Distance Friendship Quotes in Tamil – நட்பின் தூரங்கள் கவிதை

Long Distance Friendship Quotes in Tamil: In this article you will be find long distance love friendship quotes tamil, friendship long distance kavithai.

தொலைதூர நட்பு கவிதைகள் – Long Distance Friendship Quotes in Tamil

Distance Friendship Quotes in Tamil

Distance Friendship Kavithai

நண்பர்கள், எங்கோ ஓர் முறை சந்தித்து கொண்டாலும், நெடுந்தூர பாதை எங்கும் ஒன்றுக்கொன்று துணையாய் பாரங்கள் பகிர்ந்து, தனிமைகள் தவிர்த்து, தடைகள் ஒன்றாய் கடந்து வாழ்கையின் பயணம் சிறக்க செய்கின்றன! தண்டவாளங்கள் – நல்ல நண்பர்கள்.

தூரத்து சொந்தம் என்பது போல தூரத்து நண்பன் என்று இல்லை! ஏனெனில், நண்பான பின் யாரும் தூரமில்லை…

நட்பு நினைவுகள் கவிதை

போடாதசண்டையில்லை! பேசாத நியாயமில்லை ! சிரிப்புக்கோ பஞ்சமில்லை! கூற முடியாத மன வலியும், புரிந்து கொள்ளும் என் மனக் கண்ணாடி அவன்! மகிழ்ச்சியாக இருப்பினும், துயரக்கடலாக இருப்பினும், மனம் தேடுவதற்கு முன் என்னருகில் இருப்பான் எந்தன் தோழன்!

பல நாட்களுக்கு ஒரு முறை பேசினாலும், நண்பனின் பட்டப்பெயர் தான் முதலில் ஞாபகத்தில் வருகிறது!

காற்று அடித்தால் கலைந்து போக- இது ஒன்றும் மேகம் அல்ல! காரணம் இல்லாமல் மறைந்து போக- இது ஒன்றும் கனவும் அல்ல! அருகில் சென்று பார்த்தால் காணாமல் போகும் கானல் நீர் அல்ல! நம் உயிர் கல்லறை செல்லும் வரை தொடரும் உண்மையான நட்பு!

நட்பு தூரம் கவிதை

நண்பர்களோடு இருக்கும் போது சுற்றத்தை மறந்து, சிரிப்பின் எல்லை வரைக்கும் சென்று, அளவில்லாத மகிழ்வான தருணங்களை கொடுத்த நண்பர்களை நினைத்து விழி ஓரம் கண்ணீர் கசிகிறது!

எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் இதழோர புன்னகை, நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!

மட்காத குப்பைகளை சேகரிக்க, ஆசை கொள்ளும் குப்பை தொட்டி நட்பு நினைவாக!

காலங்கள் கடந்தாலும், தூரங்கள் நீண்டாலும், எக்காலத்தும் அழியாதது, நட்பு மட்டுமே!

Friendship Distance Quotes Tamil Images

சேர்ந்த போதும் மறுக்காத, பிரிந்த போதும் மறக்காத, மகத்தான உறவுதான் நட்பு!

இலை மரத்தை மறந்து போகலாம்! அலை கடலை மறந்து போகலாம்! பூக்கள் தேனீக்களை மறந்து போகலாம்! ஏன் நீயே என்னை மறந்து போகலாம்! ஆனால் நானோ உன்னை மறப்பதில்லை என் அன்புத் தோழனே!

நட்பின் நினைவுகள் கவிதைகள்

 

Leave a Comment