Amma Kavithai in Tamil – அம்மா கவிதைகள்

Best Amma Kavithai in Tamil: In this article you will be find Mother Quotes in Tamil, Amma kavithai in Tamil sms, Kavithai about Amma in Tamil language.

Amma Quotes in Tamil – அம்மா பற்றிய கவிதை வரிகள்!

Related Searches
▶️ Amma Kavithai
▶️ Amma Tamil Kavithai
▶️ Tamil Kavithai Amma
▶️ அம்மா பாசம் கவிதைகள்
▶️ Tamil Amma Quotes

Amma Kavithai in Tamil

ஆழ்கடலில் நீந்தி எல்லையை காண்பது எளிது என்று தோன்றும் அம்மாவின் மனக்கடலில் நீந்தி அன்பின் எல்லையை தேடும் போது…
அம்மா உன்னை நினைக்கையில் எழுத தெரியவில்லை, உன்னை ரசிக்க மட்டுமே தெரிந்தது!

வெறும் எழுத்துக்கள் ஆகின என் கவிதைகள், ஒரு சொல்லின் முன்பு அம்மா!

அம்மா கவிதை வரிகள்

வாழ்க்கை எனும் மேடையில், நடிக்க தெரியாத ஒரு கதாபாத்திரம், அம்மா!

காதல் அன்பு அலை போன்றது, வந்து வந்து போகும்! ஆனால் தாய் அன்பு என்பது நிலையான கடல் போன்றது, எப்போதுமே தனித்து நிற்கும்.

Mother Quotes in Tamil

எனது குழந்தைகளுள் குழந்தையாய் விளையாடுகிறாள், குழந்தையாய் என்னை சுமந்தவள்!

தன் மகனின் அடிபட்ட நக கீறலை பார்த்து பதைப்பதைத்து கவனிக்க வந்தாள் தாய், தன் கை முறிந்து இரத்தம் கொட்டும் வேளையிலும்!

Kavithai About Mother

முகத்தை பார்த்தே கண்டு பிடித்து விடுவாள், தன் பிள்ளையின் வலிகளை, அம்மா எனும் Ultra Legend!

உடைந்து போகும் தன் பிள்ளைகளின் நம்பிக்கைக்கு ஊன்று கோலாக அமையும் அம்மாவின் அரவணைப்பு, பேரானந்தமே!

தாய்மை கவிதை

பிஞ்சு குழந்தையிலும் பஞ்சு போல் அரவணைத்தாய்! பருவம் அடைந்த போதும் பக்குவமாய் பாதுகாத்தாய்! உன் அன்புக்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவுமுண்டோ? இத்தனைக்கும் கைமாறாய் என் செய்வேன் என் அன்புத் தாயே!
தன்னுடைய கவலைகள், சோகங்கள் அனைத்தையும்மறந்து விடுகிறாள், தன் குழந்தையின் உதட்டில் சிரிப்பை காண்கையில்!

தனக்காக வாழாமல் எந்நாளும் தன் கணவருக்காக, தான் பெற்ற குழந்தைகளுக்கா வாழும் ஓர் உன்னத ஓவியம் “பெண்”

ஆயிரம் பேர் உன்னை குறை கூறினாலும், “உனக்கு என்னடா குறை” என சொல்லும் அன்னையின் அன்பிற்கு நிகரான சக்தி ஏதுமில்லை!

Kavithai About Amma in Tamil

சுமையாய் வந்த என்னை சுகமாய் ஏற்ற தாயே! உன்னை உருக்கி என்னை வடித்த சிற்பி நீயே! ஆயிரம் முத்தங்கள் இட்டு, என்னை அரங்கேற்றம் செய்தாய்! எனக்காக மட்டும் வாழும் என் அன்பு தாயே, இனி எத்தனை பிறவி எடுத்தாலும் என் அன்னை நீயே!

