Love Quotes For Her in Tamil – காதலிக்கு கவிதைகள்

Love Quotes For Her in Tamil In this article you will be find tamil love quotes for wife, girlfriend, bestfriend and many more quotes in tamil language.

Love Quotes for Girlfriend in Tamil – காதலி கவிதைகள்

காதலி Quotes

அவள் பெயரை உச்சரிக்கும் போது, அவள் பெயரில் உள்ள எல்லா இலக்கண சுவைகளையும் என் நா ருசிக்கிறது!

நீ என் கனவில் வருவாய் என்றால், பகலிலும் நான் தூங்குவேன்…

உறவடி நான் உனக்கு, உரிமையடி நீ எனக்கு, என் ஆசை அத்தை மகளே!

Girl Bestie Love Quotes Tamil

என்னவளின் முகம் பார்க்கும் போதெல்லாம், அந்த வெண்ணிலவு மேகத்திற்குள் ஒழிந்து விடுகிறது… நம்மை விட அழகி வந்துவிட்டால் என்று…

திரும்ப திரும்ப பார்கிறேன், கண்கள் தெரியாமல் அல்ல, உன் மீதான போதை தெளியாமல்!

இதழ்களால் பேசும் வார்த்தை ஜாலம் போதும், கண்களால் பேசும் மாய வித்தை வேண்டாம்! நான் கற்றுத்தேர்ந்த காதலன் அல்ல, கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்!

உன் தடம் பதித்த இடத்தை தொடவா சீறி பாய்கின்றன கடலைலைகள்!

என் வானில் எட்டாவது வண்ணம் – நீ, என்றுமே எட்டாத வண்ணம் நீ…

அவள் கண்ணக் குழியில் கவிழ்ந்து தான் – என் காதல் விதை முளைத்தது!
Love Quotes For Her in Tamil

அவள் மெளனங்களை மொழிபெயர்த்தால், காவியம் பல படைத்திருப்பர். என் கவிதை பட்டியல் காணாமல் சென்றிருக்கும் – அவள் கயல் விழிகளில் – இருந்து!
தேவதைகள் பூமியில் வாழ்வதில்லை என்று சொன்னதெல்லாம் பொய்யாகிவிட்டது! பிரம்மன் உன்னை படைத்த பின்பு!
அவள் தலை கோதும் அழகைக் கண்டு, அடுத்த நொடியே தள்ளாடி போகிறேன் நான்!
Love Quotes For Her in Tamil

மஞ்சள் பூசி அழகாக்கிக்கொள்ளும் காந்தைகளுக்கு மத்தியில் வெட்கத்தை பூசி அழகாகும் காரிகை அவள்!
இரவின் இசையில் நிலா என்னிடம் அழுது கொண்டே வந்தது! காரணம் கேட்டேன், உன் காதலியை மறைத்து வை என்னை விட, பிரகாசிக்கிறாள் என்றது!
சினம் கொண்ட ஆண்மகன் சுருண்டு போகிறான், வெட்கத்தில் அவள் கன்னம் சிவக்கும்போது…
Love Quotes For Her in Tamil

கடலே காதல் கொண்டு கட்டி அணைத்துக் கொள்கிறது, என்னவளின் காலடி தடங்களை!
பெண்ணே! நீ நடக்கும் போதெல்லாம் சிரித்தது கொலுசுமணி… உன் காலில் சிறைப்பட்ட இன்பத்தில்!
எதற்கு அடிமையாகினாலும் மீண்டு விடலாம்… பெண்ணின் சிரிப்பிற்கு அடிமையாகும் வரை…
Love Quotes For Her in Tamil

மேகங்கள் மண்ணில் இறங்கி ஊர்க்கோலம் செல்லகின்றதோ? என்று நினைக்க தோன்றுகிறது! என்னவள் வீதி உலா செல்கையில்!
உன் புன்னகையில் மயங்கி விட்டேன்! கன்னகுழியில் படுக்கவை! பாடாய்ப் படுத்தும் உன் நினைவுக்கு, ஆறுதலாய் இருக்கட்டும்!
பேசிக்கொள்ள வேண்டாம்! சிரித்து கொள்ள வேண்டாம்! சற்று நேரம் உன் இருப்பை கொடு போதும்!
Love Quotes For Her in Tamil

