Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Love Quotes For Her in Tamil - காதலிக்கு கவிதைகள்

Love Quotes for Girlfriend in Tamil - காதலி கவிதைகள்

காதலி Quotes

-
அவள் பெயரை உச்சரிக்கும் போது, அவள் பெயரில் உள்ள எல்லா இலக்கண சுவைகளையும் என் நா ருசிக்கிறது!
-
நீ என் கனவில் வருவாய் என்றால், பகலிலும் நான் தூங்குவேன்...
-
உறவடி நான் உனக்கு, உரிமையடி நீ எனக்கு, என் ஆசை அத்தை மகளே!
-
-

Girl Bestie Love Quotes Tamil

-
என்னவளின் முகம் பார்க்கும் போதெல்லாம், அந்த வெண்ணிலவு மேகத்திற்குள் ஒழிந்து விடுகிறது... நம்மை விட அழகி வந்துவிட்டால் என்று...
-
திரும்ப திரும்ப பார்கிறேன், கண்கள் தெரியாமல் அல்ல, உன் மீதான போதை தெளியாமல்!
-
இதழ்களால் பேசும் வார்த்தை ஜாலம் போதும், கண்களால் பேசும் மாய வித்தை வேண்டாம்! நான் கற்றுத்தேர்ந்த காதலன் அல்ல, கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்!
-
-
உன் தடம் பதித்த இடத்தை தொடவா சீறி பாய்கின்றன கடலைலைகள்!
-
என் வானில் எட்டாவது வண்ணம் - நீ, என்றுமே எட்டாத வண்ணம் நீ...
-
அவள் கண்ணக் குழியில் கவிழ்ந்து தான் - என் காதல் விதை முளைத்தது!
-
-
அவள் மெளனங்களை மொழிபெயர்த்தால், காவியம் பல படைத்திருப்பர். என் கவிதை பட்டியல் காணாமல் சென்றிருக்கும் - அவள் கயல் விழிகளில் - இருந்து!
-
தேவதைகள் பூமியில் வாழ்வதில்லை என்று சொன்னதெல்லாம் பொய்யாகிவிட்டது! பிரம்மன் உன்னை படைத்த பின்பு!
-
அவள் தலை கோதும் அழகைக் கண்டு, அடுத்த நொடியே தள்ளாடி போகிறேன் நான்!
-
-
மஞ்சள் பூசி அழகாக்கிக்கொள்ளும் காந்தைகளுக்கு மத்தியில் வெட்கத்தை பூசி அழகாகும் காரிகை அவள்!
-
இரவின் இசையில் நிலா என்னிடம் அழுது கொண்டே வந்தது! காரணம் கேட்டேன், உன் காதலியை மறைத்து வை என்னை விட, பிரகாசிக்கிறாள் என்றது!
-
சினம் கொண்ட ஆண்மகன் சுருண்டு போகிறான், வெட்கத்தில் அவள் கன்னம் சிவக்கும்போது...
-
-
கடலே காதல் கொண்டு கட்டி அணைத்துக் கொள்கிறது, என்னவளின் காலடி தடங்களை!
-
பெண்ணே! நீ நடக்கும் போதெல்லாம் சிரித்தது கொலுசுமணி... உன் காலில் சிறைப்பட்ட இன்பத்தில்!
-
எதற்கு அடிமையாகினாலும் மீண்டு விடலாம்... பெண்ணின் சிரிப்பிற்கு அடிமையாகும் வரை...
-
-
மேகங்கள் மண்ணில் இறங்கி ஊர்க்கோலம் செல்லகின்றதோ? என்று நினைக்க தோன்றுகிறது! என்னவள் வீதி உலா செல்கையில்!
-
உன் புன்னகையில் மயங்கி விட்டேன்! கன்னகுழியில் படுக்கவை! பாடாய்ப் படுத்தும் உன் நினைவுக்கு, ஆறுதலாய் இருக்கட்டும்!
-
பேசிக்கொள்ள வேண்டாம்! சிரித்து கொள்ள வேண்டாம்! சற்று நேரம் உன் இருப்பை கொடு போதும்!