மறுபிறவி என்ற ஒன்று இருந்தால், அதில் காலணியாய் பிறக்க வேண்டும்! ஏன் தெரியுமா? என்னை சுமந்த அன்னையை சுமப்பதற்காக!

தனக்காக எதுவும் வேண்டாமல், தான் பெற்ற பிள்ளைகளின் நலனுக்காக மட்டுமே வேண்டும் ஓர் உன்னத ஓவியம், அம்மா!

வார்த்தையில் அடங்கா காவியம்; வர்ணத்தில் நிறையா ஓவியம் “அம்மா!”

தனக்கான நேரத்தையும் எனக்காக மறுத்தாள்! கற்களை பிரித்தாள், என் பற்களை காக்க…

👩‍👧‍👦Amma Quotes Tamil

ஓர் உயிர், மற்றொரு உயிரை சுமப்பது பார்ப்பவர்களுக்கு பாரமாக இருந்தாலும், சுமப்பவளுக்கோ அது வரம் தான்!

அன்னை அவளின். அன்பிற்கு முன்னால், அண்டமும் அணுத்துகளே!

ஒவ்வொரு உயிர்க்கும் என்றும் தோள் கொடுத்து உதவும் ஓர் உறவு, அம்மா!

Heart touching Amma Kavithai in Tamil

சுயநலமான உலகில், சுயநலமற்ற ஓர் உறவு – அம்மா!

படுக்கை சுருட்டும் விடியல் முதல், எரிவாயு அணைக்கும் இரவு வரை ஆண்டு அடக்கும் அதிகாரி அவள்! யாருக்கு என்ன அளவென்று உப்பு ஒரப்போடு ஒப்பந்தமிட்டவள்!

அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள்! தொலைந்து போனபின், தேடினாலும் கிடைக்காத அன்பின் பொக்கிஷம் “அம்மா”

நான் கண்ட முதல் கனவு, என் முதல் முத்தம், நீ அம்மா!

👩‍👧‍👦Amma Kavithai Tamil SMS

மகள்(ன்) தும்பியதால் மழையை எதிரியாக்கினாள்! நனைய விரும்பியதால், இதமான சூட்டில் பொழியக் கேட்டாள் – அம்மா
ஆயிரம் முறை காயப்படுத்தினாலும், பலமுறை முகம் சுளித்தாலும் பாசத்தை தவிர வேறு எதுவும் காட்டத் தெரியாத ஒரு உறவு, தாய் மட்டுமே!
ஆறாத காயங்களுக்கு ஆறுதல் தேடி அழைந்தாலும், இறுதியில் அடைக்கலம் கிடைப்பதென்னவோ, அன்னையின் மடியில்‌ தான்!

Amma Poem Tamil

மழையில் நனைந்த என்னை அணைத்து, முந்தானை எடுத்து, பாசத்தோடு தலைதுவட்டும் போது, மழையும் பொறாமை கொள்ளும் தாயே!

அம்மா கவிதை

அன்பின் மழைச் சாரல் அவளது உழைப்பின் வியர்வை, புன்னகை பொழியும் அவள் முகம் காதலின் மர்மம், அம்மா!

முக்காலத்துப் பாசக்காரி, நேசம் உள்ள கோபக்காரி, உயிர் எழுத்தின் முதல் எழுத்து, என் உயிர் உள்ள இதயத்தின் முதல் துடிப்பு, என் அம்மா!
Amma Quotes in Tamil

Tamil Amma Quote

கருவில் காலால் உதைப்பதை தாங்கிக் கொள்ளும் தாயால், தன் பிள்ளை சொல்லால் உதைப்பதை தாங்கிக்கொள்ள முடியாது!

ஊர் முழுவதும் பல நூறு கோயில்கள் இருந்தாலும், அம்மாவைப் போல் ஒரு சாமி இல்லை!
Quotes about Amma in Tamil
மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை, குழந்தையாகவே இருக்கிறான்! – ஹிட்லர்

Leave a Comment