தீக்கனலின் மேல் நின்றாலும், என் கரம் பிடித்து நீ உடன் இருக்க, அக்கனலும் வருந்துதடி, உன்போல் ஓர் துணையில்லை என்று – என் உயிர்த்தோழி!
என்னுள் எழும் ரசனை அத்தனைக்கும் ஆதி அவள் தான் என தெரிந்தும், அலட்டிக்கொள்ளமால் கேட்கிறாள், அது யாரென!
தொட்டால் பூ மலரும் என்கிறார்கள். தொட வேண்டிய அவசியம் கூட இல்லை! அன்பே, நீ பார்த்தாலே போதும், நான் மலர்ந்து விடுகிறேன்!
Love Quotes For Her in Tamil

கண் பட்டுவிடக்கூடாது! இறைவனே வைத்த திருஷ்டி பொட்டோ உன் உதட்டோர சின்ன மச்சம்!
பூவே பொறாமை கொண்டதாம்! என்னை விட இவள் என்னவள் அழகாக இருக்கிறாளே என்று!
வான் மேகத்தை கிழித்து, எட்டிப் பார்க்கும் நிலவாய், பாதி மறைத்து நீ தந்த தரிசனத்தில் காதல் வழியும் ஓற்றைப் பார்வையில், வர்ணிக்க இயலாத வெட்கச் சிரிப்பில் சித்தம் கலங்கி சிலையாகி விட்டேனடி, நான்!
Love Quotes For Her in Tamil

என் மொத்த நிறத்தையும், ஒரு புள்ளியில் கோர்த்து, அவள் உதட்டுக்கு கீழே திருஷ்டி பொட்டு வைத்து அழகு பார்த்ததோ இயற்கை… மச்சம்!
உன் அழகிய முகத்தை கை வைத்து மறைக்கிறாயே, கையின் அழகும் சேர்த்து இழுக்கிறதே! பார்க்கும் நேரம் பார்வையும் இழக்கிறதே!
சாகும் போதும் தீர்ந்திடாது உயிரே, உன்மீது கொண்ட காதல்!
Love Quotes For Her in Tamil

முகத்திரையை, விலக்கி முன்னே வா, முத்தமிழும் தா!
அந்த காரிகையை நினைத்து வண்ணத் தூரிகையால் தீட்டிக் கொண்டிருக்கிறான், இவனின் ஆசைகளை… அது கானலே என தெரிந்தும், காதல் கொள்கிறேன் மீண்டும் மீண்டும் அவள் மீது…
கண் சிமிட்டா உன் ஒற்றை பார்வை போதும்! சொல்லாத சொல்லும், எழுதாத வரிகளும் அதனிடம் தோற்றுப் போகும்!
Love Quotes For Her in Tamil
Love Quotes For Her in Tamil

காயம் தருவதும் அவள்தான், அதை மாயம் செய்பவளும் அவள்தான்.
பூந்தென்றலும் தோற்றுப்போகும், உன் புன்னகையைப் பார்க்கையிலே! எவன் கர்வமும் கலைந்து போகும், உன் ஒற்றைப் பார்வையிலே!
மலர்கள் மலர்வதை மட்டும் கண்ட என் கண்களுக்கு, மலர் சிரிப்பதையும் காட்டியது, உன் கண்ணாடி பிம்பம்…
Love Quotes For Her in Tamil
அளவுக்கதிகமான அலங்காரம், அரைகுறை ஆடை தவிர்த்து அம்சமான ஒப்பனையில், அழகான உடையின் நேர்த்தியில், பெண்! ‘அவள்’ உலக அழகியே!
என் மனதெங்கும் சிதறிக்கிடக்கிறது லட்சம் கவிதைகள்… அனைத்திலும் ஒரே கவிதை பொருளாய் அவள்…
சிலைகள் அசையும் என நான் கண்டதில்லை. அவள் நிழலினைக் காணும் வரை!
Love Quotes For Her in Tamil
Love Quotes For Her in Tamil

