அன்னையர் தினம் கவிதைகள் – Mothers Day Quotes in Tamil

Mothers Day Quotes in Tamil: In this article you will be find amma quotes Tamil, Tamil mother day quotes and many more quotes in Tamil language.

Mothers Day Wishes in Tamil – அன்னையர் தினம் கவிதைகள்

அன்னையர் தினம்

அவளது மார்பை நீ கடித்து இழுத்தாலும், நகத்தால் கீரினாலும், அவள் புன்னகை தான் சிந்துவாள், நீ அவளிடம் பால் குடிக்கும் அழகை பார்த்து…அம்மா உனக்கு அன்னையர் தின வாழ்த்துகள்!

இதயம் எழுதும் கவிதை நீ, எங்கும் நிறைந்த புதுமை நீ, பதியன் போட்ட பயிரும் நீ, பாய்ந்து வரும் நதியும் நீ, மதிய நேரத் தென்றல் நீ, மண்ணில் உலவும் தேவதை நீ, புதிய உலகின் பழமை நீ, பூத்து நிற்கும் தாய்மை நீ! அம்மா உனக்கு அன்னையர் தினம் வாழ்த்துக்கள்!
அம்மா இல்லாத உயிர்களில்லை! அம்மா இல்லாது இயக்கமே இல்லை! அம்மாக்களினால் ஆனது இவ்வுலகு!!! #MothersDay

அம்மாவுக்கு வாழ்த்து

நீ நிர்கதியாக நிற்கும் பொழுது உன்னை சுற்றியுள்ள அனைத்து மனித உறவுகளும் உன்னை விட்டு விலகும்; எந்த சூழ்நிலை வந்தாலும் உன்னை விட்டு விலகாத ஒரே உறவு “அம்மா!” அன்னையர் தின வாழ்த்துகள்.

தன் உயிரைக் கொடுத்து, மற்றொரு உயிரைக் காப்பாற்றும் ஒரே தெய்வம், அம்மா! அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

Mothers Day Kavithai

ஊனாகி, உடலாகி, உயிராகி.. உயிர் தந்த அம்மா! உடல் தந்து… உதிரம் பெருக்கி… ஆணோ, பெண்ணோ உருவறியாமல்… உவகை பொங்க பெற்றெடுக்கும் அம்மாவை, நினைக்கும் போதே மனம் கசியும், விழியோரம் கண்ணீர் பெருகும்.. அன்னையர் தின வாழ்த்துக்கள்…

ஒரு தாயின் பாசம், அந்த வானத்தைப் போல் அளவுக்கடந்து இருக்கும்! தாய்மார்கள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!

Mothers Day Tamil Poem

இது வரை நான் கண்ட வெற்றி தோல்விக்கான (அனுபவத்தின்) அடித்தளம் என் அம்மா… என்னை பெற்றெடுத்த என் தாய்க்கும் என்னை மகனாக ஏற்றுக் கொண்ட அன்னையர்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

அடிப்பதும் அன்னையே, அரவணைப்பதும் அன்னையே.! இதைத் தவிர காதலுக்கு வேறு எடுத்துக்காட்டு உண்டோ? அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

அன்னைகள் தினம்

இழந்தவன் தேடுவதும், இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு! அன்னையர் தின வாழ்த்துகள்!

போற்றுதலுக்கு உரியவளை என்றும் போற்றுவோம், அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியத சிம்மாசனம் தாயின் கருவறை! அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

Mother’s Day Thoughts In Tamil

Mothers Day Quotes Tamil

தமிழில் அம்மா என்ற சொல் எப்படி வந்தது என்று எனக்கு தெறியாது… ஆனா அன்பு என்ற சொல் நிச்சயம் அம்மாவிடம் இருந்து தான் வந்துருக்கும்… இந்த உலகத்தில் எனக்கு இறைவன் கொடுத்த முதல் முகவரி அம்மா… #HappyMothersDay

கடைசியாய்ச் சாப்பிடுவாள் என் தாய்! இது பண்பாடல்ல, எனக்குப் பற்றாமல் போய்விடுமோ சாப்பாடு என்று! அம்மா உனக்கு அன்னையர் தினம் வாழ்த்துகள்!
ஒவ்வெருமுறையும் என்தாயுடன் கோவிலுக்கு செல்லும் போது கோவில் சிலையிடம் காட்டிவிட்டு வருகிறேன் என்கடவுளை! அன்னையர் தினம் வாழ்த்துகள்!

Mothers Day Status In Tamil

அம்மா என்றால் அன்பு. அன்பின் வழியது உயர்நிலை என்பதை தாரக மந்திரமாய் சுமந்து வாழ்வின் எப்படியிலும் நம்மை தாங்கி நிற்கும் அன்னையவளுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்

அன்பின் துவக்கம் மற்றும் முடிவே தாய்மை! அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

Mothers Day Kavithai Tamil

இறைவன் எனக்கு தந்த முதல் முகவரி உன் முகம் தான் அம்மா! அன்னையர் தின வாழ்த்துகள்!