-
-
தீக்கனலின் மேல் நின்றாலும், என் கரம் பிடித்து நீ உடன் இருக்க, அக்கனலும் வருந்துதடி, உன்போல் ஓர் துணையில்லை என்று - என் உயிர்த்தோழி!
-
என்னுள் எழும் ரசனை அத்தனைக்கும் ஆதி அவள் தான் என தெரிந்தும், அலட்டிக்கொள்ளமால் கேட்கிறாள், அது யாரென!
-
தொட்டால் பூ மலரும் என்கிறார்கள். தொட வேண்டிய அவசியம் கூட இல்லை! அன்பே, நீ பார்த்தாலே போதும், நான் மலர்ந்து விடுகிறேன்!
-
-
கண் பட்டுவிடக்கூடாது! இறைவனே வைத்த திருஷ்டி பொட்டோ உன் உதட்டோர சின்ன மச்சம்!
-
பூவே பொறாமை கொண்டதாம்! என்னை விட இவள் என்னவள் அழகாக இருக்கிறாளே என்று!
-
வான் மேகத்தை கிழித்து, எட்டிப் பார்க்கும் நிலவாய், பாதி மறைத்து நீ தந்த தரிசனத்தில் காதல் வழியும் ஓற்றைப் பார்வையில், வர்ணிக்க இயலாத வெட்கச் சிரிப்பில் சித்தம் கலங்கி சிலையாகி விட்டேனடி, நான்!
-
-
என் மொத்த நிறத்தையும், ஒரு புள்ளியில் கோர்த்து, அவள் உதட்டுக்கு கீழே திருஷ்டி பொட்டு வைத்து அழகு பார்த்ததோ இயற்கை... மச்சம்!
-
உன் அழகிய முகத்தை கை வைத்து மறைக்கிறாயே, கையின் அழகும் சேர்த்து இழுக்கிறதே! பார்க்கும் நேரம் பார்வையும் இழக்கிறதே!
-
சாகும் போதும் தீர்ந்திடாது உயிரே, உன்மீது கொண்ட காதல்!
-
-
முகத்திரையை, விலக்கி முன்னே வா, முத்தமிழும் தா!
-
அந்த காரிகையை நினைத்து வண்ணத் தூரிகையால் தீட்டிக் கொண்டிருக்கிறான், இவனின் ஆசைகளை... அது கானலே என தெரிந்தும், காதல் கொள்கிறேன் மீண்டும் மீண்டும் அவள் மீது...
-
கண் சிமிட்டா உன் ஒற்றை பார்வை போதும்! சொல்லாத சொல்லும், எழுதாத வரிகளும் அதனிடம் தோற்றுப் போகும்!
-
-
காயம் தருவதும் அவள்தான், அதை மாயம் செய்பவளும் அவள்தான்.
-
பூந்தென்றலும் தோற்றுப்போகும், உன் புன்னகையைப் பார்க்கையிலே! எவன் கர்வமும் கலைந்து போகும், உன் ஒற்றைப் பார்வையிலே!
-
மலர்கள் மலர்வதை மட்டும் கண்ட என் கண்களுக்கு, மலர் சிரிப்பதையும் காட்டியது, உன் கண்ணாடி பிம்பம்...
-
அளவுக்கதிகமான அலங்காரம், அரைகுறை ஆடை தவிர்த்து அம்சமான ஒப்பனையில், அழகான உடையின் நேர்த்தியில், பெண்! 'அவள்' உலக அழகியே!
-
என் மனதெங்கும் சிதறிக்கிடக்கிறது லட்சம் கவிதைகள்... அனைத்திலும் ஒரே கவிதை பொருளாய் அவள்...
-
சிலைகள் அசையும் என நான் கண்டதில்லை. அவள் நிழலினைக் காணும் வரை!
-
-
என் கவிதையால் உனக்கு மாலை அணிவிக்க எழுத்துகளை கோர்த்திருந்தேன்! தீர்ந்து போனதடி, என் தமிழின் எழுத்துகள்!
-
மாலையில் சூரியன் மறைய மறுப்பது, மாயக்காரி உன்னுடன் மாமாங்கம் வாழ்ந்திடவா?
-