என் கவிதையால் உனக்கு மாலை அணிவிக்க எழுத்துகளை கோர்த்திருந்தேன்! தீர்ந்து போனதடி, என் தமிழின் எழுத்துகள்!
மாலையில் சூரியன் மறைய மறுப்பது, மாயக்காரி உன்னுடன் மாமாங்கம் வாழ்ந்திடவா?
அவள் நெற்றி முடிக்கீற்றும், முந்தானையும் ஒன்றுதான்! இரண்டும் இருக்க வேண்டிய இடத்தைவிட விழும்போது தான் அழகு!
Love Quotes For Her in Tamil

உன் வெட்கத்தினை கண்டிட வந்தனவா இப்பூக்கள் உதிர்ந்து!
கருமேகத்தினுள் பிறை நிலவாய் உன்நெற்றியில் சுருளும் கூந்தலில் அகப்பட்டுக் கொண்டேனடி நான்!
உணரும் பொருளெல்லாம் நீயாகிப்போக, உடல் விட்டு உயிரும் நீராவி ஆகும்! உன் உள்ளங்கை கொண்டு எனை அடைத்தால் முத்தாவேன், உனை போல் அரசிக்கு மணியார சொத்தாவேன்!
Love Quotes For Her in Tamil
Love Quotes For wife in Tamil

என் இதயத்தில் நீ குடியிருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.. ஆனால் முன்பணமாக ஓரு முத்தமும் வாடகையாக ஓரு பார்வை நித்தமும் வீசி போ!
என் மனதை கொள்ளைக் கொள்ளும் உந்தன் அழகின் முன்பு, நான் தொலைந்து நிற்கின்றேன் இன்று!
அன்பே என்னவளே நீ அன்று மட்டும் நினைவிருக்கும் புது பாடல் அல்ல, என்றுமே மறவாதிருக்கும் பழைய பாடல்!
Love Quotes For Her in Tamil

கண்ணோடு உறங்கா காதலும், கம்பளிக்கு அடங்காத குளிரும், காற்றோடு படர்ந்த மெளனமும் காத்திருக்கு, உன் துணை வேண்டி!
உன் புன்னகையை போல் போதையை, கண்டதில்லை இவ் உலகில்!
எனக்கு பிடித்தவளே, உனது வார்த்தையில், நான் அடிமையே! எனது பேச்சில் நீயே, உனது கனவில் நானே என் மூச்சில் நீயே! என் கைகளில் கவிதை, அதுவும் உன்னை நினைத்தே!
Love Quotes For Her in Tamil

தெருவோர விளக்கெல்லாம் ஒளியை தொலைத்து அலையுதடி, உன் பின்னே!
வெண்பட்டு உடுத்தி வளம்வரும், என் வெண்புறாவே! உனக்கென எழுத ஒரு வெண்பா தேடி இறுதியிலேயே அறிந்தேன், அது உன் பெயரே என!
Love Quotes For Her in Tamil
Love Quotes For gf in Tamil

பொன் பொருள் பொருட்டல்ல, அவள் முன்னே அணிகலன் எதுவும் தேவையில்லை, அவளை அலங்கரிக்க அவளது சிறு புன்னகை ஒன்று போது, என்னை சிதைக்க!
கவிதை போட்டியில் எல்லாம் நீயே தலைப்பானால், வெற்றி எனக்கே நிச்சயம்!
ரதி நின் அரை அடி கூந்தலுக்கே, பாம்புக்கு ஆடும் மகுடியாய் மாறியது என் நிலை!
Love Quotes For Her in Tamil

யாரும் அறியா அழகிய நிலவின் அறியாத பின்புறம் கருமையும் வெண்மையுமாய்… நான் கண்ட புதுமை விசித்திரமாய் உன் விழிகளிலே!
தெவிட்டில்லாத தேனாய் என் இதயத்தில் அவள் சிரிப்பு என்றென்றும் தித்திக்குமே!
Love Quotes For Her in Tamil
உன் உதட்டேர சிரிப்பு, என் மனதை மயக்கி, உன் அழகை ரசிக்க வைக்குது பெண்ணே!
வர்ணம் இல்லா ஓவியமாய், வார்த்தை இல்லா காவியமாய், தோரணை ஏதுமின்றி தோன்றும் என் அழகி அவள்!
Love Quotes For Her in Tamil
Love Quotes For Her in Tamil

