நீங்கா நினைவுகள் Quotes in Tamil
மனதில் நீங்கா நினைவுகளைத் தந்துவிட்டு நம்மை வேதனைப்பட வைப்பது எப்போது நம்மை நேசித்தவர்களாகவோ, நாம் நேசித்தவர்களாகவோ தான் இருக்க முடியும்.
Ninaivugal Tamil
அவர்களால் தான் நம்மை எந்த நேரமும் நினைக்க வைக்க முடியும். அன்பைப் பிரிந்த இந்தயம் நினைவுகளால் தவிப்பதை வார்த்தைகளால் விவரிப்பது எளிதல்ல. அந்த நினைவுகளை உங்கள் அன்பு நெஞ்சங்களுக்கு இந்த கவிதைகள் மூலம் தெரியப்படுத்துங்கள்!

Neengaa ninaivugal Tamil Sharechat Quotes
இப்போதெல்லாம் என் இரவினில் உன் நினைவுகள் மட்டும் தான் வாழ்கின்றன!
–
நித்திரையிலும் நின் நினைவு – என்னை நின்று வதம் செய்கிறது!
–
நினைவுகளை விடவும் மருந்தில்லை… நினைவுகளை விடவும் விஷமில்லை… அளவில் குறைத்த விஷம் சில பொழுதில் மருந்தாகும். நினைவுகளை அவ்வாறு ஒரு மிடறோடு நிறுத்திக்கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
–
இங்கே எதுவுமே நிரந்தரமில்லை! நினைவுகள் ஒன்றைத் தவிர!
–
செல்லும் திசையெல்லாம் சேகரிக்கின்றேன் உன் நினைவுகளை, என் இதயப்பெட்டியில்..
–
உறக்கமில்லா என் இரவுகளில், உலவித் திரியும் உன் நினைவுகள்!
–
உறக்கமில்லா இரவுகளுக்கு உறுதுணையே, உன் நினைவுகள் தான்!
–
உறங்க வைக்க வரும் இரவுகளை, விட்டுச்சென்ற உன் நினைவுகள், விரட்டித் தள்ளுகின்றன!
–
சுகமான நினைவுகளை சுமந்து கொண்டு, சொல்லாமல் மறைத்த சுவையான காதல், ஒரு தலையாய காதல், “ஒரு தலைக் காதல்”
–
என்னை ஆளும் உந்தன் நினைவுகளே, எந்தன் சுவாசங்கள் என் ஆயுள் முழுதும்!
–
மறக்க நினைத்தாலும் நியாபகமூட்டும் உன் நினைவுகள், என்னை மறந்து விடாதே என்று செல்லச் சிணுங்கல் போடுகிறது…
–
தொலைவில் இருந்தாலும் மனதுக்கு நெருக்கமாகவே சில உறவுகளின் நினைவுகள்!
–
உன் நினைவுகள் போல், நீ ஏன் என்னுடன் இல்லை?
–
யுகம் பல மாறினாலும் அகன் அகம் புகுந்த அவள் நினைவுகள் சுகம் தான் எந்நாளும் .
–
சேர்ப்பது மிகவும் கடினம். செலவு செய்வது மிக எளிது! பணம் மட்டுமல்ல, அடுத்தவர் உள்ளத்தில் நம் நினைவுகள் மற்றும் நம்பிக்கையையும் தான்!
–
தித்திக்கும் உன் நினைவுகளை சந்திக்கும் போதுதான் காத்திருக்கும் வலிகள் கூட காணாமல் போய் விடுகின்றது என் கனவுகள் நீயாக இருக்கும் வரை என் கவிதைகள் உன் பெயர் சொல்லும்!
–
மழை நின்ற பின்பும் இலையின் வழியே நீர்த்துளி வடிவது போல நீவிலகிச் சென்ற பின்னும் உன்னுடனான நினைவுகள் விட்டபாடில்லை!
–
கவிதை எழுத வார்த்தை தேடும் நேரமெல்லாம் கை கொடுக்கிறது, உன் நினைவுகள்!
–