50+ Vivekananda Quotes in Tamil சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

சுவாமி விவேகானந்தர் என்ற பெயர் இன்று இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் உன்னதமான இடம் பிடித்த ஒன்று. மிகச்சிறந்த ஆன்மீகத் தலைவர்களில் முதன்மையானவர். வீரத்துறவி என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இளைஞர்களின் மனதில் நம்பிக்கை, வீரம் மற்றும் ஆன்மீகத்தை விதைத்தவர். இன்றைய இளைய சமூதாயத்திற்கு உலகளாவிய ஒரு இலட்சிய மனிதர் சுவாமி விவேகானந்தர்.
அத்தகைய வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் பொன்மொழிகள் சிலவற்றை மட்டும் இங்கே தொகுத்து வழங்கி உள்ளோம்.

Motivational Vivekananda Quotes in Tamil

எல்லா ஆற்றல்களும் உங்களுள் இருக்கிறது. உங்களால் எதையும் செய்ய முடியும் என்று நம்புங்கள்!

எதைச் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். நம்மால் எதையும் செய்ய முடியும் என்று உறுதி கொள்ளுங்கள்.

எழுந்திருங்கள், விழித்திருங்கள். இனியும் உறங்காதீர்கள்!

file_name.zip 200kb

Vivekananda Ponmozhigal Tamil

உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்! செல்வம் வேண்டுமானால் அதற்காகப் பாடுபடுங்கள்! அது நிச்சயம் உங்களை வந்து சேரும்!

நல்லெதிர்பார்ப்பு மனப்பான்மையையும், எல்லாவற்றிலும் நல்லதையே பார்க்கும் பாங்கையும் நாம் வளர்க்க வேண்டும். நமது மனத்திலும் உடம்பிலும் உள்ள குறைபாடுகளை நினைத்து, நாம் உட்கார்ந்து அழு வதில் எந்த லாபமும் இல்லை. எதிர் மறையான சூழ்நிலைகளை அடக்குகின்ற வீர முயற்சியே நம் ஆன்மாவை மேலே கொண்டு செல்லும்!

Positive Vivekananda Quotes in Tamil

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்கதே!

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி!

உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்!

Self Confidence Swami Vivekananda Quotes in Tamil

எல்லோரிடமும் அன்பை கொடுத்து ஏமாந்துவிடாதே! யாரிடமும் அன்பை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிடாதே!

பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும்!

அறிவு வரும்போது மனிதன் முதிர்ச்சி அடைகிறான். அவனிடம் ஒழுக்கம் நிலவுகிறது!

Vivekananda Motivational Quotes in Tamil

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்!

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்! உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்!

Quotes of Swami Vivekananda in Tamil

வெற்றியை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது! தோல்வியை சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது!

நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன!

உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

Vivekananda Quotes in Tamil Words

புன்னகையின் வழியாகவும், அழுகையின் வழியாகவும் நாம் பல பாடங்களைக் கற்றுக்கொண்டே இருக்கிறோம். அனுபவம் ஒன்றுதான் மிகச்சிறந்த ஆசிரியர்!

பின்னோக்கிப் பார்க்காதே எப்போதும் முன்னோக்கி நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதையே பார் முன்னேறுவது உறுதி!

அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு!

Vivekananda Words in Tamil

வெறும் புத்தகங்களைப் படிப்பதால் மனிதன் வறட்சி அடைகிறான் படித்தவன் யார்? துளியளவாவது அன்பை உணர்பவனே படித்தவன் கடவுளே அன்பு. அன்பே கடவுள் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்!

பூக்களாக இருக்காதே உதிர்ந்துவிடுவாய்! செடிகளாக இரு அப்போது தான் பூத்து கொண்டே இருப்பாய்!

vivekananda proverbs in tamil

Vivekananda Thoughts in Tamil

இதயம் சொல்வதை செய் வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு!

பொய் சொல்லித் தப்பிக்க நினைக்காதே உண்மையைச் சொல்லி மாட்டிக் கொள்!ஏனேன்றால் பொய் வாழவிடாது. உண்மை சாகவிடாது!

கீழ்ப்படிய கற்றுக்கொள்ளுங்கள் கட்டளையிடும் பதவி தானாக வந்து சேரும்!

Vivekananda Quotes in Tamil about Life

பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும் அவை; ஏளனம்,எதிர்ப்பு, அங்கிகாரம் ஆகியவை!

பிறருடைய பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது!

ஆயிரம் முறை தோற்றாலும் லட்சியத்தை கை விடாதீர்கள்.

Swami Vivekananda in Tamil Quotes

உதடுகளை மூடு. இதயத்தைத் திற அதிகப் படிப்பு மட்டும் உண்மை.

தன்னைத்தானே நம்பாமல் சந்தேகிப்பது வீழ்ச்சிக்கு முதல் காரணம்.

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத்தேய்வது மேலானது.

Vivekananda Slogans in Tamil

கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடுதலையும் அறிவான்.

எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை.

ஆற்றல்களுக்கு அடிப்படையாக இருப்பது ஒழுக்கமே!

Vivekanandar Golden Words in Tamil

எல்லோரிடமும் அன்பாயிரு! துன்பப்படுவோர்களிடம் பரிவு கொள்!

ஏல்ல உயிர்களையும் நேசி! யார்மீதும் பொறாமைப்படாதே! பிறரது குற்றங்களைக் காணாதே!

இயற்கையை வெல்வதற்கே மனிதன் பிறந்திருக்கிறான். அதற்குப் பணிந்து போவதற்கல்ல.

Vivekananda Sayings in Tamil

உண்மையான துணிவோடு துவக்கப்படும் நல்ல காரியங்களுக்கு ஏற்படும் எதிர்ப்புகள், அதை ஆரம்பிப்பவர்களின் ஆற்றலைத்தான் அதிகமாக்கும். தடைகளையோ எதிர்ப்புகளையோ சந்திக்காத காரியங்கள், மனிதர்களை மரணத்தின் பாதைக்கே அழைத்துச் செல்லும்.

தைரியத்துடன் வேலை செய்து கொண்டே போ. பொறுமையுடனும் உறுதியுடனும் வேலை செய்வது — அதுதான் ஒரே வழி. முன்னேறிச் செல்.

பணமோ, பெயர்புகழோ, கல்வியறிவோ எதையும் சாதித்து விடாது: குணநலன் ஒன்றுதான் கடினச் சுவர்களையெல்லாம் பிளந்துகொண்டு போகவல்லது. இதை நினைவில் கொள்ளுங்கள்.

Swami Vivekananda Ponmozhigal in Tamil

எதையும் தேடிச் செல்லாதே, விலக்கவும் செய்யாதே! வருவதை அப்படியே ஏற்றுக் கொள். எதனாலும் பாதிக்கப்படாமல் இருப்பதே சுதந்திரம். பொறுத்துக் கொள்வது மட்டும் போதாது, பற்றற்று இருப்பது அவசியம்.

Quotes Included Topics:
  1. Vivekananda Motivational Quotes Tamil
  2. Swami Vivekananda Ponmozhigal
  3. Vivekananda Slogan in Tamil
  4. Vivekananda Quotes in Tamil Text
  5. Vivekananda Quotes in Tamil Wallpaper
  6. Vivekananda Quotes in Tamil about Education
  7. Vivekananda Best Quotes in Tamil
  8. Vivekananda Lines in Tamil

0 thoughts on “50+ Vivekananda Quotes in Tamil சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்”

Leave a Comment