அவள் நெற்றி முடிக்கீற்றும், முந்தானையும் ஒன்றுதான்! இரண்டும் இருக்க வேண்டிய இடத்தைவிட விழும்போது தான் அழகு!
-
-
உன் வெட்கத்தினை கண்டிட வந்தனவா இப்பூக்கள் உதிர்ந்து!
-
கருமேகத்தினுள் பிறை நிலவாய் உன்நெற்றியில் சுருளும் கூந்தலில் அகப்பட்டுக் கொண்டேனடி நான்!
-
உணரும் பொருளெல்லாம் நீயாகிப்போக, உடல் விட்டு உயிரும் நீராவி ஆகும்! உன் உள்ளங்கை கொண்டு எனை அடைத்தால் முத்தாவேன், உனை போல் அரசிக்கு மணியார சொத்தாவேன்!
-
-
என் இதயத்தில் நீ குடியிருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.. ஆனால் முன்பணமாக ஓரு முத்தமும் வாடகையாக ஓரு பார்வை நித்தமும் வீசி போ!
-
என் மனதை கொள்ளைக் கொள்ளும் உந்தன் அழகின் முன்பு, நான் தொலைந்து நிற்கின்றேன் இன்று!
-
அன்பே என்னவளே நீ அன்று மட்டும் நினைவிருக்கும் புது பாடல் அல்ல, என்றுமே மறவாதிருக்கும் பழைய பாடல்!
-
-
கண்ணோடு உறங்கா காதலும், கம்பளிக்கு அடங்காத குளிரும், காற்றோடு படர்ந்த மெளனமும் காத்திருக்கு, உன் துணை வேண்டி!
-
உன் புன்னகையை போல் போதையை, கண்டதில்லை இவ் உலகில்!
-
எனக்கு பிடித்தவளே, உனது வார்த்தையில், நான் அடிமையே! எனது பேச்சில் நீயே, உனது கனவில் நானே என் மூச்சில் நீயே! என் கைகளில் கவிதை, அதுவும் உன்னை நினைத்தே!
-
-
தெருவோர விளக்கெல்லாம் ஒளியை தொலைத்து அலையுதடி, உன் பின்னே!
-
வெண்பட்டு உடுத்தி வளம்வரும், என் வெண்புறாவே! உனக்கென எழுத ஒரு வெண்பா தேடி இறுதியிலேயே அறிந்தேன், அது உன் பெயரே என!
-
-
பொன் பொருள் பொருட்டல்ல, அவள் முன்னே அணிகலன் எதுவும் தேவையில்லை, அவளை அலங்கரிக்க அவளது சிறு புன்னகை ஒன்று போது, என்னை சிதைக்க!
-
கவிதை போட்டியில் எல்லாம் நீயே தலைப்பானால், வெற்றி எனக்கே நிச்சயம்!
-
ரதி நின் அரை அடி கூந்தலுக்கே, பாம்புக்கு ஆடும் மகுடியாய் மாறியது என் நிலை!
-
-
யாரும் அறியா அழகிய நிலவின் அறியாத பின்புறம் கருமையும் வெண்மையுமாய்... நான் கண்ட புதுமை விசித்திரமாய் உன் விழிகளிலே!
-
தெவிட்டில்லாத தேனாய் என் இதயத்தில் அவள் சிரிப்பு என்றென்றும் தித்திக்குமே!
-
உன் உதட்டேர சிரிப்பு, என் மனதை மயக்கி, உன் அழகை ரசிக்க வைக்குது பெண்ணே!
-
வர்ணம் இல்லா ஓவியமாய், வார்த்தை இல்லா காவியமாய், தோரணை ஏதுமின்றி தோன்றும் என் அழகி அவள்!
-
-
என் பிம்பம் கூட எதிரியாகி, உன் வசம் ஆனதடி! என் கண்ணாடி திரையினிலும் பெண்ணே, உன் முகமடி?
-
பெளர்ணமி நிலவு அழகு என்றார்கள்! அவளின் சிரித்த முகத்தை விடவா என்றேன்!
-
மயங்காத மாந்தர் உண்டோ? மங்கை அவள் மையிட்ட கயல்விழி கண்டு!
-
-
அழகே உனது கண்களே கவிதை எழுதும் போது, உனது கைகளுக்கு என்ன வேலை?