என் பிம்பம் கூட எதிரியாகி, உன் வசம் ஆனதடி! என் கண்ணாடி திரையினிலும் பெண்ணே, உன் முகமடி?
பெளர்ணமி நிலவு அழகு என்றார்கள்! அவளின் சிரித்த முகத்தை விடவா என்றேன்!
மயங்காத மாந்தர் உண்டோ? மங்கை அவள் மையிட்ட கயல்விழி கண்டு!

அழகே உனது கண்களே கவிதை எழுதும் போது, உனது கைகளுக்கு என்ன வேலை?
என் உயிர் பிரியும் நேரத்தில் கூட உன் உயிர் தேடி வருவேன், ஒரு நொடி உன் மடியில் உயிர் வாழ!

ஆயிரம் பேரைக் கடந்து சென்ற பாதையில், என் மனதைக் கொள்ளை கொண்டது நீ மட்டும் தான்! இனி என் வாழ்வும் சாவும் உன்னோடு தான், உன்னோடு மட்டும் தான்!
உன்னை சந்தித்த போது சிந்திக்கவில்லை, இப்போது சிந்திக்கிறேன் எப்போது உன்னை சந்திப்பேன் என்று!

சிந்திக்கும் முன்னே விழுந்தேன்! சிந்தித்த பிறகு, என்னையே இழந்தேன்!
திருக்குறள்: நீரின்றி அமையாது உலகு. என் மனக்குரல் : நீயின்றி அமையாது என் உலகு.
நேரங்கள் யாவும் கானல் நீர் போல மறைக்கின்ற நேரத்தில் மறையாதது உன் முகம் மட்டுமே!
என் நெடுந்தூர பயணமொன்றில், நீர் குடுவையாய் நீ!
தேவதைகள் பூமியில் வாழ்வதில்லை என்று சொன்னதெல்லாம் பொய்யாகிவிட்டது! பிரம்மன் உன்னை படைத்த பின்பு!
அன்பு புரதம் நீ கொடுக்கையில், என் உயிர் விரதம் இருக்காதா?
விழுந்தால் மீள முடியாது என்று தெரிந்தும், உன் கன்னக்குழியில் விழ காத்திருக்கிறது என் காய்ந்த இதழ்கள்!
என் இதயத்தின் அதிகபட்ச தேடல், நீ பேசும் வார்த்தைகள் மட்டும் தான்!
ஒருமுறை மட்டும் நிரூபித்து தெடருவதல்ல காதல்! மாறிக் கொண்டே இருக்கும் மனித சூழ்நிலைகளில், மாறாமல், மறக்காமல், குறையாமல் இருப்பதைக் காட்டிக்கொள்ள வேண்டிய நிரந்தர அன்பே காதல்!
எவ்வளவு பெற்றாலும், பற்றாக்குறையாகவே உள்ளது! உனது அன்பும் காதலும்
உன் தேடல் என்றும் நானாக இருக்க வேண்டும் என்பது காதலில்லை! உன் தேடல் எதுவாக இருப்பினும், உன் வழித்துணையாய் என்றும் உடன் வருவேன் என்பதில் உள்ளது உண்மைக் காதல்!
உன்னுடன் வாழ்ந்தால், என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதல்ல என் காதல்! உன்னுடன் மட்டும் தான் என் வாழ்க்கை என்பதே என் காதல்!
ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழும் உலகிலே, ஓராயிரம் பேர் உன்மேல் காதல் கொண்டாலும், ஒத்தையாய் வாழும் நிலவே! காதலில்” நீ ஒற்றனா? இல்லை, தோல்வி உற்றவனா?
பெண்மையிடம் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு கோபத்திற்கு பின்னாலும், ஆண்மையின் மீதான அதீத அன்பே காதலாய் ஒளிந்திருக்கும்!

Leave a Comment