இந்த வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஒரே வரம் என் அம்மா உனக்கு, இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!

Happy Mothers Day Wishes Messages In Tamil

பூமி தாங்கும் முன்னே நம்மை பூவாய் தாங்கியவள்! நம் அன்னை! அன்னையர் தின வாழ்த்துகள்!

முதல் துளி கண்ணிரைத் துடைத்து, என்னை அரவணைத்து, மறு துளி வராமல் தடுபவள் நீயே, தாயே! உனக்கு அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

Mothers Day in Tamil

நான் முதல் முறை பார்த்த அழகிய பெண்னின் முக தரிசனம் அம்மா! Happy Mothers Day!

அரவணைக்கும் அக்காவும் அன்னையே! தாங்கி கொள்ளும் தங்கையும் அன்னையே! தோள் சாயும் தோழியும் அன்னயே! மாலை இட்ட மனைவியும் அன்னையே! எனை ஈன்றெடுத்த அன்னைக்கும், அன்னையாய் இருக்கும் பெண்மைக்கும், இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!

Tamil Amma Kavithai

மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்! என் அம்மா காலில் மிதிபட அல்ல! என்னை சுமந்த அவளை ஒரு முறை நான் சுமப்பதற்காக!

Annaiyar Dhinam Vazhthukkal In Tamil

அன்பான உறவுகளுக்குள்ளே அழகானவள் நீ அம்மா! ஆயிரம் ஜென்மங்கள் கடந்து வந்தாலும் என்றும் எனது அழியாத சொத்து நீ அம்மா! இன்னொரு ஜென்மம் கேட்கிறேன் இந்த வயிற்றில் திரும்பவும் தவழ! உன்னை வெல்ல யாருமில்லை! எனக்காக காத்திருக்க இந்த மண்ணுலகில் நீ மட்டுமே அம்மா! ஏழையாய் பிறந்தவனும் பணக்காரன் ஆவான் உன்னை போல் அம்மா கிடைத்தால்! ஐம்பூதங்களும் பொறாமைப்படுகிறதே என் அம்மாவை பார்த்து! ஒரு கண்ணு பட்டாலும் ஓராயிரம் திருஷ்டி களிப்பேனே என் அம்மாக்கு! HAPPY MOTHERS DAY

Annaiyar Dhinam Kavithai

ஈரைந்து மாதம் எடையோடு சுமந்தவள்! நிலையறியும் பருவம் வரை எனக்கென வாழ்ந்தவள்! என் இரு கண்கள் உறங்கிட அவள் விழிகள் விழித்துக்கொள்வாள்! என் பசியை தீர்த்திட உடலின் உதிரத்தை பாலாக அன்பின் வடிவில் எனக்கூட்டிய தெய்வம்! Happy Mothers Day!

Mothers Day Quotes in Tamil

கருப்பை ஒன்றை காதலோடு சுமக்கிறாள்! வலி என்று தெரிந்தும் வரம் கேட்கிறாள்! மறு பிறவி எடுத்து உனக்கு உயிர் தருகிறாள் அம்மா!

 Happy Mother’s Day யாராலும் கொடுத்திட முடியாத துன்பம் நான் கொடுக்க, இன்முகத்தோடு ஏற்று கொண்டவள்! தன் உயிரை துச்சமாய் எண்ணி எனக்கு உயிர் கொடுத்தவள்! தனக்கு உணவு இல்லாத போதும், எனக்கு உணவளித்து என் முகம் பார்த்து மகிழ்ந்தவள்! யார் சொன்னது தெய்வம் உருவமற்றது என்று? நான் பார்க்கிறேன் தினமும் என் தெய்வத்தை என் தாயாக!

அம்மா! உனக்கு பிறப்பேன் எனில், மறுஜென்மம் வேண்டி தவம் இருப்பேன்! அன்னையர்தின வாழ்த்துகள்!

அம்மாவிற்கு நன்றி

என் பிறப்பிற்கு உன் உயிரை தந்தவளே, கருவாய் என்னை சுமந்து சென்றவளே, என் வளர்ப்பிற்கு உன் இரத்தத்தை சிந்தியவளே, கலங்காமல் உன் இதயத்தில் காத்தவளே, என் பெயர் காக்க உன் தியாக மழை பொழிந்தவளே, அருள் மழையாய் பாசம் தந்தவளே அம்மா! உனக்கு என் நன்றிகள்!

தன் உயிரை தந்து உன் வாழ்வை காப்பவளே, அம்மா! உனக்கு என் நன்றிகள்!

Leave a Comment