-

என் உயிர் பிரியும் நேரத்தில் கூட உன் உயிர் தேடி வருவேன், ஒரு நொடி உன் மடியில் உயிர் வாழ!

-
-

ஆயிரம் பேரைக் கடந்து சென்ற பாதையில், என் மனதைக் கொள்ளை கொண்டது நீ மட்டும் தான்! இனி என் வாழ்வும் சாவும் உன்னோடு தான், உன்னோடு மட்டும் தான்!

-

உன்னை சந்தித்த போது சிந்திக்கவில்லை, இப்போது சிந்திக்கிறேன் எப்போது உன்னை சந்திப்பேன் என்று!

-
-
சிந்திக்கும் முன்னே விழுந்தேன்! சிந்தித்த பிறகு, என்னையே இழந்தேன்!

-

திருக்குறள்: நீரின்றி அமையாது உலகு. என் மனக்குரல் : நீயின்றி அமையாது என் உலகு.

-

நேரங்கள் யாவும் கானல் நீர் போல மறைக்கின்ற நேரத்தில் மறையாதது உன் முகம் மட்டுமே!

-

என் நெடுந்தூர பயணமொன்றில், நீர் குடுவையாய் நீ!

-

தேவதைகள் பூமியில் வாழ்வதில்லை என்று சொன்னதெல்லாம் பொய்யாகிவிட்டது! பிரம்மன் உன்னை படைத்த பின்பு!

-

அன்பு புரதம் நீ கொடுக்கையில், என் உயிர் விரதம் இருக்காதா?

-

விழுந்தால் மீள முடியாது என்று தெரிந்தும், உன் கன்னக்குழியில் விழ காத்திருக்கிறது என் காய்ந்த இதழ்கள்!

-

என் இதயத்தின் அதிகபட்ச தேடல், நீ பேசும் வார்த்தைகள் மட்டும் தான்!

-

ஒருமுறை மட்டும் நிரூபித்து தெடருவதல்ல காதல்! மாறிக் கொண்டே இருக்கும் மனித சூழ்நிலைகளில், மாறாமல், மறக்காமல், குறையாமல் இருப்பதைக் காட்டிக்கொள்ள வேண்டிய நிரந்தர அன்பே காதல்!

-

எவ்வளவு பெற்றாலும், பற்றாக்குறையாகவே உள்ளது! உனது அன்பும் காதலும்

-

உன் தேடல் என்றும் நானாக இருக்க வேண்டும் என்பது காதலில்லை! உன் தேடல் எதுவாக இருப்பினும், உன் வழித்துணையாய் என்றும் உடன் வருவேன் என்பதில் உள்ளது உண்மைக் காதல்!

-

உன்னுடன் வாழ்ந்தால், என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதல்ல என் காதல்! உன்னுடன் மட்டும் தான் என் வாழ்க்கை என்பதே என் காதல்!

-

ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழும் உலகிலே, ஓராயிரம் பேர் உன்மேல் காதல் கொண்டாலும், ஒத்தையாய் வாழும் நிலவே! காதலில்" நீ ஒற்றனா? இல்லை, தோல்வி உற்றவனா?

-

பெண்மையிடம் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு கோபத்திற்கு பின்னாலும், ஆண்மையின் மீதான அதீத அன்பே காதலாய் ஒளிந்திருக்கும்!

-


Close