஆபத்தில் உதவுபவன் மட்டும் நண்பன் அல்ல! ஆபத்து என்று தெரிந்தும் இறுதிவரையில் உதவுபவனே நண்பன்!
-
Nanban Tamil Kavithaigal

Tamil Quotes about Friendship


-
என்னை அடிப்பான், மத்தவங்க என்னை அடிச்சா சும்மா விடமாட்டான்! என் நண்பன்!
-
ஒரு நிமிட நட்பாக இருந்தாலும் சரி, ஒரு மணி நேர நட்பாக இருந்தாலும் சரி, ஒரு நாள் நட்பாக இருந்தாலும் சரி, ஒரு வார நட்பாக இருந்தாலும் சரி, ஒரு மாத நட்பாக இருந்தாலும் சரி, ஒரு யுக நட்பாக இருந்தாலும் சரி, நட்பு நட்புதான்!
-
சொந்தங்கள் இறுதி வரையில் வருமோ என்று தெரியவில்லை! ஆனால், நண்பன் என்ற சொந்தம் மட்டும் இறுதி வரையில் வரும் என்று "தெரியும்!"
-
பல மாதம் தாய் சுமக்கும் கருவறையில் வலி இருக்கும்! இதயத்தில் சுமந்தோம், நட்பில் வலி கண்டதில்லை!
-
Best Friend Kavithai Tamil

First Friend Kavithai in Tamil

-
ஒரு நண்பன் மாதா, பிதா, குரு, தெய்வம் அனைத்திற்கும் சமம்!
-
நான் விட்டுப்போனாலும் என்னை விட்டுவிடாத ஒரே உறவு, என் நட்பு!
-
சந்தோஷத்தில் கை குலுக்கும் ஐந்து விரல்களை விட, கஷ்டத்தில் கண் துடைக்கும் ஒரு விரலே மேலானது!
-
அறிமுகம் இல்லாமல் கிடைத்த ஒரு பொக்கிஷம், நண்பன்!
-

Close